என்னத்தை சொல்ல????
இன்று தற்செயலாக Nat Geo சானெலில் IC 814 கந்தகார் விமான கடத்தல் பற்றிய எபிசொட் ஒன்று பார்த்து கொண்டிருந்தேன். பார்த்த பின் வெகு நேரத்துக்கு என் சினத்தை அடக்கி கொண்டிருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.. உங்க அனைவருக்கும் அந்த சம்பவம் நினைவிருக்கும் என்று நினைக்கிறன். தெரியாதவர்களுக்காக இதோ அதன் சாராம்சம்
டிசம்பர் 24 1999 - காத்மாண்டுவிலிருந்து விமானம் கிளம்பியது...கிளம்பிய போதே துப்பாக்கி சத்தம் கேட்டதாக Air traffic control கூறியது.
ஐந்து ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்கள் விமானியை மிரட்டி லக்னோவை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை லகோரை நோக்கி திசை திருப்பினார்கள்.
லகோரில் விமானத்தை தரை இறக்க அனுமதிக்க படாததால் விமானம் அம்ரிஸ்தரில் தரை இறக்க பட்டு கடத்தல்காரர்கள் மிரட்டலால் refuel செய்யப்பட்டது.
25 நிமிடங்களுக்கு பிறகு கட்யல் என்ற பயணியை கொன்று போட்டு விமானம் கிளம்பியது
பின் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க விமானம் பாகிஸ்தான் - காபுலில் தரை இறக்கப்பட்டு , refuel செய்யப்பட்டு துபைக்கு சென்றது.
UAE அரசாங்கம் பெண்களையும் குழந்தைகளையும் விடுவிக்க கோரியது.
25 பயணிகளை கடத்தல்காரர்கள் விடுவித்தனர். இறந்து போன கட்யல் உடம்பையும் ஒப்படைத்தனர்.
பின்பு அடுத்த நாள் காலை விமானம் கண்டகார் சென்று இறங்கியது.அங்கு இந்தியா அரசாங்கம் கடத்தல்காரர்களுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியது.
பிடித்து வைத்திருந்த 154 பயணிகளை விடுவிக்க 35 தீவிரவாதிகளையும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் விலையாக கேட்கப்பட்டது.
டிசம்பர் 31 1999 இந்தியா 3 தீவிரவாதிகளை விடுவித்த பின்பு பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
இது இந்தியா வில் நடந்தது ...
இன்னொரு சம்பவம் இஸ்ரேலில் நடந்தது இதோ
இஸ்ரேலை சேர்ந்த ஒரு விமானம் இதே போல் ஜூலை 4, 1976 இல் பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்டது.
பின்பு அந்த விமானம் உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. உகண்டவும் சேர்ந்து இதில் ஈடுபட்டிருப்பது அப்போது தான் அவர்களுக்கு தெரிய வந்தது. பயணிகள் உகண்டா air force base இல் அடைத்து வைக்க பட்டிருந்தார்கள்.
இஸ்ரேல் தனது ராணுவத்தை uganda ராணுவ வீரர்கள் போல் உடை அணிய செய்து , உகண்டா ராணுவத்தை போலவே எல்லாவற்றையும் imitate செய்ய வைத்து தனது போர் விமானத்தை உகண்டா air force base இல் தரை இறக்கியது.
அங்கு சென்றதும் தாக்குதலை ஆரம்பித்து 3 நிமிடங்களுக்குள் பாதி கடத்தல் காரர்கள் கொல்ல பட்டனர். உகண்டா வீரர்களை போல் உடை அணிந்து தாக்குதல செய்யப்பட்டதும் கடத்தல் காரர்கள் குழம்பி போயினர். அத்தனை பயணிகளையும் விடுவித்து நாடு திரும்பியது இஸ்ரேலிய படை.
இந்த மொத்த operation இல் ஒரு இஸ்ரேலிய commando இறந்து போனார்.
அப்போது உகண்டாவின் ஆளுநராக இடி அமீன் இருந்தார். இஸ்ரேலிய விமானம் உகண்டாவில் தரை இறங்கும் போது ஒரு கருப்பு mercedes மற்றும் 2 land rover வண்டிகளுடன் தரை இறங்கினர். அது இடி அமீனோ அல்லது வேறு யாரோ ஒரு high ranking official ஒ வருவது போன்ற தோற்றத்தை அளிப்பதர்க்காக.இந்த கடத்தல் சம்பவம் நடந்த வுடன் உகண்டா விமான நிலையம் போலவே ஒரு partial replica அமைத்து இஸ்ரேலிய ராணுவம் planning செய்தது. இதை அமைக்க உதவிய மக்களையும் இஸ்ரேலிய ராணுவம் operation முடியும் வரை அடைத்து வைத்திருந்தது. அப்படியாக ரகசியத்தை பாதுகாத்து இந்த செயலை வெற்றிகரமாக முடித்தனர்.
