பி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை

தொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.
சரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?
இருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான்.  அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு "நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! " என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம். 
ஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில், "இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா?  போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே !" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய "வீடியோ காலிங்" எனும் சேவை. 


ரொம்ப செலவாகுமோ ?
இப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... "கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் !" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான்  பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.  சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு,  3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.


(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு : 
மற்றும் http://bsnl.in/service/3G/3GHomepage.htm )
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
ரொம்ப சுலபம் தான். 
ஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல்  3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx  (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.  
புதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால் 
http://chennai.bsnl.co.in/CIP/NewLineRequest.asp?RequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம். 
மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய 
http://portal.bsnl.in/BSNLCCA/ThreeGRegistration.aspx ஐ அழுத்தவும்
அல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள
• Nokia N95,N96,N82,N73
       • Nokia 6233, 3120 Classic
• G700, G900, G502
        • K 660i, K 610i, K530i
       • P1i, W980i, W910i, W760i
• Samsung SGH J800
        • Touch wiz, Innov 8
• LG Viewty , LG KU 250
• Motorola Q, A925
        • MotoRazor V9
  • Apple 3G I Phone • HTC
       • Blackberry Bold 9000        
வேறென்ன சிறப்புகள் ?
3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
3G தொழில்நுட்பம் மூலம் "டேட்டா கார்டு" (Data Card) சேவையும் உள்ளது.
இன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.

தகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.
தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.
நன்றி, தகவல் உதவி...
http://bsnl.in/service/3G/3GHomepage.htm
http://chennai.bsnl.co.in/News/2gto3g.pdf
http://www.chennai.bsnl.co.in/index.html
http://www.bsnl.in/faq/faqans.php?paramCategory=3G%20Mobile%20Services
http://www.viparam.com/index.php?news=18750
http://www.maalaimalar.com/2009/11/19145338/CNI04901901109.html
http://www.dinaithal.com/business/10281--3-
http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_8694.html#ixzz0XsyCS2fb


source : http://solaiazhagupuram.blogspot.com/

9 comments:

Anonymous said...

ada ,super bala,thanks for ur information. illainna idhai pathi googlela thaeda vaendi irukkum illainna yaethavathu BSNL websitela,appurum namma thaai mozhila oru vishayam padikkum pothu udanae purinchurum.illainna ,"the 3G technology of cellphone service is" appadeennu aarambichu ,periya Non-detail padika vaendi vanthu irukum .adhuvum ozhungaa purinchu tholaiyaathu. aama idhukku ellam(un saevaikkkuthaan) BSNL extra kaasu tharrangalao?

maha

shanmug said...

ennoda nokia E series phone la,, 3g kedaikkatha Bala???

Shanmuga..

சிவரஞ்சனி said...

thanks for ur information regading 3G...
enga irunthalum porupaa irukkiye ... athu eppadi balaa?
BSNL ko.pa.se nee thaan pola??

Sivaranjani

Anonymous said...

enna siva ? unakku bala=poruppunnu theriyatha?
cha cha!! very bad.bala vantha pinnala BSNL customer rate kanna pinnannu yeruthaam!
Maha

Aarthi DayaShankar said...

Bala,
Intha 3G sevayai entha cell phone la irunthum peralama? I mean bluetooth mathri athukum ethavathu limitations irukka?

பாலகுமார் said...

thanks maha. உங்க மாதிரி நம்பிக்கையுள்ள BSNL வாடிக்கையாளர்கள் தானே எங்க பலம்.

thanks for the visit, shanmugaraj, mostly all the high end models will support 3G. so urs should also be.

நன்றி சிவரஞ்சனி. ஏதோ எங்களால முடிஞ்சது.

நன்றி ஆர்த்தி. voice call எல்லா செல்போனிலும் கிடைக்கும். சில add-on 3G features வேண்டுமென்றால் high end models வாங்க வேண்டும்.

fundoo said...

தாங்கள் இந்த 3G சேவையைப் பயன்படுத்துகிறீர்களா? இணையம் இணைகிறதா? APN மற்றும் இதற அமைவுகள் என்ன பயன்படுத்துகிறீர்கள் என்று பதிய முடியுமா. கோவையில் இதற்கான செய்திகள் பெறுவது கடினமாக உள்ளது.

வி.பாலகுமார் said...

@fundoo: நான் மதுரையில் உள்ளேன், மதுரையில் இன்னும் இந்த சேவை வரவில்லை. தங்களுக்கு 3ஜி உபயோகிப்பதில் உள்ள சிக்கல் பற்றி எனக்கு மின்னஞ்சல்(balavinmail@gmail.com) அனுப்ப முடிந்தால், கோவையில் உள்ள நண்பர்களிடம் தகவல் பெற்று சொல்கிறேன்.

வருகைக்கு நன்றி.

Mohanasundaram said...

3ஜி-யை இருவர் பயன்படுத்துவது போல சிறு விளம்பர குறும்படம் எடுத்து டிவியில் மற்றும் பிஎஸ்என்எல் வலைத்தளத்தில் வெளியிட்டால் பெரும் உதவியாக இருக்கும். bsnlல் செய்வார்களா?
அன்பன். ந.மோகனசுந்தரம். திருநெல்வேலி.

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்