போயின பத்தாண்டுகள் இன்றோடு!
தின்னவேலி ஜங்ஷன்
தேசிய நெடுஞ்சாலை 47
காலேஜ் ஸ்டாப் நிற்காது
கணபதி பஸ் சர்வீஸ்
இவ்ளோ தூரமா!
கவர்மெண்ட் காலேஜ் !!
சர்வோதயா, சுப்புடு மெஸ்
காலேஜ் பின்பக்க காம்பவுண்ட் சுவர்
இன்ஜினியர்ஸ் மேக் த வேர்ல்ட்
தமிழ் கிடையாது
மினி டிராஃட் அல்லது டி.ஸ்கொயர்
ரப்பர் செப்பல், மஞ்சள் பை
அண்டா காக்டெயில்
மாருதி பரோட்டா
பொன்னாங்குடி பை நைட்
ஸ்ட்ரைக் ஐ.டி.சி. செமஸ்டர்
அழுக்குமூட்டை தாமிரபரணி
பொருணை டூ காவேரி
சன்டே மசால்தோசை
அரசன் ஜானகிராம்
டைஸ்
டங்க்ஸ்டன் ஆக்காதே
சித்ராதேவி புக்ஸ்டால
எல்.ஹச் வழியாக மூன்றடைப்பு
'ஏ' விலுருந்து 'பி','சி'
வழியாக 'இ' வரை செல்லும்
அதிவேக ஜொள்ளு வண்டி
இடையில் 'டி' யில் நிற்காது
தேக்கடி, சுருளி
மொச்சக் கொட்ட பல்லழகி
பிறந்தநாள் அபிஷேகம்
பி.ஜி. சேர்மன் தேர்தல்
ஜூனியரை ஏன் அடிச்ச?
சும்மா டைம்பாஸ்
கேம்பஸ் இன்டர்வியூ
பசுமை நிறைந்த... பேச்சைக் குறைடா!
தின்னவேலி ஜங்ஷன்
ஜூன் 2 !!!
போயின பத்தாண்டுகள் இன்றோடு :)
நட்புடன்,
வி.பாலகுமார்
Thursday, June 02, 2011 | Labels: கல்லூரி, திருநெல்வேலி | 6 Comments
குறும்படம் - இணையத்திலிருந்து.
நன்றி : "Green Horns Entertainment and Pixelite Studios"
(வணிக நோக்கமில்லாத பகிர்வு மட்டுமே)
Monday, October 18, 2010 | Labels: இணையம், குறும்படம், பகிர்வு | 6 Comments
புதிய மனிதா பூமிக்கு வா !
A.R.ரகுமான் இசையில் அட்டகாசமா வந்திருக்கும் எந்திரன் பாடல்களில் நான் அதிகம் விரும்பும் வரிசை ,
1. புதிய மனிதா .....
2. கிளிமாஞ்சாரோ ....
3. அரிமா அரிமா ....
4. Chitti Dance Showcase
5. காதல் அணுக்கள்....
6. இரும்பில் ஓர் இதயம்....
7. பூம் பூம் ரோபோ டா....
Enjoy listening !!!
-மதன்
Tuesday, August 03, 2010 | Labels: எந்திரன் பாடல்கள் | 5 Comments
ஒரு தலைப்பும் வேண்டாம் !!!
ஒன்னும் இல்லை ங்கிற தலைப்பையே எவ்வளோ நாள் பார்க்குறது ,
எரிச்சல் வருது. அது எதையோ அடிக்கடி ஞபாக படுத்துற மாதிரி (?)
வேற ஒரு பிரம்மை .ஒரு ரசிகையோட ஏக்கத்தை என்னோட favourite
writers யாருமே பூர்த்தி பண்றதே இல்லை. ஏன்பா ,எவ்வளவு நாள் தான் wait பண்றது ?எரிச்சல் வருது. அது எதையோ அடிக்கடி ஞபாக படுத்துற மாதிரி (?)