கடத்தி வைக்க பட்டிருந்த பயணிகளில் 3 பேர் தவறுதலாக operation சமயத்தில் கொல்லப்பட்டனர். 75 வயது மூதாட்டி ஒருவர் மூச்சைடைப்பு காரணமாக ஆஸ்பதிரியில் அனுமதிகபடிருந்தார். அவர் operation கு பிறகு உகண்டா ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். Yonatan Netanyahu என்ற இஸ்ரேலிய கமாண்டோ வும் கொல்லப்பட்டார். அவர் பெயரில் தான் இந்த operation இன்றளவும் அறியபடுகிறது.
என்னத்தை சொல்ல????
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
5 comments:
பிடித்து வைத்திருந்த 154 பயணிகளை விடுவிக்க 35 தீவிரவாதிகளையும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் விலையாக கேட்கப்பட்டது.
டிசம்பர் 31 1999 இந்தியா 3 தீவிரவாதிகளை விடுவித்த பின்பு பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
இது இந்தியா வில் நடந்தது ...
see aarthi,namma captain vijaykaanth antha rescue forcela illathathuthaan karanam..yaeh dont be angry i am just kidding.
very provoking article aarthy. and your new idea about the story writing is very fine. try to implement soon. appurum how to improve our trp rating(for our blog) nu paaru
நம்ம நாட்டுல கேபினட் கூட்டி, மசாலா டீ, முந்திரிப் பருப்பு எல்லாம் சாப்பிட்டு முடிச்ச பின்னாடி, எதிர் கட்சி என்ன சொல்லுவான், மீடியா எப்படி செய்தி வெளியிடும், தேர்தல்ல இதை எப்படி ஓட்டா மாற்றலாம்னு பல யோசனை பண்ணி, சரி எவ்வளவோ தீவிரவாதியை தப்பிக்க விடுறோம், இப்போ 3 பேர் தானே, இதுக்கு போய் ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியுமான்னு விட்டிருப்பாங்க. அப்பறம் கஜானால கடன் வாங்கி வச்சிருக்கிற பணம் தான் நிறைய இருக்கே... பின்ன என்ன கவலை....??? :(
unmaiyeleye kovam vara koodiya sambavam than...
hmmm correct than title...
ennaththa solla mudiyum ithukku?
good thought aarthi.........keep it up....
ஆர்த்தி, பாலா , சத்யா மற்றும் இன்ன பிறருக்கு,
//என்னத்தை சொல்ல????// - சரிதான்
ஆனா 1. operational scenario & 2.operational style என்று இரண்டு விஷயங்கள் ...நீங்கள் எல்லோரும் "operational style" பற்றி compare செய்து கொண்டு இருக்குறீர்கள் ...operational scenario வும் மிக முக்கியம்...நமது பக்க சேதாரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்...
கார்கில் யுத்தத்தில் நாம் சிறு முன்னேற்றத்திற்கும் பெரிய அளவில் விலை கொடுக்க வேண்டி இருந்தது (force & personnel) ......காரணம் "operational scenario " ....எதிராளிகள் மலையின் உச்சியில் , நம்மவர்கள் அடிவாரத்தில்....
கோவை குண்டுவெடிப்பு நேரங்களிலும் சரி.... பெங்களூர் "Forum mall" முன்னாலும் சரி...வெடிகுண்டுகளை செயல் இழக்க வைக்க நிபுணர்கள் உயிரை பணயம் வைத்த சம்பவங்களும் நடக்கத்தான் செய்தன.....
ஆழ்துளை கிணறுகளில் விழுந்த எல்லா சிறுவர்களையும் நம்மவர்கள் சாக விடுவதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்...
//தேர்தல்ல இதை எப்படி ஓட்டா மாற்றலாம்னு பல யோசனை பண்ணி....//
நாட்டையும் அரசியலையும் அப்படி ஆக்கிட்டாங்க/ஆக்கிட்டோம் .....
இதையெல்லாம் பார்க்கும் போது, மகா சொல்றமாதிரி , விஜயகாந்தே better option -nnu நெனைக்கிறேன்....:)
என்னத்தை சொல்ல? ???.....
-மதன்
Hi Madhan,
1) Israel has world best spy service and technologies. They have the complete map of the uganda airport and the buildings. Also their aircraft flew 100 meter above the sea level. So that the flight can not be traced by the radar of other countries that they crossed before reaching Uganda.
2) It is not only the operation scenario, matter of survival also. Israel completely surrounded by enemies only. Their day to day operations are to counter terrorism only. So they expert in it.
3) In India, we can not blame politician alone. We also responsible for all the mess in the country. While in 26/11 Mumbai attack, we dont even have the map of any building. We took three days to complete the operation, compare with Israel operation of few minutes in another country. Citizen of India not constructing the building based on the map given to Government
4) We, as a Indian, praise the government if the operation is succeeded and blame the goverment if it is failed. We are emotional people, not thinking practically. After 26/11 everyone expected to attack pakistan like Israel. Is it feasible to attack pakistan like Israel did it for Lebanon, Palestine, Iraq, Syria and Egypt
5) Kargil operation scenario - Yes we paid lot of prices because of the scenario. But it revealed our quality of spy service. Thousands of people entered our country and stationed there. But we did not have intelligence then we forced to retaliate them.
Thanks
Hudson
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.