2008 லிருந்து 2009 க்கு...
---------------------------------
தமிழகத்தை பொறுத்தவரை, சென்ற புத்தாண்டு போல் அல்லாமல், இந்த புதிய 2009 உற்சாகமாய் / அமைதியாய் பிறந்திருப்பதற்க்காக ஒரு "ஓஹோ" போடலாம். நல்ல வேளையாக இந்த முறை தமிழகத்தில் எவரும் பெல்லி நடன மடிப்புகளில் வழுக்கி கொண்டு நீச்சல் குளத்தில் விழுந்து தொலைக்காமல் இருந்தாரகள்.
வருடா வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மதுப்புட்டிகள் திறக்க படுவதும், "கடவுளே கூடிய சீக்கிரமே அந்த பிகர்/ பையன் மடிய/மசிய வேண்டும்" வகையறா வேண்டுதல்களும் அதிகரித்து கொண்டு வருவதாக தெரிகிறது.
2008 களில்,
* 1380 கிலோ சந்திரயானை , வங்க கடலுக்கு காவு கொடுக்காமல், வெற்றிகரமாக நிலவை நோக்கி உந்த செய்துள்ளனர் நம்மவர்கள் (அப்டி போடு!)
*பெரும்பாலான இரயில்கள் குறித்த நேரத்திற்கு பயணிகளை பத்திரமாக ஏற்றி , இறக்கி இருக்கிறது.
*இந்திய வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைத்து பெரும்பாலானவர்களை கடனை ஆக்கி சந்தோஷ பட்டுகொன்டன.
*தமிழகத்தில் FM அலைவரிசைகள் அதிகரித்து இருக்கிறது.
* "எங்கப்பன் குதிருக்குள் இல்லை/இருக்கான்" என்று சொன்னாலும், அப்டியா என்று கொட்டாவி விடுவதை இந்திய உளவுத்துறை வழக்கமாக்கிகொண்டது , நாடு தொடர் குண்டு வெடிப்புகளால் சின்ன பின்னாமானது .
*ஒலிம்பிக்-ல் தங்கம் இந்தியா தங்கம் சுட்டு தூக்கிருக்கிறது.
*மகசூல் குறைந்து பல விவசாயிகள் தற்கொலை செய்துண்டுள்ளனர், உர தட்டுப்பாடும் நிலவியது.
*தொலைக்காட்சிகளில் மைக் பிடித்து "தெறமே" காட்டியவர்கள் எண்ணிக்கை அதிகமாகிருக்கிறது (தோல்வி அடைந்தால் கண்ணை கசக்கும் எண்ணிக்கையும் தான்)
*அத்தியாவசிய பொருட்கள் / காய்கறிகள்/ பழங்கள் விலை வழக்கமான விலை உயர்வை விட பன்மடங்கு அதிகரித்தது.
*தமிழகம் இருளில் தத்தளித்து குமுறியது , ஆற்காடு வீராசாமி "மின்வெட்டு துறை" அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். நிறைய்ய industry துண்டை காணோம் என்று தேடின.
*பணவீக்கம் பல் இளித்தது ; பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்க்/ சிதம்பரம் போன்றோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது .
*"இன்று பல்க்குகளில் பெட்ரோல்/டீசல் கிடைக்க வேண்டுமென " மக்கள் அதிகாலையில் சாமி கும்பிட ஆரம்பித்தனர்.
*"எனது முதல் மகன் IT யில் project leader ஆக இருக்கிறான், இரண்டாவது பைய்யன் JET Airways யில் வேலை செய்கிறான், மூணாவது பையன் ஊர்ல சின்னதா பொட்டி கடை வச்சுருக்கான் , இப்போ குடும்பமே மூணாவது பையன வச்சுதான் ஓடுது" என்று Forward mail களில் கிண்டல் செய்யும் அளவு lay off நடந்தது ., IT அதல பாதாளத்தை நோக்கி போனது. (எப்போ திரும்ப Boom ஆகும் அண்ணே!)