வேற ஒரு பிரம்மை .ஒரு ரசிகையோட ஏக்கத்தை என்னோட favourite
உன் கதை ஹீரோ யாரு, ஆங் !! குரு ,அவனுக்கு தீடிர்னு accident ஆகி என் brain எடுத்து(?) என் நண்பனுக்கு வைச்சு இருங்கன்னு சொல்லிட்டு அந்த இடத்துலயே உயிரை விட்டுருவான்( senti climax) இது பிடிக்கலையா ,சரி விடு அடுத்ததை பார்போம் ,அடிகடி நண்பனை பார்க்க வரும்போது hospital receptionist கூட chemistry work out ஆகி ,இவங்க பாடுற duet பொறுக்க முடியாம ஜான் கோமால இருந்து எழுந்துர்ற மாதிரி ஒரு கிளைமாக்ஸ் கொடுக்கவா ? ஏதாவது
நான் அப்படி இல்லைப்பா. எனக்கு கடைசிவரை அந்த சீதைக்கு ராமனை பிடிக்குதா இல்ல ராவணன் பிடிக்குதான்னு சந்தேகம் . இன்னும் தீரலை.ராவணன் இந்த வயசாகி போன(?) சீதாவை கடத்தறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் ..
ரெண்டு நாள் முன்னாடி நடந்த விஷயம் ,என் பொண்ணோட உக்கார்ந்து விளம்பரம் பார்த்துட்டு இருந்தேன் .அதுக்கு முன்னாடி உங்க எல்லோருக்கு ஒரு விஷயம்சொல்லிக்க ஆசை படுறேன் ,நானும் என் பொண்ணும் நாடகம் பார்க்கிறோமோ இல்லையோ விளம்பரம் பார்க்க மறந்ததே இல்லை. ஆனா ,சில விளம்பரம் பார்க்கும்போது கொஞ்சம் எரிச்சலா தான் வரும் அதுல ஒன்னு, இந்த recent close up விளம்பரம் .அட கண்றாவி!! பல் தேய்க்கிரதே
முத்தம் கொடுக்கத்தான் அப்படீன்னு ஒரு புது கண்டு பிடிப்பு (!) ஐயோ ,இந்த சனியனை எல்லாம் வர்ஷு பார்கிறாலேன்னு அந்த விளம்பரம் வரும்போது சேனல் மாத்திருவேன் .ரெண்டு தடவைதான்பா அப்படி பண்ணினேன். அப்புறும் அந்த விளம்பரம் வரும்போது என் மகளே remote கைல கொடுத்து அம்மா மாத்துன்னு சொல்றாப்பா (கடவுளே) எனக்கு என்னவோ பாக்கியராஜ் படம் நினைவுக்கு வந்துருச்சு.
போன வாரம் ரெண்டு பொம்மைய வைச்சு என் பொண்ணு விளையாண்டுட்டு இருந்தா . hasilli fissili பாட்டு வேற பாடிட்டு இருந்தா ,இதுல என்ன comedynna உயரமா இருக்கிற பொம்மை பேரு அனுஷ்கவாம் ,குட்டையா இருக்கிற பொம்மை பேரு சூர்யாவாம் ,ஐயோ பாவம் சூர்யா !!! அவளுக்கு கூட உண்மை புரிஞ்சு போச்சு !
சரி , வேற எழுத ஒன்னும் இல்லைப்பா, எதாவது சீக்கிரம் எழுத வழிய பாருங்க .அப்புறும் மதன் ,தீபா எல்லாம் கொஞ்ச நாளாவே ஒன்னும் எழுதலைல ,அதுனால ,அவங்க கிட்ட சொல்லியும் பெரிசா மாற்றம் வராதுன்னு நினைக்கிறேன் (?) இல்லை என் நினைப்பு தப்புன்னா எதாவது எழுதுங்கப்பா !!!
bye friends
மஹா
சரி , வேற எழுத ஒன்னும் இல்லைப்பா, எதாவது சீக்கிரம் எழுத வழிய பாருங்க .அப்புறும் மதன் ,தீபா எல்லாம் கொஞ்ச நாளாவே ஒன்னும் எழுதலைல ,அதுனால ,அவங்க கிட்ட சொல்லியும் பெரிசா மாற்றம் வராதுன்னு நினைக்கிறேன் (?) இல்லை என் நினைப்பு தப்புன்னா எதாவது எழுதுங்கப்பா !!!
bye friends
Wednesday, July 21, 2010 | | 3 Comments
ஒன்னுமில்லை (அல்லது) நீங்கள் கேட்டவை!
