தலைப்பு வேண்டாமே ,....... ப்ளீஸ் !!!

எனக்கு இப்போ எல்லாம் விபரீதமா ஆசைகள் வருகிறது அப்படிதான் ஒருநாள் சரவணா பவன்ல சாப்பிட்டு விட்டு வரும்போது வெயிட் மிஷன் பார்த்தவுடனே வெயிட் பார்க்கணும் போல ஒரு ஆசை .பார்க்கவும் பயம்தான். ஒருவேளை மிஷன் ஓவர் வெயிட் அப்படீன்னு எதாவது சொன்னா ? ,என்ன பண்றது?.ஆனாலும் தைரியமா செயலில் இறங்கினேன் .ஷங்கர் வேண்டாம் மஹா,விஷ பரீட்சை வேணாம்னு சொல்லியும் நான் கேக்கலை . காசை உள்ள போட்டுட்டு ,பார்த்தா? ,எவ்வளவு வெயிட் இருக்கும்னு நினைகிறீங்க ? just 50 kilo !!! நான் போட்ட சத்தத்துல சரவணா பவனே ஆடி போச்சு.ஷங்கர் ,இதை இன்னொரு ரவுண்டு சாப்பிட்டு கொண்டாடலாம்னு சொல்லி cashewnut pulav,pista milk shake ஆர்டர் பண்ணியாச்சு . மில்க் ஷேக் வரும்னு எதிர்பார்த்துட்டு இருக்கும்போது, வித்யாசமா எங்க வீட்டு calling bell சத்தம் விடாம கேட்டுது . அட ராமா!!! எல்லாம் கனவா ? மணி பார்த்தா காலைல எட்டு மணி ,விடிகாலம் கண்ட கனவுதான் பலிக்கும்பாங்க ?சண்டே எட்டு மணிதானே விடிகாலம் எல்லோருக்கும் ,சொல்லுங்கபா?

படிக்கிற காலத்துல எங்க அம்மா சாப்பிடு செல்லம் ,சாபிடு செல்லம் சொல்லி தாங்குவாங்க .இப்போ ஏண்டி எப்போவும் சாப்டுகிட்டே இருக்கேன்னு கேக்குற அளவுக்கு ஆகி போச்சு நிலைமை. இது எல்லாத்துக்கும் ஒரு flash back இருக்கு.ஏன்பா நம்ம கிளாஸ் ஆர்த்தி எல்லாம் ஒரு பையனுக்கு அம்மான்னு சொல்ல முடியாத அளவுக்கு சின்ன பொண்ணு மாதிரி ஒல்லியா இருக்கா .ஆனா மஹா உனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?பிள்ளை உண்டான முதல் மூணு மாசத்துக்கு ஒன்னும் சாப்பிட பிடிக்கலை. ஐயோ பாவம் ,நம்ம நிலைமை ஏன் இப்பிடி ஆகி போச்சுன்னு நானே கவலை படர அளவுக்கு என்னால சரவணா பவன் சாப்பாட்டை கூட சாப்பிட முடியாம வெறுப்பு வந்துருச்சு. வெயிட் ரெண்டு கிலோ குறைந்து போச்சு. டாக்டர் அம்மா , நல்லா சாப்பிட சொல்லி அட்வைஸ் வேற? அப்புறும் எப்படி இப்படின்னு நீங்க கேக்கிறது காதில விழுது.! wait!! wait lemme finish the storypa!!!

