மகா , the explorer!!
இந்த பெயர் ரொம்ப நல்லா இருக்குல்ல? ஆனா என்னங்க பண்றது, lifela நம்ம நினச்சது எல்லாம் நடக்கிறது இல்லேங்க.எங்க அப்பா என்னை பக்கத்து தெருவுக்கு அனுப்பிட்டு பத்து தடவை வந்து பாக்கிற ஆளு .இதுல நான் என்னத்தை explore பண்றது?சரி ,tourism படிக்க போறேன்ன்னு சொல்றதுக்கு வழி இல்லாம twelvethla கொஞ்சம் நிறைய மார்க் வாங்கிடேங்க.எல்லாம் என் தலை எழுத்து !!
பக்கத்தில இருக்கிற திருநெல்வேலிக்கு படிக்க அனுப்பிட்டு ,நாளைக்கு பத்து phone போட்டவருங்க எங்க அப்பா. வாரம் வந்துருடா செல்லம் அப்பிடீன்னு அன்பு கட்டளை வேற .நான் உலகமே தெரியாத பொண்ணுன்னு (சிரிக்காதீங்க , please !!!) எங்க அப்பாவுக்கு நினைப்பு .என் அம்மா அப்பிடி கிடையாது.என் திருட்டுத்தனம் எல்லாம் தெரிஞ்சவங்க.சரி நிலைமை இப்பிடி இருக்க நான் எந்த tourkku போறது? .என்னத்தை explore பண்றது?
சரி college days la eductional tour nu சொல்லிட்டு ஊர் சுத்தலாம்னு பார்த்தா அதுக்கும் பெரிசா வழி இல்லை. தமிழ்நாடு ,கேரளா தாண்டலை. வட இந்தியா டூர் போலாம்னு நினச்சா அதுக்கும் வழி இல்லாம ஏதோ சண்டை (அது எல்லாம் நினைக்கும்போது எனக்கு பத்திகிட்டு வருது!!!) வந்து கொடைக்கானல் டூர் தான் கிடச்சுது.என் கனவு நிறைவேரம போனதில நம்ம கிளாஸ் பசங்களுக்கும் பங்கு இருக்குது .
சரி இப்படியாய் காலம், ஓடிருச்சு . ஆனாலும் என் நச்சரிப்பு தாங்காம pilschellam( அட,நம்ம பிள்ளையார்தாங்க!!!)ஒரு நல்ல மனுஷனை எனக்கு புருஷனா அனுப்பி வைச்சாருங்க .இந்த பூமில நான் சொல்றதையும் கேக்கிறதுக்கு ஒரு ஆள இருக்குதுன்னா அது ஷங்கர்தான . கல்யாணம் நடந்து ஒரு ஏழு எட்டு மாசம் ஓடி போச்சுங்க.மெதுவா என் ஆசையும் தலைதூக்க ஆரம்பிச்சுது."என்னங்க நாம எங்கயாவது டூர் போலாம்னு நான் பிட் போட ஆரம்பிச்சேன்.கொடைக்கானல் போலாமா மகா,அங்கதான் உன் friend இருக்கான் அவனையும் பார்த்தா மாதிரி ஆச்சு அப்புறும் மதுரைல இருக்கிற என் friends உன் friends எல்லாரையும் பாக்கலாம்னு ஷங்கர் சொன்னதை கேட்டவுடனே எனக்கு தலையே சுத்த ஆரம்பிச்சுது.ஆனா ஒன்னும் சொல்ல முடியாத நிலைமை.பின்ன நான் விட்ட கதை கொஞ்சமா நஞ்சமா ,(என் friendsna எனக்கு உயிரு வருசத்துக்கு ஒரு தடவை அவங்களை பார்க்க கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விடமாட்டேன்னு அப்படி இப்படின்னு ஒரே ரீல் ) உடனே நான் ஐயோ பாலா trainingkku குஜராத் போய் இருக்கான் .சிவாக்கு M.E ப்ராஜெக்ட் இருக்குது.என்னை போன் கூட பண்ண வேண்டான்னு சொல்லிட்டா,நம்ம disturb பண்ணின நல்ல இருக்காது அப்படி இப்படின்னு சில பல பொய்களை சொல்லி சமாளிச்சேன்(சம்பந்த பட்டவங்க தயவு செய்து மன்னிக்கவும்)
எங்க அப்பான்னா இந்நேரம் ஷிமலா கூட்டிட்டு போய் இருப்பாங்க(எங்க அப்பா!!!) அப்படி இப்படின்னு நான் விட்ட அலப்பர தாங்காம ,உத்தராஞ்சல் ,நைனிதால் போலாம்னு முடிவு பண்ணினோம் .டிக்கெட் எல்லாம் புக் பண்ணியாச்சு .கிளம்புற நாள் நெருங்க நெருங்க எனக்கு ஒரே கனவுதான்(மார்கழி பூவே மார்கழி பூவேன்னு நான் நைனிதால் பாடுறமாதிரி கனவு,சினிமால வர்ற solo heroine songs எல்லாத்தையும் கனவு கண்டு முடிச்சேன்) அந்த நாளும் வந்தது. மீதி கதையை இரண்டு நாள் கழிச்சு எழுதுறேன் .

2 comments:

பாலகுமார் said...

//மகா , the explorer!! //

ஒரு கொலம்பஸ், வாஸ்கோடகாமா வை இந்த உலகம் இழந்துருச்சோ ???

Nice Narration .. :)

டூர் எப்படி இருந்தது,,,,? அதை சொல்லுங்கப்பா !!! :)

சிவரஞ்சனி said...

உன்னோட அலும்புக்கு அளவே இல்லாம போச்சு இசக்கி .... சீக்கிரம் டூர் கதையா எழுது ...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்