மக்கள் எல்லாரும் நான் இங்க எழுதனும்னு ஒரே அடம், அட நான் என்னங்க வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்? இதை நினைச்சுட்டு கீபோர்டைத் தொட்டாலே தூக்கம் வந்துருது. சரி ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு மாதிரி எழுதனும்னு முடிவு செஞ்சிட்டேன். ஒரு மாதிரினா அந்த "ஒருமாதிரி" இல்ல, இது சாதா ஒரு மாதிரி. ஆனா பாருங்க முடிவா ஒன்னு முடிவு செஞ்ச பிறகு தான் என் பேச்சையே நான் கேட்க ஆரம்பிக்கிறேன். உள்ளுக்குள்ள ஆயிரத்து ரெண்டு யோசனை.
முதல்ல கதை எழுதலாம்னு ஆரம்பிச்சேன், வாயால வடை சுட்டு கதை விடுறதுன்னா, வண்டி வண்டியா சொல்லலாம். ஆனா டைப் அடிக்கனும்னு வரும் போது தான், இந்த எழுத்து தான்..... எங்கெங்கையோ இழுத்துட்டு போயிடுது. இப்போக் கூட பாருங்க, ஒரு வரி டைப் பண்ணறதுக்குள்ள, கதையோட கருவே மறந்து போயிடுச்சு, கதைக்கு அந்த கருமம் எல்லாம் எதுக்கு? சும்மா எதுனா எழுது, நாங்க வாசிக்கிறோம் என்று சொல்லும் பெருந்தன்மை உங்களுக்கு இருக்கலாம். ஆனா ஒரு படைப்புக்குண்டான தரம் இல்லாம அதை உருவாக்குவதில் ஒரு படைப்பாளியா, எனக்கு உடன்பாடில்லை. ஆகவே கதை "கட்".
சரி, உணர்ச்சி பூர்வமா அடி வயித்துல இருந்து பட்டாம்பூச்சி, தட்டான்பூச்சி, கரப்பான்பூச்சி எல்லாம் பறக்க, சிலிர்த்துப் போகுற மாதிரி ஒரு கவிதை எழுதலாம். கவிதை எழுதுறதுல உண்மைலயே ஒரு சூட்சமம் இருக்கு, வார்த்தையை மடக்கி மடக்கிப் போட்டு ஒரு மாதிரி கொஞ்சமா டைப் பண்ணி, நிறைய இருக்குற மாதிரி பில்டப் கொடுத்துக்கலாம். இடையிடையே மானே, தேனே, பொன்மானே ன்னு எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணா போதும், சூடா ஒரு மசால் தோசை... ச்சீ, கவிதை ரெடி.
இப்போ பாருங்க, "எங்க வீட்டு நாய்க்கு நாலு நாளா காய்ச்சல். ஜுரத்துல அது முனங்குறது உன் குரலைத் தான் ஞாபகப் படுத்துது". இது ஒரு செய்தி. இதையே கவிதையா மாத்தினா, அப்படியே சிலிரித்து போய்ருவீங்க.
"கொஞ்சும்
நாய்க்குட்டி,
உன்னை
நினைக்க வைக்கிறது
அன்பே !"
என்ன, சிலிர்ப்பு அரிப்பு எதும் வரலியா? சும்மா சங்கடப்படாம சொல்லுங்க. ஒரு படைப்பாளியா எனக்கு வந்த அவமானமா எல்லாம் எடுத்துக்க மாட்டேன். கவிதை என்ன சாதாரண விசயமா. எல்லாருக்கும் அதை புரிஞ்சுக்குற கொடுப்பினை வாய்க்கிறதில்லை தானே. என்ன செய்ய, நான் ஒரு மந்தகாச நிலையில் இருந்து படைக்கும் கவிதையை எல்லாராலும் புரிஞ்சுக்க முடியல! அதனால பாவம், எல்லாருக்கும் புரியுற மாதிரி வேற ஏதாவது எழுதலாம். என் கவிதைக் குழந்தையே, கொஞ்ச நேரம் குப்புறப்படுத்து தூங்கு.
