சென்ற முறை நடந்த நிகழ்வு மீண்டும் நடக்காமல் இருக்க அரசு அலுவலர்களும் மற்றும் மருத்துவர்களும் இந்த முறை சற்று உஷாராக போலியோ சொட்டு மருந்து தரம் குறித்து ஆய்வு செய்த பின்னரே நேற்றைய போலியோ சொட்டு மருந்து நாள் ஆரம்பமாகிருக்கும் என்று நினைத்திருந்தேன்..... திடீரென வந்தது அந்த செய்தி ..."Erode -il போலியோ சொட்டு மருந்து குடுத்த குழந்தை இறந்து போனதென்று ....பேருந்து பயணத்தில் இருந்த நான் "போச்சா இந்த தடவையும் , இவனுங்கள ......" என்று தலையில் கை வைத்துகொண்டேன் .....இந்த செய்தி வெறும் வதந்தி என்று பிறகு தெரிந்து நிம்மதி ஆனேன் (இறந்து போன குழந்தைக்கு Brain Tumor ஆபரேஷன் செய்ய பட்டிருந்ததால் ஏதோ குளறுபடி ஆகி விட்டது போல , மற்ற குழந்தைகள் okay).... இதற்கிடையில் நேற்று மாலை தமிழகம் முழுவதும் இந்த செய்தி (வதந்தி) காட்டு தீ போல பரவியது....முக்கியமாக கோவை திருப்பூர் , சேலம் ஈரோடு பகுதிகளில் வெகு வேகமாய்......நம்ம ஊர் மீடியாக்கள் முடிந்த அளவு ஊதி தள்ளி இருப்பார்கள் போலும்...தமிழகத்தின் இன்ன பிற பகுதிகளுக்கும் விஷயம் எட்ட.....அவரவர்கள் பிள்ளை குட்டிகளை தூக்கிக்கொண்டு மருத்துவ மனைகளுக்கு ஓடிய பரிதாப நிலைகள் நடந்தது....மதுரை ஆரப்பாளையம்-ல் நானிருந்த பேருந்தில் ஏறிய நபரிடம் விசாரித்த போது"அங்கிட்டு செக்கரூனி பூராம் Traffic jam ahipochu , ஆஸ்பத்திரல அம்புட்டு பெரும் புள்ள குட்டிகளா தூக்கிட்டு தான் நிக்கிராயிங்க ..."
மேலும் விசாரித்த போது
"இந்த இடைத்தேர்தல் (திருமங்கலம்) வருதுலானே , அவிங்க ADMK காரிங்க , தெரு தெருவா போயி இந்த அப்டியே பரப்பி உட்டாநிங்க......இப்போ போலீஸ் பார்தீங்கன்னா MIC போட்டு அன்னௌன்சே பன்றைங்க அதெல்லாம் வதந்தின்னு...."
என்றார்.அடச்சே......எதுலதான் அரசியல் பண்றதுன்னு ஒரு 'இது' வேண்டாம்......
-மதன்

2 comments:

Aarthi DayaShankar said...

ரொம்ப கரெக்டா சொன்ன மதன்...என் குழந்தைக்கு சொட்டு மருந்து கொடுத்துட்டு வந்தப்புறம் தான் நியூஸ் கேட்டேன். அன்னிக்கெல்லாம் பயமாவே இருந்துச்சு..என்னிக்கு தான் இவங்க எல்லாம் திருந்துவாங்களோ!!!!!!!!

உன் படைப்பை ரொம்ப நாள் எதிர்பார்த்து காத்திருந்தோம் எல்லாரும்..மிக்க நன்றி :)

பாலகுமார் said...

நானும் "ஜெயா நியூஸ்" கேட்டு நொந்து போயிட்டேன்.
கேவலாமா இருந்தது அவுங்க potray பண்ண விதம். மும்பை அட்டாக் போது கூட, இதே மாதிரி negative mode ல தான் எல்லா மீடியா வும் focus பண்ணாங்க. மீடியா க்கு "social ethics" வரணும்னா என்ன பண்ணனும் னு தான் தெரியல ..

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்