தேடல்

கட்டுரை எழுதுவதற்கே பயமா , ஏன் கொஞ்சம் தயக்கமா கூட இருக்குனு சொல்லலாம்...அந்த அளவிற்கு அனைவரும் கலக்கி கொண்டு இருக்கீங்க.ஏதோ எனக்கு தெரிந்தவைகளை,அறிந்தவைகளை,பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .நான் இந்த கட்டுரைக்கு தேடல் என்ற தலைப்பு கொடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று எனக்குள் எழும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் தேடி கொண்டு இருக்கிறேன்.உங்களுடைய பதில்கள் மூலம் ஏன் தேடலுக்கு ஒரு முற்று புள்ளி வைப்பீர்கள் என்று நம்புகிறேன் .
இன்றைய யுகம் இயந்திரமயமாகி கொண்டு இருக்கிறது என்பதை நாம் ஒப்பு கொள்ள தான் வேண்டும். துரித வாழ்க்கை , துரித உணவு வகைகள் (fast foods) என உலகம் எங்கயோ போய்கொண்டு இருக்கிறது. நான் பல தடவை சிந்தித்து பார்த்து உண்டு ...இந்த மாற்றம் தேவை தானா?? இதில் என்ன சந்தோசம் உள்ளது ?? எனக்கு விடையே கிடைத்தது இல்லை .ஏன் நமக்கு கிடைத்த சில வரப்ரசாதங்களை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல முடிவதில்லை?
எனக்கு தெரிந்து நம்முடைய இளமைகால பருவம் பசுமையாக தான் இருந்தது...விடுமுறை விட்டால் தெருவில் விளையாடும் சிறுவர் சிறுமியர் தான் அதிகம். பம்பரம் விடுதல், கிட்டி புல் அடித்தல் ,கிரிக்கெட் ,கபடி, கோலி குண்டு ,பந்து விளையாட்டுகள் (seven stone, ice ball,etc..) ,இறகு பந்து, ஸ்கிப்பிங் , கூட்டாஞ் சோறு,வளையல் ,கல் விளையாட்டுகள் என அடுக்கி கொண்டே போகலாம் ஆனால் இந்த மாதிரியான விளையாட்டுகளை இன்று ஒன்று கூட பார்க்க முடிவதில்லை.ஏன் வெளியில் விளையாடும் சிறுவர்களை பார்க்கவே முடிவதில்லை.அனைவரும் இன்று computer games, video games என்று ஐக்கியம் ஆகி விட்டனர். அதன் விளைவு இரண்டு வயதிலே கண்ணாடி போட ஆரம்பித்து விடுகின்றனர் .அடுத்ததாக உணவு முறையில் மாற்றம்....ஆரோக்கிய உணவு முறை சென்று இன்று மக்கள் துரித உணவு முறைக்கு மாறி விட்டனர்.அதில் சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள் உடலுக்கு நல்லது கிடையாது .ஆனாலும் சுவைக்காகவும் , நேரம் கருதியும் மக்கள் விரும்பி சாப்பிடு கின்றனர். நாகரிக வளர்ச்சி தேவை தான் ... ஆனாலும் எல்லாம் அளவாக இருந்தால் தான் சுவையாக இருக்கும் என்பது என் கருத்து .இப்படி நாகரிகத்தின் பல பரிணாமங்களை நாம் அடுக்கி கொண்டே போகலாம் .. மாற்றம் என்பது வேண்டும்,, ஆனால் அந்த மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் .உலகத்தை ஒரு சிறிய வட்டத்திற்குள் (கணிணியை தான் சொல்றேன் ...)தேட ஆரம்பித்து விட்டோம்.. எந்த ஒரு கண்டு பிடிப்பிலும் நிறைகளும் உண்டு . குறைகளும் உண்டு.. எதை எடுத்து கொள்வது என்பது நம்முடைய கையில் தான் உள்ளது.
தொடரும் சிந்தனைகள் ...
நட்புடன்
சிவரஞ்சனி

4 comments:

isakki said...

ஆமா சிவா ,நீ சொன்னது cent percent கரெக்ட். என் பொண்ணு வெளியில போய் விளையாட யோசிக்கிறா ! கொஞ்சம் பயமாதான் இருக்குது . நீ சொன்னது நிதர்சனமான உண்மை.

Aarthi DayaShankar said...

ரொம்ப கரெக்ட் சிவா...நீ சொன்ன கபடி , கில்லி , எல்லாம் இப்போ கம்ப்யூட்டர் கேம்ஸ் ல தான் பிள்ளைங்க விளையாடுரங்க.

-ஆர்த்தி

Ananthi Arumugarajan said...

Its certainly true Siva !! Children are more fond of video games !!

சோலைஅழகுபுரம் - பாலா said...

உங்க அப்பாவோட "துள்ளித் திரிந்த கிராமம்" impact ஆ ? :)

ஸ்கூல் ல outdoor activities ஐ, encourage பண்ணா, நல்லா இருக்கும் ....

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்