ம்ம்ம், நாட்டு நடப்பு பத்தி சூடா ஏதாவது பத்தி எழுதட்டா? "ஒருத்தருக்கு தெரிஞ்சவரோட மனைவி இன்னொருத்தனோட ஓடிப் போய்ட்டானு தன் வீட்டுல குழந்தை குட்டியோட தங்க வச்சிருக்கார் ஒரு புண்ணியவான், வந்தவன் என்னடான்னா இவர் மனைவியைக் கூட்டிட்டு 'எஸ்' ஆகிட்டான். இப்போ புண்ணியவான் இவர் குழந்தைகளோடும், அவன் குழந்தைகளோடும் திண்டாடிட்டு இருக்கார்"
இது இன்னைக்கு படிச்ச செய்தி. இது மாதிரி விசயங்களோட உளவியல் பார்வை, களவியில் பார்வை, கலவியல் பார்வை இப்படி எல்லாம் கலந்துகட்டி, ஒரு மாதிரி ஆராய்ச்சி கட்டுரை எழுதி, "யார் மனைவி யாரோடு", "ஓடிப் போன லேடி, கூட்டிப் போன கேடி" இப்படி ஏதாவது தலைப்பு வச்சுட்டு கடைசியா "நச்" னு ஒரு கருத்து சொல்லி பதிவு போட்டா ஹிட்ஸ் பிச்சிக்கும்னு எனக்கும் தெரியும். ஆனா பாருங்க நாம எப்பவும் தனிமனித அந்தரங்கத்துக்குள்ள இறங்குவதில்லை. என்ன சொல்ல வர்றேன்னா, " நம்ம சுதந்திரம் அடுத்தவங்களோட மூக்கு நுனி வரை........." என்ன இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? சரி விடுங்க. மேலும் "அட, இந்த மாதிரி எல்லாம் கூட பண்ணலாம் போல!"ன்னு இன்னும் நாலு பேரு கிளம்பிற போறாங்க, அதனால இந்த மாதிரி விசயத்தை எல்லாம் துவைக்கிறதோ, காயப் போடுறதோ, இல்லை ஐயன் பண்ணி வைக்கிறதோ இல்லிங்க. வேற ஏதாவது எழுதுறேன்.
சரி, நம்ம பார்வையை விசாலப்படுத்தி நாட்டு நடப்பு பத்தி எழுதட்டா? "ஆயிரத்து என்னூறு கோடி, ஒன்னரை டன் தங்கம்" எப்படிய்யா இவ்வளவையும் வீட்டுக்குள்ளயே வச்சிருந்தீங்க. படிச்சது தான் டாகட்ர்னு பெரிய படிப்பெல்லாம், ஆனா ஒலக அறிவு இல்லையே சார். நாடு கிடக்குற கிடையில இதையெல்லாம் வீட்லயேவா வச்சிக்குவாங்க, நமக்காகத் தானே எந்த கணக்கையும் வெளியே சொல்லாத, நாதாரிகள் கொண்டாடும் நம்பகமான ஸ்விஸ் பேங்க் எல்லாம் இருக்கு, அங்க கொண்டு போய் வைக்க வேண்டியது தானே!
யாருப்பா அது, "அங்க கொண்டு போய் வச்சது போக மீதம் தான்டா இது" ன்னு சொல்றது. மன்னிச்சிக்கோங்க நமக்கு அரசியல் தெரியாது.