*அந்தா இந்தா என்று போக்கு காட்டிய ஆறாவது சம்பள கமிஷன் அமலாகி மத்திய அரசு ஊழியர்களின் அழுகையை சற்று குறைத்திருக்கிறது.
*நல்லதா? கெட்டதா? என்று பலரையும் குழப்பிக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தம் நிறை வேறியது , communist கள் அழுகாச்சி ஆட்டம் போட்டு அரசை ஆட்டம் காண வைத்தது .
*சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டு ராமர்/ஆதாம் பாலம் தப்பி பிழைத்திருக்கிறது , ஒரேடியாக தமிழகத்தின் NH கள் தோண்டப்பட்டு இளித்தது (என்னாச்சு "பட்டாசு" பாலு )
*TSS/SFS/SSS/UD, தீபாவளி ஸ்பெஷல் / அமாவாசை ஸ்பெஷல் என்று தமிழக போக்குவரத்து கழகங்கள் பொது ஜனத்தின் பாக்கெட்டை காலி செய்தது
*வெள்ளைக்கார பயபுள்ளைகளிடம் (புஷ்) இருந்து கருத்த பயபுள்ளைகளிடம் (ஒபமா) அமெரிக்க அதிகாரம் கை மாறி இருக்கிறது (Bank/IT யை நல்லா கவனீங்க அண்ணா, ஈராக் இடம் போய் புட் பால் ஆடின மாதிரி வேறேங்கேய்ம் ஆடாதீங்க )
*இலங்கையில் விடுதலை புலிகள் முன்னை விட பலம் குறைந்து விட்டிருந்தனர், ஈழ தமிழர்கள் ராட்சச பக்ஷேக்களால் சூறை ஆடப்பட்டனர்.
*கலைஞர் குடும்ப கண்றாவிகள் முகம் சுழிக்க வைத்தன (மாறன் - அழகிரி), அதிகபட்ச அறிக்கை விட்ட அரசியல் தலைவராக ஜெயலலிதா ஆனார், தேமுதிக சற்று வளர்ச்சி பெற்றது, பாமக நடுத்தெருவில் விடப்பட்டது, ராதிக சரத் சமத்துவ தலைவி/தலைவலி ஆனார், கார்த்திக் காணமல் போனார் , வழக்கம் போல் காங்கிரசார் நடு ரோட்டில் வேட்டியை கிழித்து கொண்டனர், ரஜினி அரசியலுக்கு வருவது மீண்டும் கடவுள் வசம் விடப்பட்டது.
* இடையூரப்பாக்கள் ஹோகனேக்கல் -ம சென்னை துறைமுகமும் (!) கர்நாடகாவை சேர்ந்தது என்றார்கள்.
ம்ம்ம் என்ன செய்ய 2008 களின் நல்லதே இவ்ளோதான் தேறுகிறது (!)
நானும் 2008-ம
------------------------
2008 க்கும் எனக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தமாய் இருந்தது , வேலையை பொறுத்தவரை எந்த ஏரியா களில் வேலை கொடுத்தாலும் செய்யும் தைரியம் / தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது (அட அசடே !)"ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு " , பொறுமை கடலினும் பெரிது" என்பது மண்டையில் அடித்து மீண்டும் உணர வைக்க பட்டிருக்கிறது. இரண்டு , மூன்று முறை கோவிலில் மொட்டை போட்டு இமய மலை போய் சாமியாராக தூண்டியிருக்கிறது.
இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்கள்
* மருது பாண்டியர்கள் வீர வரலாறு
*MOSSAD- The Israli's most secret service
*11 Key traits of IT manager
*கொஞ்சுண்டு "நாலாயிர திவ்ய ப்ரபந்தம்"
தமிழ் சினிமாவும் 2008-m-
--------------------------------------
corporate நிறுவனங்களின் கைகளில் அகப்பட்டு கொண்ட தமிழ் சினிமா குற்றுயிரும் கொலை உயிருமானது , வெற்றி படங்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை , பெரிதும எதிர் பார்த்த குசேலன், குருவி, ஏகன், வாரணம் ஆயிரம் தியேட்டரை விட்டு "ஜோராக" ஓடியது. தசாவதாரம் ந விளைவாக தமிழகத்தில் "மைதா" மாவு தட்டுப்பாடு வந்தது (பாட்டி கமல் சூப்பர்- ஏன்டா அப்பா உன் பேர் என்னடா அம்பி?), வடிவேலு அடிவாங்கி உடம்பு புண்ணான போதிலும் நம் வயிறு புன்னாகவில்லை , வருட ஆரம்பத்தில் இருந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் வருட இறுதியில் குறைந்து போனது . , ஜெகன் மோகினி படம் ரிலீஸ் ஆகாத துக்கத்தில் என் போன்ற ரசிக கண்மணிகள் சரியாக சாப்பிடாமல் உடல் மெலிந்தனர். சுல்தான் - தி வாரியார் கம்ப்யூட்டர்-இ விட்டு வெளியேற அடம் பிடித்தது
தமிழ் சினிமா வை எல்லோரும் பாடாய் படுத்த நான் மட்டும் சும்மா விட்டால் நாளை தமிழ் கூறும் நல்லுலகம் என்னை குறை கூறும் என்பதால் கீழ் வரும் உடான்சு,
சிறந்த நடிகர்: தனுஷ் (யாரடி நீ மோகினி)
சிறந்த நடிகை : சினேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த படம்: யாரடி நீ மோகினி
சிறந்த இசை அமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா (யாரடி நீ மோகினி)
சிறந்த இயக்குனர் : கரு.பழனியப்பன் (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த காமிரா மேன்: அரவிந்த் கிருஷ்ணா (குசேலன்- சொல்லம்மா செல்லம்மா பாடலுக்காக)
சிறந்த குத்து பாட்டு: நாக்க முக்கா (malevoice-விஜய் ஆண்டோனி)
சிறந்த நடன பாட்டு : டண்டனக்க டர்ன்னா (குருவி)
மனதை தொட்ட மெலடிகள் :
வெண் மேகம் பெண்ணாக (யாரடி நீ மோகினி)
கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்)
கண்டேன் கண்டேன் (பிரிவோம் சந்திப்போம்)
மருதாணி மருதாணி (சக்கரகட்டி)
சிறந்த பாடல் ஆசிரியர் : வாலி (சினிமா சினிமா...குசேலன்)
சிறந்த பாடல் வரிகள் : "ரோட்டு கடையில மனுஷன் ஜாலிய பாரு, சேட்டு கடையில மனைவி தாலிய பாரு" கண்ணதாசன் காரைக்குடி ...(அஞ்சாதே)
சிறந்த பாடகர்/ பாடகி: ?????? (யார்ன்னு சொல்ல)
2009 ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான , செழிப்பான , அமைதியான ஆண்டாக உருவாகட்டும் ....அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் ......
-மதன்.
Thursday, January 01, 2009
|
Labels:
புதிய 2009
|
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
5 comments:
Mr mattai,
2008 ல் மிக சோகமான நிகழ்வான எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்தை பற்றி நீ ஒண்ணுமே எழுதலைங்க்றது ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், சுஜாதா இருந்திருந்தா எழுதுற கற்றதும் பெற்றதும் ஆண்டு தொடக்க பதிப்பு படித்த சந்தோசம் உன் படைப்பை பார்த்து கிடைத்தது... அப்படியே அதிர்ந்து விட்டேன் நண்பா...மிக்க அருமை... நான் இந்த பதிப்பை மட்டும் குறைந்த பட்சம் 8 முறை படித்தேன் என்றால் நம்புவீர்களா?இப்படி ஒரு அற்புதமான திறமையை வைத்து கொண்டு நீ அடிக்கடி எழுதாதது தான் எனக்கு வருத்தம்.
