ஏக்கம்

ஒரு சாயுங்கால நேரம்
நான்கு நண்பர்கள்
மழை
நாலு கிளாஸ் டீ

மூன்று வெவ்வேறு நகரங்கள்
மூன்று பழைய நண்பர்கள்
மூன்று காபி கோப்பைகள்
ஒரு இன்டர்நெட் messenger

ஒரு இரவு நேரம்
அம்மாவும் நானும்
கொஞ்சம் தேங்காய் எண்ணெய்
ஒரு ஆயில் மசாஜ்
இல்லாத உறவினர்களையும் நண்பர்களையும் பற்றி கிசு கிசு

அடை மழை
சூடான சமோசா
பக்கத்து வீட்டு நண்பர்கள்
ஒரு பார்ட்டி

இரவு 1:15 மணி
ஹாஸ்டல் ரூம்
8 நண்பர்கள்
ஒரு சீட்டு கட்டு

காலை 5 மணி
2 காதலர்கள்
1 போன்
அழகான நிமிடங்கள்

ஒரு மதிய நேரம்
எதிர்பாராத விருந்தினர்கள்
திடீர் சமையல்
குதூகல கல்யாண பேச்சு

கொண்டாட்டங்களுக்கு ஏங்கி கொண்டிராதீர்கள். ஒவ்வொரு நாளையும் கொண்டாட முயலுங்கள்.

நட்புடன்
ஆர்த்தி

1 comments:

சோலைஅழகுபுரம் said...

nice try in tamil... keep going ...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்