அப்போ நாட்டு நடப்பு வேணாம், இன்னும் பெரிய லெவல்ல உலகம், அணுஆயுதம், பிரபஞ்சம், அண்டம், கண்டம், காண்டாமிருகம் இப்படி போலாமா, என்ன வேணாமா ? வேணான்னா விடுங்க, வேற ஏதாவது எழுதுவோம். நமக்கென்ன மேட்டரா கிடைக்காது!. எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணன் இருக்கார். மேட்டருன்னு சொன்னா குதூகலம் ஆகிருவார். ஆனா நான் சொல்றது அந்த மேட்டர் இல்லை, இது வெறும் மேட்டர்.
கடந்த ஒரு மாசத்துக்கும் மேல கண்முழிச்சு, கஷ்ப்பட்டு ஒரு வழியா நிறைய போராட்டங்களுக்கும், அதைவிட நிறைய பேரங்களுக்கும் பிறகு "சென்னை" க்கு கப்பை வாங்கி கொடுத்தேன் தெரியுமா, அதைப் பத்தி எழுதுறேன். சச்சின் தான் ரொம்ப அடம் பிடிச்சாப்ல, இந்த வருடம் அவருக்குத் தான் வேணும்னு. நான் தான் சொன்னேன், ' இல்ல தம்பி நீ சின்ன பையன், இன்னும் வயசிருக்கு. ஒரு பத்து பதினஞ்சு வருசம் கழிச்சுக் கூட வாங்கிக்கலாம், தோணி தம்பி இதை நம்பி நிறைய விளம்பர காண்ட்ராக்ட் எடுத்துட்டாப்ல. அதனால அவருக்கே கொடுத்துறலாம் " னு . ஆனா பாருங்க முதல்ல நான் கங்குலி தம்பிக்குத் தான் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவரு பிடிவாதக்காரர்யா, "நீங்க சும்மா கொடுத்தாலும் வேணாம். மக்கள் எங்க மேல வச்சிருக்குற நம்பிக்கைய வீணடிக்க மாட்டோம், வெறுங்கையோட போறது தான் எங்களுக்கு பெருமை"னுட்டாரு. ஆனா அதைப் பத்தி எழுதுறதுலயும் ஒரு சிக்கல், நான் இன்னும் ஆறேமுக்கால் வருசத்துக்கு இதைப் பத்தி பேசவோ, எழுதவோ கூடாது. ஏன்னா ஏலம் எடுக்கும் போது அப்படித்தானே அக்ரிமெண்ட் போட்டுருக்கு.
சரி, இது எதுவும் வேணாம். படிக்கிறவங்களை சந்தோசப்படுத்துற மாதிரி காமெடியா ஏதாவது எழுதலாம்னு பார்த்தா, அந்த கண்றாவி ஒரு ஃப்லோவா வந்து தொலைய மாட்டுது. தப்பித் தவறி இது மாதிரி ஏதாவது முயற்சி செஞ்சா, வாசிச்சுட்டு உங்க பாட்டுக்கு சிவனேன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிட்டு போயிறீங்க, ஏதாவது சொல்லிட்டுப் போனாத் தானேய்யா, என்ன நினைக்கிறீங்கன்னு தெரியும். விடுங்க! இப்ப சொல்லுங்க, நான் எதைப் பத்தி எழுதட்டும் ?
நட்புடன்,
பாலகுமார்.
Wednesday, April 28, 2010 | Labels: ஒன்னுமில்லை | 12 Comments
மலரும் நினைவுகள்
எல்லோரும் எப்பிடி இருக்கீங்க ? உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆகிபோச்சுன்னு நினைக்கிறேன். எல்லோரும் நிம்மதியா இருக்கீங்களேன்னு எனக்குக் கூட ரொம்ப கஷ்டமா இருந்தது.!!! அதுதான் இந்த"Re-entry"
அப்புறம் ஆர்த்தி ,நீ கதைய முடிக்காம விட்டா, அப்புறம் நான் என் இஷ்டத்துக்கு எதாவது கிறுக்கி கதையை முடித்து வைப்பேன் . Be careful!!! ,
பாலா, எப்போவும் சுயநலமா சிந்திக்ககூடாது. உன் blog பத்தி மட்டும் யோசிக்காம நம்ம blog பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும் சாமி!!
அப்புறம் மதன் அது ஒரு தனி track .