அப்புறம் 2008 ல உன்னோட கல்யாணம் நடந்ததை பத்தி எழுதவே இல்லை. உன் மனைவி இதை வாசிக்கிறாங்களா?
அப்புறம் 2008 ல தொலை காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் ரொம்பவே மாறி விட்டமை பற்றி கருத்து தெரிவிபீங்கனு எதிர்பார்த்தேன்..ஏமாற்றம்..
//பணவீக்கம் பல் இளித்தது ; பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்க்/ சிதம்பரம் போன்றோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது .//
அதான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து, அவரை உள்துறை அமைச்சராக்கி இரண்டு துறைகளிலும் உள்ள ஓட்டைகளை மறைக்க / மறக்க வச்சிடோம் ல ( இதுதான்டா அரசியல் !!!)
//இடையூரப்பாக்கள் ஹோகனேக்கல் -ம சென்னை துறைமுகமும் .......//
நல்ல ஒப்பீடு .
//வேலையை பொறுத்தவரை எந்த ஏரியா களில் வேலை கொடுத்தாலும் செய்யும் தைரியம் / தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறது//
இந்த வருட Attendance ல ஏதோ சாதனை செய்து, நிறைய வாழ்த்து மடல் வாங்கினாயாமே , அதை சொல்லவே இல்லை ?
//இமய மலை போய் சாமியாராக தூண்டியிருக்கிறது. ..//
இது வருடா வருடம் தோன்றுவது தானே ... இனிமேல் தோணாமல் இருக்க, பாபா சாமி அருள் புரியட்டும்.
//சிறந்த நடிகை : சினேகா (பிரிவோம் சந்திப்போம்)//
அங்கிள், இன்னுமா சிநேகா ???
//2009 ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியான , செழிப்பான , அமைதியான ஆண்டாக உருவாகட்டும் ....//
ஆமாம், அனைவருக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள் ......:)
ஆ(ர்)த்தி! என்ன இப்பிடி சொல்லி பூட்டிக !, அவரு (சுஜாதா) எங்கே நான் எங்கே !
என் பிரிய சுஜாதா பற்றி சொல்ல யத்தனித்த தருணத்தில் பூர்ணம் விஸ்வநாதன் , ரகுவரன் , நம்பியார் எல்லாம் நினைவுக்கு வர பட்டியல் நீளும் என்பதால் விட்டு விட்டேன்.....
//உன் மனைவி இதை வாசிக்கிறாங்களா? //
link அனுப்பிருக்கேன் வாசிக்கிறால இல்லையா என்று இன்னும் தெரியலை, வீட்டில் சோறு ஒழுங்காக கிடைப்பதை பொறுத்து தான் எதையுமே சொல்ல முடியும்
நீங்க சொல்றது சரிதான் , என்னுடைய ரிமோட் அதிக நேரம் பாட்டு சேனல்களிலே நின்று கொண்டு அடம் பிடித்ததால் , வேறு நிகழ்ச்சி களை காண முடியவில்லை, மன்னிக்க ......நன்றி ஆர்த்தி !.
பாலா,
//இந்த வருட Attendance ல ஏதோ சாதனை செய்து, நிறைய வாழ்த்து மடல் வாங்கினாயாமே , அதை சொல்லவே இல்லை ?//
எனக்கு "டின்" கட்டியதாக தான் ஞாபகம் இருக்கிறது, வாழ்த்து மடல் எல்லாம் ஒன்னும் வாங்கலயே பாசு ...
//அங்கிள், இன்னுமா சிநேகா ???//
சந்தேகம் வேண்டாம், இன்னும் நாங்க எல்லாம் "யூத்" தாம்பா ....
-மதன்
//எனக்கு "டின்" கட்டியதாக தான் ஞாபகம் இருக்கிறது, வாழ்த்து மடல் எல்லாம் ஒன்னும் வாங்கலயே பாசு ... //
அதைத் தான் கொஞ்சம் நாகரீகமா சொன்னேன் :)
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.