. மகாவின் பயணங்கள் தொடர்கின்றன (நீங்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் )
டூர் போற அந்த பொன்னான நாளும் வந்தது .அந்த சந்தோஷத்தில இரண்டு நாளா நான் தூங்கவே இல்லை. ஷங்கருக்கு கொஞ்சம் பயம் வந்துருச்சு .பின்ன என்னங்க ? நைட் எல்லாம் தூங்காம pack பண்ணின என்னை பார்த்தா யாருக்குத்தான் பயம் வராது? டூர் போறதுக்கு முன்னாடியே டூர் பேரை சொல்லி நான் பண்ணின ஷாப்பிங் எல்லாம் பார்த்து எங்க வீட்டுல எல்லோருக்கும் B.P கன்னா பின்னான்னு அதிகமாச்சுது .முக்கியமா நான் விடாம தேய்த்ததில் Credit Card கிழிஞ்சு போய் ஷங்கர் புது கார்டு apply பண்ண வேண்டியதா போச்சுது. நான் எதுக்கும் அசரவே இல்லையே . Gold card apply பண்ண சொன்னேன் .அதுல purchase limit one lakh அப்படீன்னு கேள்வி பட்டேன் .கலயணம் ஆன பின்னால நாங்க இரண்டு பேரும் சேர்ந்து போற முதல் டூர் என்பதால் ஷங்கர் எதுவும் சொல்லலை.ஒன்னுமே சொல்லாம ,he applied for gold card also.
டூர் போற அன்று காலைல சமையலுக்கு நோ சொல்லிட்டேன்.நான் செஞ்சது சரிதானே ? சமையல் செஞ்சா பாத்திரம் கழுவனும் ,அடுப்படி துடைக்கணும் .அதுனால நோ சமையல் .நைட் பத்து மணிக்குதான் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்.அதுனால காலை மதியம் நைட் எல்லாம் சரவணா பவன்ல தான் சாப்பாடு. சீக்கிரம் வாங்க சீக்கிரம் வாங்கன்னு நான் officekku போன் போட்டு பண்ணின torturela ஷங்கரோட team leader , நீ தயவுசெய்து கிளம்பு அப்படீன்னு சொல்லிட்டார்.(ஷங்கரோட மொபைல் என்னச்சுனு கேக்கறீங்களா ? வீட்டுலயே மறந்து(?) வைச்சுட்டு போயாச்சு)
சாயங்காலம் ஏழு மணி ஆச்சுது.சரி சீகிரமே கிளம்பலாம்னு முடிவு பண்ணினோம் .சரி luggage அதிகமா இருக்கிறதால(எல்லாம் என் உபயம்தான்) டாக்ஸி புக் பண்ணலாம்னு ஷங்கர் சொல்ல ,நான் ரொம்ப நல்லவ மாதிரி டாக்ஸி எல்லாம் வேணாம்பா , waste of money , (சரிதானே நான் sonnathu ?)நம்ம லோக்கல் trainlayae central போலாம்னு சொன்னேன் . சரி ஏதோ கொஞ்சமாவது பணத்தை மிச்சப்படுதலாம்னு நப்பாசையில் , shankar said ok . ஆனா அதுக்கு நாம உடனே கிளம்பனும்.சரி பழவந்தாங்கல் போறதுக்கு ஆட்டோ கொண்டு வர்றேன்னு ஷங்கர் கிளம்பும் போது மணி 7.45 . அப்போதான் எனக்கு ironing கொடுத்த துணியை வாங்கலைன்னு நினைப்புவந்தது. அதுலதான் என் lucky cum favourite chudithar இருந்தது.அது இருந்தா தான் டூர் எனக்கு நல்ல இருக்கும்,ப்ளீஸ் அதை வாங்கிட்டு கிளம்பலாம்பா அப்படீன்னு நான் சொன்னவுடனே வேற வழியே இல்லாம(டிக்கெட் புக் பண்ணியாச்சு போய்த்தான் ஆகணும் ,) , he said ok . ஆனா அங்க போனவுடன்தான் தெரிஞ்சது,அந்த சுடிதார் மட்டும் காணோம்னு .அப்புறும் எங்க flatla உள்ள எல்லோர் வீட்டுக்கும் போயி கேட்டு ஒரு வழியா சுடிதார் கிடச்சுது, அப்போ மணி 8.45. அப்புறம் நான் ,தலை சீவி,make up pottu (அங்க இங்க அலைந்ததில் தலை கலைஞ்சு போச்சு இல்ல? ) கிளம்ப மணி 9.15 . பத்தே காலுக்கு train .
அப்போதான் எனக்கு திடீர்னு பிள்ளையார் ஞாபகம் வந்தது ,ஐயோ நான் pilskuttykku தேங்காய் உடைகவே இல்லையே ? அவரை பார்காம எப்பிடி நான் டூர் போறதுன்னு நான் புலம்ப ஆரம்பிக்க ,ஷங்கர்க்கு அழுகை வராத குறை. ஆனாலும் ஒன்னும் சொல்லமுடியாத நிலைமை ( he knows me very well . அப்புறும் trainla coffee கிடைக்காட்டி கூட அதுக்கும் நான் பிள்ளையார் தான் காரணம்னு புலம்ப ஆரம்பிச்சுருவேன்) .அப்புறும் டாக்ஸி பிடிச்சு ,பிள்ளையாரை பார்த்துட்டு,தேங்காய் உடைச்சு ,ஒரு வழியா அடிச்சு பிடிச்சு ஓடி வந்து ஓடற trainla ஏறினோம்.T.T.R tta திட்டும் வாங்கினோம் கடைசி நேரத்தில் ஏறியதால் A.C coachla ஏற முடியலை.so அரக்கோணம் (அதுதான் அடுத்த ஸ்டேஷன் ) வத்தவுடனே எல்லா luggakeyaiyum தூக்கிகிட்டு இறங்கி ஏறினோம் .ஷங்கர் என் பக்கமே திரும்பலை .கோவம்னு நீங்க நினச்சா u are wrong. எங்க என்னை பார்த்தா நான் வேற ஏதாவது குண்டை போட்டுருவேன்னு பயத்தில ,என்னை பார்கவே இல்லை!!! அப்புறம் மிச்ச கதையை நாளைக்கு பார்க்கலாம்

3 comments:

Aarthi DayaShankar said...

maha..inteersting narration...funny.. :)

Ananthi Arumugarajan said...

மகா !! நீயே நேர்ல பேசுற மாதிரி ஒரு feeling !! Interesting !

பாலகுமார் said...

//அவரை பார்காம எப்பிடி நான் டூர் போறதுன்னு நான் புலம்ப ஆரம்பிக்க ,ஷங்கர்க்கு அழுகை வராத குறை. ஆனாலும் ஒன்னும் சொல்லமுடியாத நிலைமை ( he knows me very well . அப்புறும் trainla coffee கிடைக்காட்டி கூட அதுக்கும் நான் பிள்ளையார் தான் காரணம்னு புலம்ப ஆரம்பிச்சுருவேன்) .//

நல்லா இருக்கு :) :)

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்