ஏற்கனவே இருக்கிற stomach burning போதாதுன்னு இந்த தீபா வேற ,ஏன்டா எழுதனும்னு இருக்குது !!! பாவம்பா மஹா படுத்தாதீங்க ,ஆனாலும் உங்களை
அப்புறம் மதன் அது ஒரு தனி track .
ஏற்கனவே இருக்கிற stomach burning போதாதுன்னு இந்த தீபா வேற ,ஏன்டா எழுதனும்னு இருக்குது !!! பாவம்பா மஹா படுத்தாதீங்க ,ஆனாலும் உங்களை
விட்டா யாருகிட்ட போய் புலம்ப முடியும் என்னால, அதுனால நேரத்தை வேஸ்ட் பண்ணாம கதைக்கு வர்ரேன்.
போன monday evening , ஒரு ஏழு மணி இருக்கும் ,எங்க எதிர் வீட்டுல இருந்து ஒரே அழுகை சத்தம். என்னடான்னு போய்ப் பார்த்தா, எதிர் வீடு அம்மா அவங்க பையனைப் போட்டு அடி நொறுக்கிட்டு இருந்தாங்க. அந்த பையனோட தங்கை வர்ஷுவோட dearest friend .எனக்கு ஒரே பாவமா போச்சு. ஏங்க எதுக்கு அடிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, "வர்ஷு அம்மா (இப்போ எல்லோரும் இப்பிடித்தான் கூப்பிடுறாங்க ,உனக்கு வயசாயிருச்சு மஹா, ம்ம்ம் ) இவன் என்ன பண்ணினான் கேளுங்க , mark sheet கொடுத்து ஒரு வாரம் ஆச்சு இன்னும் என்கிட்டே காட்டவே இல்லை மறைச்சுட்டான் ",சொல்லிகிட்டே அடிக்க ஆரம்பிச்சுடாங்க .அந்த பையன் என்ன படிக்கிறான்னு கேளுங்க
அஞ்சாவது தான் .எனக்கு சிரிப்பா வந்தது ,ஐயோ! தப்பா நினைக்காதீங்க ,மத்தவங்க கஷ்டத்தை பார்த்து சிரிக்க நான் ஒன்னும் வில்லி கிடையாது. எனக்கு flash back ஓட ஆரம்பிச்சது .
நான் எங்க வீட்டுல ஒரே புள்ளைன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.ஆனா எங்க அம்மாக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை " செல்லம் ". ம்ம்ம்ம் ........ஸ்கூல் படிக்கும்போது ஏதோ கொஞ்சம் படிப்பேன் நான் (ப்ளீஸ் ,நம்புங்கப்பா ...) First rank தவிர எது எடுத்தாலும் வீட்டுல எனக்கு திருவிழா கொண்டாடுவாங்க !!. எனக்கு இதுல எல்லாம் அந்த வயசுலயே பெரிசா நம்பிக்கை கிடையாதுன்னு சொன்னாலும் ,என்ன பண்ண ? நாய் வேஷம் போட்டா குரைச்சே ஆகணும் !!! அதுனால வேற வழியே இல்லாம படிப்பேன்.
ஒரு வாட்டி என்ன ஆச்சுன்னா , fourth rank வந்துருச்சு.
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை ,அழுவாச்சியா வேற வந்தது . வீட்டுல சொன்னா ,செருப்பாலயே அடிப்பாங்கன்னு தெரியும் ,என்ன பண்றதுன்னு வேற தெரியலை. வீட்டுக்கு போகாம எங்கயாவது ஓடி போயிரலாமன்னு நினச்சா, ஐயோ அப்புறம் அப்பா தினமும் வாங்கிட்டு வர்ற பஜ்ஜி வடை எல்லாம் கிடைக்காதேன்னு வேற கவலை , எதையும் விட முடியலை , 'பாருங்க ஒரு புள்ளைக்கு எவ்வளவு கஷ்டம்னு !
