சிங்கார சென்னை
என்னடா இது ? முதல் பதிவே சென்னை பத்தி எழுதுறான்னு நீங்க நினைத்தால் அதுக்கு பதில் நான் சென்னை மேல் வைத்து இருக்கும் தீராத காதல்தான் .ஐயோ!!! சென்னையா !! எவன் இருப்பான் அந்த ஊர்ல ? அப்பிடீனு நினைக்கிற எல்லோரும் இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும் எனக்கு வாழ கத்து கொடுத்ததே சென்னைதாங்க.எனக்கு இங்க இருக்கற வாழ்க்கை முறை பிடிக்கும்.துரித வாழ்க்கைதான். ஆனால் அதிலும் ஒரு சந்தோசம்.பின்ன என்னங்க எவ்வளவு நாள் தான் ஆமை மாதிரி ஒரு வாழ்க்கை வாழ முடியும்.எங்க ஊர்னா அப்பிடி இருக்கும் எங்க ஊர்னா இப்பிடி இருக்கும்னு சும்மா சென்னையை மத்த ஊரோட ஒப்பிடரவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காதுங்க.அப்பிடி உங்க ஊரே ரொம்ப நல்ல ஊருன்னு நினச்சா எதுக்கு இங்க வரீங்க? உங்க ஊர்ல எவனும் IT company ஆரம்பிக்கலையே ? அதுனால பொழைக்க இங்கதானே வரவேண்டி இருக்குது .
சென்னை மோசமான ஊர் இல்லேங்க .இங்க பொழப்பு தேடி வர்றவங்கதான் இதை அசிங்கமாகிறாங்க .இங்க இருக்கிற pub,discothe clubla ஊர்ல இருந்து வந்த சனம் தான் ஜாஸ்தி !!. ஊர்ல பண்ணமுடியாத அசிங்கத்தை எல்லாம் கேக்க யாருமில்லைன்னு எண்ணத்தில் இங்கதான் பண்றாங்க . அப்புறும் ஒரு common complaint சென்னைல எந்த இடத்துக்கும் easiya போய் சேர முடியாது.டிராபிக் ஜாம் .ஐயோ இதுஎல்லாம் ஒரு பிரச்சினையாங்க ? ஜனம் அதிதமான இடத்தில்தான் டிராபிக் இருக்கும்.இதுகூட புரியாம பேசினா எப்பிடி? எங்க ஊர்ல pollution yae கிடையாது .ரொம்ப நல்ல ஊராக்கும்னு நீங்க பெருமை பேசினா தயவு செய்து சென்னைக்கு வந்து சென்னையை மேலும் pollute ஆக்காதீங்க !! so அடுத்த முறை சென்னை வரும்போது சென்னையை பத்தி நல்ல எண்ணத்தோட வாங்க. டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டா பொறுமையா காத்து இருங்க.நம்மளை மாதிரி ஊருக்கு நாலு பேர் பொழப்பு தேடி வந்தது னாலதான் இந்த ஜன நெருக்கடி, pollution, traffic jam எல்லாம்னு புரிஞ்சுக்கோங்க !!! என்னை பொறுத்த வரை சென்னை ஒரு சொர்கம்தான் . HATS OFF to CHENNAI!!!

2 comments:

சிவரஞ்சனி said...

நீ என்ன தான் சென்னைக்கு ஆதரவு கொடுத்தாலும் எங்க மதுரைக்கு ஈடாகுமா ????

Aarthi DayaShankar said...

வலைப் பூவிற்கு வருகை தந்திருக்கும் புரட்சி தமிழச்சியே வருக வருக..

_ ஆர்த்தி

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்