அப்புறும் மூணாவது மாசம் முடிந்தவுடனே ,கொஞ்சம் கொஞ்சமா நிலைமை மாற ஆரம்பிச்சுது , கொஞ்சம்னு சொன்னா தப்பு, ,பெரிய தப்பு. என்னால கட்டு படுத்தவே முடியாம போச்சுப்பா !!! so sad !!! நமக்கு பசிக்கிற நோய் வந்து இருக்குமோன்னு நினைக்கிற அளவுக்கு பசி !!!! அப்படீ என்ன பெரிய பசின்னு கேக்கறீங்களா ? என் ஒரு நாள் மெனு சொல்றேன் கேளுங்க !
காலைல படுக்கைய விட்டு எழுந்தவுடனே ,பிரட் ஜாம் சாபிடுவேன் .ஏன்னா நான் காபி போட தெம்பு வேண்டாமா? (பல் தேச்ச பின்னாடிதான் ,தப்பா நினைக்க வேண்டாம்,நான் goog girl ) 4 பிரட் சாப்பிடுவேன் .அப்புறும் ஸ்ட்ராங் காபி . இது எல்லா விஷயமும் ஆறு அறைக்குள் ( 6.30) முடிஞ்சுரும் .அப்புறும் சமைக்க ஆரம்பிப்பேன் ,ஷங்கர் ஆபீஸ் போனும்ல ,அதை விட முக்கியமா நான் சாபிடனுமே ? so at any cost i have to cook
எல்லாம் ஒரு மணி நேரத்துல முடிஞ்சுரும்.மணி எட்டு ஆகிரும் .ஐயோ ஒரு மணி நேரமா நம்ம சாப்பிடலையா ,அப்படீன்னு கவலையிலே கூட ரெண்டு இட்லி சேர்த்து சாபிடுவேன் .மொத்தம் எவ்வளவு இட்லின்னு சொன்னா கண்ணு போட்டுருவீங்க !!

அப்புறும் பத்து மணிக்கு ஜூஸ் .சீனி போடாம குடிமான்னு டாக்டர் சொன்னதை காத்துல விட்டுட்டு முடிஞ்ச அளவு சீனி போட்டு குடிப்பேன்.அப்புறும் பதினோரு மணிக்கு அடையாறு ஆனந்த பாவன் ,கிருஷ்ணா sweets இப்படி எல்லா கடைலயும் வாங்கின எல்லா விதமான தின்பண்டம் .வாய் வலிக்குற வரை சாபிடுவேன். அப்புறும் என்ன மந்திரமோ தெரியலைங்க ,பன்னிரெண்டு மணிக்கு பசி வந்துரும் .நான் என்னப்பா பண்ணட்டும் ? so full meals. இவ்வளவும் சாப்பிட்ட அடுத்து என்ன ,நல்லா தூக்கம்தான் வரும். பிள்ளைதாச்சி பொண்ணு ,தூங்கும் பொது தொல்லை பண்ண கூடாதுன்னு யாரும் calling bell கூட அடிக்க யோசிப்பாங்க .சோ அஞ்சு மணி வரை தூங்குவேன், '

ஐயோ இவ்வளவு நேரம் ஒன்னுமே சாப்பிடலையேன்னு கவலைல ,காபி குடிக்கிறதுக்கு முன்னாடி snacks சாபிட்டுருவேன். அப்புறும் காபி.திடீர்னு சமோசா சாபிடனும்போல தோணும்,(ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னு தோணும்.) உடனே கொஞ்சம் கூட கஷ்ட படாம பக்கத்துக்கு கடைல போய் வாங்கிட்டு வந்து சாபிடுவேன்.ஒன்னு ரெண்டு எல்லாம் இல்லை.ஒரு நாலு அஞ்சு.அப்புறும் ஷங்கர் வந்தவுடனே அடுத்த ரவுண்டு .நைட் ஒரு கப் பாலுடன் என் மெனு முடியும்.நாடு ராத்திரி பசிக்கும் ஆனா நாம் ரொம்ப நல்லா பொண்ணுப்பா ,கஷ்ட பட்டு control பண்ணிருவேன். என்ன ஒரு நல்லா பொண்ணு நான் பார்த்தீங்களா?