கடைசியா உக்காந்து யோசிச்சதுல ஒரு முடிவுக்கு வந்தேன் ,பேசாம ,நாமளே sign பண்ணி progress report கொடுத்திர வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன் . ஐயோ என் வயசை சொல்ல மறந்துட்டேன் இல்லை , நான் அப்போ ரெண்டாவது படிச்சுட்டு இருந்தேன். ஏழு வயசு. நான் தமிழ் medium தான் படிச்சேன். அதுனால, மூணாவது வகுப்பில இருந்து தான் english ஆனா ,எங்க அப்பா பேர் எல்லாம் எழுத தெரிஞ்சு வைச்சு இருந்தேன் (பாருங்க ,அந்த வயசுலயே புள்ளைக்கு என்ன அறிவுன்னு !)
என்ன இருந்தாலும் ,பெரியவங்க கிட்ட கேட்டுதான் ஒரு முடிவு எடுக்கனும்னு , அஞ்சாவது படிக்கிற "அக்கா " கிட்ட போய் நிலமைய சொல்லி கையெழுத்து போடச் சொல்லிக் கேட்டேன் . அந்த லூஸ் என்னவோ எங்க ஆத்தா வையும், அய்யா வையும்னு சொல்லி போட்டுத் தர மாட்டேன்னு சொல்லிருச்சு . மஹா , ஏன் அடுத்தவங்க கிட்ட போய் கெஞ்சுற ,தன கையே தனக்கு உதவின்னு என் மனசாட்சி குரல் கொடுத்துச்சு .. (ஐயோ ,புள்ள என்னமா யோசிச்சு இருக்குது பார்த்தீங்களா? ) கடைசியா நானே கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். என் மேல உள்ள அதீத நம்பிக்கைல(?) டீச்சர் வாங்கி வைச்சுட்டாங்க .
இப்பிடியே ரெண்டு வாரம் ஓடுச்சு .வீட்டுல எப்போ கேட்டலும் rank card கொடுக்கலைன்னு ரீல் ஓட்டிட்டு இருந்தேன். இதுல ஒரு கஷ்டம் என்னன்னா ,எங்க அம்மா ,அப்பா தான் பிளஸ் டூ வரை என்னை school ல கொண்டு விடுவாங்க. ஏன்னா அப்போதான் நான் பைய அவங்க கிட்ட கொடுத்துட்டு ஜாலி யா சினிமா போஸ்டர் பார்த்துட்டு வரலாம் .(இதுக்கு தனியா அடி வாங்கி இருக்கேன் அது வேற கதை) ஆனா இந்த நிலைமைல அவங்க கூட வர்றது ரொம்ப கஷ்டம்.அதுனால எங்க அம்மாவை கிளாஸ் பக்கமே வர விடாம தடுத்துருவேன் ஆனாலும் ,விதி விளையாடிருச்சு.
நாலு மணிக்கு ஸ்கூல் விட்டவுடனே கேட் கிட்ட போய் நின்னுப்பேன். என் friends யாரும் சொல்லிறக் கூடாதுன்னு லஞ்சம் வேற ,(ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் பா !) ஒரு நாள் டீச்சர் கிட்ட பேசினதுல நேரம் ஆனது தெரியலை ,எங்க அம்மா ,என் கிளாஸ் டீச்சர் கிட்டயே rank card பத்தி விசாரிக்க, ம்ம்ம்............................. அப்புறம் என்ன நடந்து இருக்கும்னு நான் என்ன சொல்றது, எங்க வீட்டுல விளக்குமாறு,தயிர் மத்து எல்லாம் பிஞ்சு போற அளவு அடி வாங்கினேன் .ஆனா கொஞ்சம் கூட சளைக்காம, நாலாவது படிக்கும்போது இதே தப்பை பண்ணினேன்.அப்போவும் திருவிழா கொண்டாடினாங்க, இதுக்கு எல்லாம் கவலைப்பட்டா வாழ முடியுமா ,சொல்லுங்க ,மஹா வாழ்க்கைல அடிக்கடி திருவிழா வரும் ,.............
அப்பாவி புள்ள
மகா
Saturday, April 24, 2010 | Labels: மகா | 5 Comments
Subscribe to:
Posts (Atom)
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்


