Once Again Maha

உங்க எல்லோரையும் திரும்ப சந்திக்கிறதில ரொம்ப சந்தோசம்.(உங்களுக்கு கஷ்டமாத்தான் இருக்கும் ,பொறுத்துக்கோங்க ,ப்ளீஸ் ) ஆர்த்தி,பாலா எல்லோரும வேற ரொம்ப சுவரஸ்யமா எழுதுறதை பார்த்து என் மனசாட்சியே ,ஏண்டி நீயெல்லாம் எழுதுறேன்னு கேக்க ஆரம்பிச்சுருச்சு .பாலா க்குள்ள ஒரு கவிஞன் இருக்கன்ன்னு காலேஜ் நாட்களிலே அரசல் புரசலா தெரியும்.ஆனா ஆர்த்தி,எப்பிடி இருந்த நீ இப்பிடி ஆய்ட்ட?எனக்கு கொஞ்ச நாளாவே ஒரே stomach burningthaan ஆமிர் கான் மாதிரி ஏதாவது controversial blog எழுதினாதான் நம்ம பேரும் popular ஆகும்னு நினைகிறேன்.பயபடாதீங்க இந்த போஸ்ட்ல ஒன்னும் இல்லை

நான் மீதி கதைய சொல்றேன்.நாங்க டெல்லி வந்து சேர்ந்தோம்.ஷங்கரோட friend சந்தோஷ் ஸ்டேஷன் வந்து இருந்தாரு .பிரயான களைப்பு இருந்ததால் நான் புதுசு புதுசா யோசிக்காம அவங்க வீடு பொய் சேர்ந்தோம்.ஷங்கர்க்கும் நான் வாய் திறக்கததில் சந்தோசம்.சந்தோஷ் வீட்டுல விருந்தோம்பல் ரொம்ப நல்ல இருந்தது.

சொல்ல மறந்துட்டேனே ,நான் சந்தோஷ் வீட்டுக்கு போற வழிஎல்லாம் டெல்லியை ஆன்னு பார்த்துட்டு வந்தேன் . என்னங்க டெல்லில பொண்ணுங்க எல்லோரும் அழகா இருக்காங்க .எனக்கு கரீனா கபூர் ரொம்ப பிடிக்குங்க. எப்பிடித்தான் இவ்வளவு அழகா இருக்காளோ ன்னு பலநாள் யோசிச்சு இருக்கேன்.அங்க பார்க்கும்போத்துதான் தெரியுது சாதரண பொண்ணுங்களே பெபோவை (கரீனவோட செல்ல பேர் ) விட அழகா இருக்காங்க .நான் திறந்த வாயை மூடவே இல்லை. ஷங்கர்க்கு புரிஞ்சு போச்சு . he couldnt control laughing.

சரி,கதை இப்பிடி இருக்க ,சந்தோஷ் வீட்டுல சந்தோஷ் த்விர எல்லோரும் வெளிய கிளம்பிட்டாங்க.சந்தோஷ்,ஷங்கர் ,நான் மூணு பேர்தான் வீட்டுல. ரொம்ப நாள் கழிச்சு பார்த்தால friends ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தாங்க. they were in another room.i am in hall watching t.v. . அப்போ அழகா ஒரு பொண்ணு scenekulla entry கொடுத்தது .நான் உடனே என் ஹிந்தி புலமையை (நான் ஹிந்தி பண்டிட் தெரியுமா ) காட்டுறதுக்கு இதுதான் நல்ல சந்த்ரப்பம்னு நினச்சு,வாங்க வாங்க ன்னு கூப்பிட்டு சோபால உக்கார வைச்சேன்.அது என்னவோ சொல்லுச்சு. ஆனா எனக்கு சரியா புரியலை. ஆனா அதை வெளியே காட்டிக்காம , தண்ணி குடீங்க ன்னு சொல்லி தண்ணி கொடுத்தேன் .அது சோபால உக்காராம எந்திச்சு எந்திச்சு நின்னுது. எனக்கு எதுவும் புரியலை. ஏதேச்சையா அங்க வந்த சந்தோஷ் , மனீஷா ஏன் இவ்வளவு லேட் ? சீக்கிரம் பொய் வீடுவேலையா பாருன்னு சொன்னவுடனேதான் என் மரமண்டைக்கு உரைச்சது,நான் பேசிகிட்டு இருந்தது அவங்க வீட்டு வேலைக்காரிகிட்ட .once again my image damage ஆகிருச்சு .its all in the gamepaa!!!

