பெண் மனம்

என்ன எழுதுறதுன்னு ரொம்ப நாள் , ரொம்ப நேரம் யோசிச்சப்புரம் என்ன ஆனாலும் பரவாயில்லை , ஒரு கதை எழுதிருவோம்னு தீர்மானிச்சுட்டேன்.. இனிமே உங்களை எல்லாம் அந்த ஆண்டவன் தான் காப்பத்தணும். இது என்னுடைய முதல் முயற்சி. அதனால எல்லாரும் கண்டிப்பா அதரவு தருவீங்கன்னு எதிர் பாக்குறேன்.

Blogla மத்த நண்பர்கள் எல்லாரும் எழுதுரத பார்த்த பிறகு இதுக்கு மேலயும் நம்ம எழுதணுமானு தோணுது. எல்லாருமே ரொம்ப நல்ல எழுதுறீங்க பா. சரி இனி நம்ம கதைக்கு வருவோம். இது ஒரு சாதரண குடும்பத்தில பிறந்த ஒரு பொண்ணோட கதை. உண்மை சம்பவம்னு கேட்டீங்கனா, இல்லீங்க வெறும் கற்பனை தான். சில சம்பவங்கள் கொஞ்சம் ரியல் லைப் இருந்து எடுத்து எழுத ட்ரை பண்றேன்.

நம்ம ஹீரோயின் பேரு சரண்யா. இந்த கதைய முழுவதும் கடித வடிவில கொடுக்க ட்ரை பண்ணி இருக்கேன். இனி சரண்யா பேசுவாள்.


அன்புள்ள நண்பர்களுக்கு,
எல்லாரும் எப்படி இருக்கீங்க? உலகத்துல வேற வேற மூலைல இருக்குற நீங்க எல்லாம் இங்க சங்கமிச்சு இருக்குதுல என்னகு ரொம்ப மகிழ்ச்சி. இந்த முதல் கடிதம் உங்களுக்கு தாங்க.

முதல்ல என்னை பத்தி தெரிஞ்சுகோங்க. நான் சரண்யா . B.E 3 வது வருஷம்.அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா ஒரு டீச்சர். நான் வீட்டுக்கு ஒரே பொண்ணுங்க. ஆனா ரொம்ப செல்லம் எல்லாம் கிடையாது. அளவான செல்லம் தான். அம்மா அப்பாவுக்கு பயந்த பொண்ணு.

இந்த கதைய எழுதுற பொண்ணுக்கு திருநெல்வேலி தான் நல்ல பழக்கம். அதனால என்ன கொடுமை பாருங்க என்னையும் திருநெல்வேலிய விட்டு வெளிய போக விட மாட்டேங்கரா..ஆமாங்க எங்க வீடு திருநெல்வேலில தான் இருக்குது. ஒரு காம்பவுண்டு வீட்ல தான் இருக்கோம். இங்க 15 வீடு இருக்கு. பக்கத்து வீட்ல தான் வைத்தி இருக்கார்.

எனக்கு பிடிச்ச சில விஷயங்கள் - மழை, கவிதை, நண்பர்கள், இசை , புத்தகங்கள், டைரி, கோலம் போடுதல், இட்லி, சாம்பார், வாழை இலை சாப்பாடு, அம்மா ஊட்டும் நிலா சோறு, சாயங்கால நேர இளந்தென்றல் காற்று , காலை நேர சூரியன், கடிதம் எழுதுதல் , அப்புறம் பக்கத்து வீட்டு வைத்தி. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.
அடுத்த வாரம் வைத்திக்கு நான் எழுதிய கடிதம்.
- அஞ்சல் வரும்
- சரண்யா

6 comments:

பாலகுமார் said...

அடுத்த களம், தொடர்கதையா !!!! வாழ்த்துகள் !

//முதல்ல என்னை பத்தி தெரிஞ்சுகோங்க. நான் மதியழகி. B.E 3 வது வருஷம். //

சரண்யா க்கு இன்னொரு பேரா ? :)

Aarthi DayaShankar said...

Thanks for the correction.
ஹீரொயின் name selection ல ரொம்பவே கொழம்பி போய்டேன்.

Ananthi Arumugarajan said...

இன்னும் என்னென்ன அவதாரங்கள் ஆர்த்தி ! ரொம்ப நல்லாருக்கு!!

isakki said...

simply superb aarthy!!!

isakki said...

simply superb aarthy!!!

சிவரஞ்சனி said...

உன் தைரியத்திற்கு என்னுடைய பாராட்டுகள் ..... தொடரை எதிர் பார்த்து ...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்