penn manam

18-01-1980
திருநெல்வேலி

அன்பு வைத்திக்கு,
எப்படி இருக்கீங்க? நான் இல்லாம நல்லாவே இருக்க மாடீங்கனு தெரியும். நீங்க பாட்டுக்கு செமஸ்டர் லீவ், நண்பன் வீட்டுக்கு போறேன்னு 15 நாள் போய்டீங்க. எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்ம முதல் சந்திப்பு நடந்த காம்பவுண்டுசுவர், நம்ம டெய்லி சந்திக்கிற தோட்டம் , நம்ப பக்கத்து வீட்டு வாண்டுகள், தெருவோர டீகடை, அப்புறம் நான் எல்லாரும் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம்.

நீங்க எனக்காக வாங்கி கொடுத்த கஜல் பாடல்களை தான் கேட்டு நேரத்தை போக்குகிறேன். நீங்க சொன்னதனால் எதோ இந்த குரலையும் வச்சிக்கிட்டு பாட்டு கிளாஸ்ல சேந்திருக்கேன். முதல் நாள் ரொம்ப ஒரு மாதிரி இருந்துச்சு, இப்போ பரவாயில்லை. அப்புறம் நேத்து ரவா கேசரி செஞ்சு பழகினேன். அருமையா இருந்துச்சு. உங்களுக்கு தான் கொடுக்க முடியல. இந்த லீவ் ஐ சமையலும் பாட்டும் கத்துக்கிட்டு கழிச்சுட்டேன். இனி ஒரு வாரத்துல காலேஜ் இருக்கு .5th செம் எனக்கு ஈசி யா தான் இருக்கும்னு நினைக்கிறேன். நீங்க MBBS முடிச்சு MD முடிச்சு எப்போடா நாம கல்யாணம் பண்ணுவோம்னு இருக்கு. ஹே இப்போவே சொல்லிட்டேன், எனக்கு வேலை பார்கிறதுக்கு எல்லாம் ரொம்ப இஷ்டம் கிடையாது. நான் நல்ல மனைவியா உங்களுக்கு நல்லா சமைச்சு போட்டு உங்களை நல்லா பாத்துக்குறேன்.

நீங்க எனக்காக அசைவம் சாப்டாம இருக்காதீங்க. உங்க கிட்ட நிறைய வாட்டி சொல்லிட்டேன் , நான் சைவமானதால நீங்களும் ஏன் சைவமா இருக்கணும், எனக்கு நீங்க அசைவம் சாப்பிட்டா ஒண்ணும் பிரச்சனை இல்லை. நீங்க உங்க நண்பன் வீட்ல அசைவம் கொடுத்த சாப்பிடுங்க.

உங்க MD எக்ஸாம் படிபெல்லாம் எப்படி போகுது? அன்னிக்கு பொன்னியின் செல்வன் - (அட்டை படத்துல உங்க போட்டோ ஒட்டி இருக்கிறது - நீங்க gift பண்ணதுதான்) வச்சு பாத்துட்டு இருக்கும் போது அம்மா வந்துட்டாங்க. நல்லா வேளை அவங்க கவனிக்கலை. ஆனா என்னிக்காவது ஒரு நாள் சொல்ல தானே போறோம். அதுக்கு முன்னாடி ரெண்டு பேரு படிப்பும் முடியட்டும்னு பாக்குறேன். இந்த லெட்டரைக்கூட எல்லாரும் தூங்குன அப்புறம் தான் எழுதிட்டு இருக்கேன். ஒரு பக்கம் அம்மா அப்பாவை ஏமாத்துரோமேன்னு கஷ்டமாவும் இருக்கு , ஆனா உங்களையும் என்னால விடு குடுக்க முடியல.

நேத்து அம்மாவும் அப்பாவும் அடுத்த வருஷம் எனக்கு கல்யாணம் முடிக்கிறதா பேசிட்டு இருந்தாங்க. அவங்க அந்த பேச்சை எடுத்தா நான் உங்களை பத்தி சொல்லிடலாம்னு இருக்கேன். மற்றவை நேரில்.


உங்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கும் ,
சரண்யா
-அஞ்சல் வரும்


natpudan
Aarthi

2 comments:

பாலகுமார் said...

அடுத்த லெட்டர் யாருக்கு ?

isakki said...

hello aarthi,un marriage love marriage or arranged marriage? nice letter.

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்