அப்புறும் அன்னைக்கு நைட் கிளம்பி முக்தேஸ்வர் ன்னு ஒரு hill station வந்து சேர்ந்தோம். it is in uttaranchal. very very nice place. ரொம்ப நல்ல climate. santhosh is working in TERI(the environmental research institute) the guest house of TERI is in muktaeswar. அதுனால நாங்க தங்கறதுக்கு நல்ல இடம் கிடைச்சது. and we got a good cook too. யாரவது சமைச்சு போட்டு நம்ம சாபிடுர சுசமே தனி அதை நான் நல்ல enjoy பண்ணினேன். அந்த cook பேரு தாரா தத் .ரொம்ப நல்ல மனுஷன் . இருக்காதா பின்ன நான் பேசின ஹிந்தியை புரிஞ்சுகிட்டு பதில் சொன்னாரே. ஷங்கர்க்கு ரெண்டு நாள் என் தொல்லை இல்லாம நிம்மதி.அப்புறும் ஒரு நாள் ட்ரெக்கிங் போனோம் .போனோம் இல்ல போனாங்க .நான் பாதிலயே என்னால முடியாதுன்னு ஜகா வாங்கிட்டேன், shankar and santhosh completed trecking . நான் வழக்கம்போல அங்க என்கிட்டே மாட்டின ஒரு வியாபாரிட்ட என் ஹிந்தி புலமையா காட்டிட்டு இருந்தேன். அவர் பாவம் ,த்ன் விதியை நொந்துகிட்டே இருந்து இருப்பாருன்னு நினைகிறேன்.

இதை மாதிரி நான் சாப்டுறது ,தூங்கரதுன்னு இரண்டு நாள் சந்தோஷமா இருந்தேன்.வழக்கம் போல ஷங்கர் கைல காமேரவோட சுத்திகிட்டு இருந்தாப்ல . மறுநாள் நைனிதால் கிளம்பலாம்னு முடிவு பண்ணி டாக்ஸி வர சொன்னோம். நைனிதால் வது சேர்ந்தோம். அப்போதான் எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம் முழிச்சு பார்த்துச்சு.எனக்கு நல்ல பசி வேற.நீங்களே சொலுங்க என்னதான் சப்பாத்தியை ருசியா சாபிட்டலும் நம்ம தோசைக்கு ஈடாகுமா ?அந்த நேரம் பார்த்து நாங்க ஒரு ஹோட்டல் பக்கம் வந்து சேர்ந்தோம் .அவன் ஹாட் சவுத் இந்தியன் தோசைன்னு வேற போர்டு வைச்சு இருந்தான் .நான் தோசை சாப்பிடதான் ஆச்சுன்னு சொல்ல ஷங்கர் வேற வழியே இல்லாம ஒரு தோசை வாங்கி கொடுத்தாங்க . he ordered for chappathi. சத்தியமா சொல்றேங்க ,vaaநான் அப்படி ஒரு தோசையா சாப்பிட்டது இல்லை. கடவுளே ,என்ன ஒரு கொடுமை.வாய்க்குள்ள வைக்க முடியலை.நான் ஒன்னும் பேசை.பேசாம சப்பாத்திய சாப்பிடேன்.கடசில பில் வந்துச்சு பாருங்க ,ஒரு தோசை95 ரூபா .அந்த மாதிரி மோசமா தோசை விடலாம்னு கூட எனக்கு தெரியாதுங்க.

அப்புறம் நைநிதால இருந்து கிளம்பி டெல்லி வந்து சேர்ந்தோம்.மீதி பயணம் அடுத்த போஸ்ட்ல .வரட்டா?

l

4 comments:

cynthia said...

maha ennaku vilunthu vilunthu sirichu kannula thanniyae vanthuduchu....pavam un sankar...

cynthia said...

maha ennaku vilunthu vilunthu sirichu kannla thanniyae vanthuduchu... niraya eluthu maha superaa irruku..
cynthia

பாலகுமார் said...

//அப்போதான் எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கம் முழிச்சு பார்த்துச்சு.எனக்கு நல்ல பசி வேற.நீங்களே சொலுங்க என்னதான் சப்பாத்தியை ருசியா சாபிட்டலும் நம்ம தோசைக்கு ஈடாகுமா ?//

தோசை சாப்பிட்ட சிங்கம் ஆ ???? :)

isakki said...

comment எழுதறது மூலமா blog visit பண்ணின சிந்தியாக்கு ரொம்ப நன்றி .
உன் விமர்சனத்துக்கும் ரொம்ப நன்றி.

பாலா,என்கூட படிச்ச சிங்கங்க எல்லாம் பரோட்டா ஆம்லேட்ன்னு சாப்பிடும்போது இந்த சிங்கம் தோசை சாப்பிட கூடாதா ?

நான் எழுதினதையும் மதிச்சு விமர்சனம் பண்ற எல்லோருக்கும் நன்றி !!!

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்