நிலைமை இப்படி இருக்கும்போது,சரவணா பவன் போனோம் .என்ன நடந்து இருக்கும்னு உங்களுக்கே தெரியும். அன்னைக்கு நான்சாப்பிட்டதை அந்த சர்வர் இன்னமும் மறக்க மாட்டார்னு நினைக்கிறேன்.இன்னைக்கு வரைக்கும் அந்த t nagar சரவணா பவன் போறதையே விட்டாச்சு. என் மெனு கேளுங்க ,முதல்ல ஒரு தோசை,அடுத்து ஒரு பரோட்டா செட் ,அடுத்து ஒரு ஆப்பம் தேங்காய் பாலோட ,அப்புறும் ஒரு அப்பம் குருமா கூட,அடுத்து ஒரு ஒரு மினி tiffin ( அதுலயே ஒரு மசால் தோசை, கேசரி ,கிச்சடி,சாம்பார் இட்லி எல்லாம் இருக்கு) அப்புறும் ஒரு pistha milk shake . அப்புறும் ஒரு black forest cake இடைல இடைல ஷங்கர் தட்டுல இருந்தும் சாபிடுவேன்.அது எல்லாம் கணக்குல கிடையாது அந்த சர்வர் என்னை ஒரு பயத்தோட பார்க்க ஆரம்பிச்சுட்டார். மஹா போதும்,நான் உனக்கு மாம்பழம் வாங்கி தாரேன்.சோ இதோட முடிச்சுக்கோ ன்னு சொல்லி வலுக்கட்டாயமா என்னை வெளில கூட்டிட்டு வந்துட்டாங்க.
எங்க ஊருக்கு போனப்போ,இன்னொரு கதை எங்க அப்பாகிட்டே அப்பா,எனக்கு பிரியாணி (சைவம் தாங்க ) சாபிடனும் போல இருக்குப்பா அப்படீன்னு சொன்னதும் எங்க அப்பா ,ஓடி போய் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க. half plate தான் வாங்கி இருந்தாங்க .ஏன்னா அதை சாப்பிடவே எனக்கு முந்தி எல்லாம் ரெண்டு மணி நேரம் ஆகும் .

ஆனா இப்போ ? எனக்கு வந்ததே கோபம் ,ஏன்பா இப்படீ பெத்த புள்ளைக்கு சாப்பாடு கூட போட மாட்டீங்களான்னு ஓன்னு கத்தினேன். எங்க அப்பா ஓடி போய் இன்னொரு plate வாங்கிட்டு வந்தாங்க .சோ ஒன்னரை plate சாப்பிடேன்.ஐயோ சாதமா வேணாம்மா ,மூணு நேரமும் டிபன் மட்டும் கொடும்மான்னு சொன்ன நான் ,ஏம்மா இவ்வளவு கம்மியா சாதம் பொங்குற ன்னு சொல்றதை பார்த்து,எங்க அம்மா ஏதோ காத்து கருப்பு சேட்டைதானு நினச்சு கோவிலுக்கு கூட்டிட்டு போய் தண்ணி தெளிச்சு கயிறு கட்டினாங்க . but no change

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா ? குழந்தை வெயிட் அதிகமா இருந்தா சுக பிரசவம் ஆகாதுன்னு டாக்டர் அம்மா என்னை பயமுறுத்த (நான் பயபடனும்னு நினச்சாங்க ) நான் ரொம்ப சந்தோஷ பட்டேன்.பின்ன சுக பிரசவம்னா வலிக்கும். so operation is better. சோ சுக பிரசவம் ஆகா கூடாதுன்னு ஊர்ல உள்ள சாமி எல்லாம் வேண்டிகிட்டு இன்னும் சாப்டேன்.டாக்டர் கிட்ட last check upkku போனேன்.
இதுக்கு அப்புறும் உள்ளதை நெக்ஸ்ட் டைம் எழதுறேன்.எனக்கு கை வலிக்குது.

நட்புடன்,
மகா...

4 comments:

Anonymous said...

//என் மெனு கேளுங்க ,முதல்ல ஒரு தோசை,அடுத்து ஒரு பரோட்டா செட் ,அடுத்து ஒரு ஆப்பம் தேங்காய் பாலோட ,அப்புறும் ஒரு அப்பம் குருமா கூட,அடுத்து ஒரு ஒரு மினி tiffin ( அதுலயே ஒரு மசால் தோசை, கேசரி ,கிச்சடி,சாம்பார் இட்லி எல்லாம் இருக்கு) அப்புறும் ஒரு pistha milk shake . அப்புறும் ஒரு black forest cake இடைல இடைல ஷங்கர் தட்டுல இருந்தும் சாபிடுவேன்//

வாரத்தில 7 நாளும் சரவணபவன் போக மாடீங்கள்ள ????...தப்பித்தது இந்தியா .... :)

//சோ சுக பிரசவம் ஆகா கூடாதுன்னு ஊர்ல உள்ள சாமி எல்லாம் வேண்டிகிட்டு இன்னும் சாப்டேன்.//

இது வரை இந்த மாதிரியான "thought" வேறெங்கும் கேட்ட தில்லை .... different but panic...

