மக்களே, என் முடிவு சரிதானா ?

எல்லாருக்கும் வணக்கம்ங்க !

          நான் பாட்டுக்கு சிவனேன்னு, நான் உண்டு என் வேலை உண்டுன்னு அமைதியா தாங்க இருந்தேன்.. சுமார், ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆர்குட் ல பராக்கு பார்த்துட்டு இருந்தப்ப, யாரோ ஒரு கதைய எங்கருந்தோ சுட்டுப்போட்டுருந்தாங்க. ரொம்பத்தெளிவா, சோர்ஸ் எதுன்னு போடாம விட்டுட்டாங்க. கதை வழக்கமா இருக்குற கதை மாதிரி இல்லாம, close to heart இருந்த மாதிரி ஒரு feeling. 

           அப்பறம், கொஞ்ச நாள் கழிச்சு மெயில் ல அதே கதை forward ஆகி வந்திருந்தது. ஆனா இப்போ சோர்ஸ் கொடுத்திருந்தாங்க. அந்த link அ பிடிச்சு  போய்ப்பார்த்தா...........
B... L... O... G.... blog ... ஆ !!! அட, வெளி உலகத்துக்குத் தெரியாம, இங்க ஒரு மாய உலகமே இயங்கிட்டு இருக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா, link அ பிடிச்சு பிடிச்சு.... இப்போ தினமும் தமிழ்மணம்(site for collection of tamil blogs)  முகத்துல முழிக்காடி அந்த நாள், முழுமை அடையாத மாதிரி ஒரு illusion.

          சரி, இது வரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் இல்ல ...... ஆனா நான் இப்போ எடுத்திருக்க  முடிவு... கொஞ்சம் அபாயகரமானது தான். ஆமா, உங்க guess சரி தான், நானும் பதிவர் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. முதல் நாளே ஒரு 1000 ஹிட்ஸ் வந்திருச்சுன்னா அத கணக்கெடுக்க முடியாம போயிறக்கூடாதேன்னு, பாருங்க Hits Counter லாம் போட்டு வச்சிருக்கேன் (என்ன ஒரு தன்னம்பிக்கை !!!)

          ஆனா, என்ன எழுத ? அட அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல ... ( உண்மைதாங்க, எழுத மேட்டரே இல்ல !).  ஆனாலும், 2 வருசமா யோசிச்சு, கடைசியா "ப்ளாக்" ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ல, அதுவே பெரிய விஷயம் தானே..  

வருசா வருஷம், நான் எழுத ஆரம்பிக்குற டைரிக்கு ஒரு ராசி உண்டு, ஜனவரி 15 ம் தேதி வரை டைரி யா இருக்கும், அப்பறம் பிப்ரவரி 15 ம் தேதில இருந்து, டைரியோட முதல் 15 பக்கங்கள் கிழிக்கப்பட்டு rough note ஆ மாறிடும்.  பார்க்கலாம், இந்த "ப்ளாக்" எப்படி மாறப் போகுதுன்னு !!!!

நன்றி மக்களே !!!
இந்த ப்ளாக் ஆரம்பிக்க initiate பண்ண ஆர்த்திக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் !

எச்சரிக்கை : "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !"

நட்புடன்,
பாலா.

3 comments:

Don said...

உங்களுடைய புதிய முயற்சிக்கு எனது நல்வாழ்த்துக்கள்

என்றும் நட்புடன்,

மயிலவன்

Aarthi DayaShankar said...

நல்ல தொடக்கம் பாலா ... Keep it up :)

Sivaranjani Lakshmikandan said...

உனக்கு எழுத சொல்லி தரணுமா என்ன பாலா ??
அருமையான தொடக்கம் , வாழ்த்துக்கள்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்