//இதுக்கு அப்புறும் உள்ளதை நெக்ஸ்ட் டைம் எழதுறேன்.எனக்கு கை வலிக்குது.//

அருகில் உள்ள மெடிக்கல் சென்று "moove" வாங்கி கையில் தடவி கொள்ளவும்...தொடர்ந்து எழுதவும்....

-மதன்

பாலகுமார் said...

//?சண்டே எட்டு மணிதானே விடிகாலம் எல்லோருக்கும் ,சொல்லுங்கபா?//

சண்டே எட்டு மணியெல்லாம், நடுராத்திரி இல்லையா ?

//அப்புறும் மூணாவது மாசம் முடிந்தவுடனே ,கொஞ்சம் கொஞ்சமா நிலைமை மாற ஆரம்பிச்சுது , //

பாரு, வர்ஷி பிறக்குறதுக்கு முன்னாடியே, அம்மாவை நல்லா சாப்பிட வச்சிருக்கா ...

//இதுக்கு அப்புறும் உள்ளதை நெக்ஸ்ட் டைம் எழதுறேன்.//

என்ன, பசிக்க ஆரம்பிச்சிருச்சா, சரி, நல்லா சாப்பிட்டு வந்து சீக்கிரம் எழுதுங்க ....

Aarthi DayaShankar said...

///ஏன்பா நம்ம கிளாஸ் ஆர்த்தி எல்லாம் ஒரு பையனுக்கு அம்மான்னு சொல்ல முடியாத அளவுக்கு சின்ன பொண்ணு மாதிரி ஒல்லியா இருக்கா .ஆனா மஹா உனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?////

அடி பாவி , நீ எது நாலும் எழுது, என்னை ஏண்டி வம்புக்கு இழுக்குறே? இப்போ நான் எவ்வளவு வெயிட் இருக்கேன்ன்னு எல்லாருக்கும் ஒரு மாதிரி ஒரு நினைப்பு வரும் , மஹா ஜனங்களே , இந்த கொடுமைக்கு எல்லாம் நான் ஆளு கிடையாது. நான் எவ்வளவு வெயிட் இருக்கேன்னு சொல்லவும் மாட்டேன்..

மஹா உன் எழுத்தை இவளவு நாளும்
ரொம்ப மிஸ் பண்ணிடோம்...இன்னும் நிறைய எழுது..nice work...

இப்போ பாலா சார் நம்ப ப்லோக் எல்லாம் மறந்துட்டாரு, எங்க hits நிறைய கிடைக்குதோ அங்க தான் எழுதுவீங்க போல ???? எங்களையும் கொஞ்சம் பாருங்க சார்...

அப்புறம் ஒரு ஓபன் challenge எல்லாருக்கும். ஒரு கதை எழுத ஆரம்பிக்க போறேன். தொடர் கதை. நான் ஒரு எடத்துல முடிச்சுட்டு அதை யார் continue பண்ணனும்னு சொல்வேன். அவங்க அடுத்த எபிசொட் எழுதிட்டு யார் continue பண்ணனும்னு சொல்லணும்...நான் ரெடி நீங்க ரெடியா???

பாலகுமார் said...

//இப்போ பாலா சார் நம்ப ப்லோக் எல்லாம் மறந்துட்டாரு, எங்க hits நிறைய கிடைக்குதோ அங்க தான் எழுதுவீங்க போல ???//

ஹலோ ஆர்த்தி மேடம்,
ரெண்டுமே நம்ம ஏரியா தான். ஆனா எழுத மேட்டர் தான் கிடைக்க மாட்டுது. உங்க அடுத்த படைப்பு எப்போ?

அப்பறம் , அந்த தொடர்கதை ஐடியா, சூப்பர்.... மதன் இதுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கான், சீக்கிரம் எழுதிட்டு அவன்ட்ட கொடுங்க !

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்