எனது எண்ணம் சரி தானா?

'நல்ல' விமர்சனம் அளித்த ஊக்கத்தின் விளைவாக வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் எழுத வேண்டும் என மன காலெண்டரில் ஆழ பதித்து விட்டேன் . அதனால் நேற்று இரவிலிருந்தே அலெர்ட் செய்ய ஆரம்பித்து விட்டது, எனது மனக்கடிகாரம். ஆகையால் உங்களை சந்திக்க மீண்டும் வந்து விட்டேன்.

நம்மை உலகளாவிய் மக்களிடையே மேன்படுத்தி காட்டுவதில் முதன்மையானவை நமது இந்திய கலாச்சாரம் மற்றும் சுவை மிகுந்த 'spicy' உணவும் தான். நம்மிடம் அயல் நாட்டு மக்கள் ஆர்வத்துடன் கேட்டு தெளிவு படுத்தி கொள்ள விரும்பும் விஷயங்களில் ஒன்றும் நமது கலாச்சாரமே! என்னுடன் பணி புரியும் தோழி ஒருவர்,என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த பொழுது மிகவும் ஆர்வத்துடன் நமது நாட்டை பற்றி அவரது சந்தேகங்களை கேட்டு கொண்டிருந்தார். அவைகளில் சில

1. உங்கள் நாட்டில் பெரும்பன்மையனோர் வாழ்வின் கடைசி வரை எவ்வாறு ஒரு கணவன் / மனைவியுடன் தங்கள் வாழ்கையை நடத்துகிறீர்கள்?

2.உங்கள் பெற்றோர்கள் தான் தங்களின் வாழ்கை துணையை தேர்ந்தேடுப்பார்களாமே? அது எவ்வாறு சாத்தியம்?

மற்றவர்களுக்கு சாத்தியமில்லாதது என எண்ணுவதை,சாத்தியமாக்கி காட்டுவது தானே நம்மவரின் தனி சிறப்பு. முதல் கேள்வியை கேட்டதும் சற்று 'ஷாக்' ஆனாலும், சுதாரித்துக் கொண்டு அந்த தோழியிடம் நான் மிகமும் பெருமையுடன் சொன்ன பதில்

எங்கள் பண்மையான 'கலாச்சாரம்' மற்றும் தம்பதியினரின் 'விட்டு கொடுக்கும்' மனப்பான்மை, இவை இரண்டும் தான் எங்கள் நாட்டு குடும்பங்களை இன்னும் கட்டி காத்துக்கொண்டிருக்கிறது.

எங்கள் நாட்டு பெற்றோர்கள், பிள்ளைகளின் விருப்பமறிந்தே, பிள்ளைகளின் மனமொத்த வாழ்க்கை துணையை தேர்வு செய்வர். மேலும் எங்கள் நாட்டு மக்கள் 'காதல் திருமணத்திற்கு' எதிரானவர்கள் அல்ல என.

அந்த தோழி, ' Wonderful country' என புகழுரைத்தார். ஆனால் எனது மனதில் எழுந்த கேள்வி,

இன்றும் நமது கலாச்சாரம்,அதன் தனித்தன்மையிலிருந்து மாறாமல் இருக்கிறதா?

ஆம் என்று எனது மனம் பதிலளித்தாலும் , 'இல்லை' எனவும் ஒரு ஓரத்தில் தோன்றியது. அதற்கான காரணங்கள்

நாளுக்கு நாள் உலகம் அதி வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நமது இந்தியாவும் தான். தற்பொழுதெல்லாம் ஆறாம் வகுப்பு குழந்தைகள் கூட வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தங்கள் 'இனம் புரியாத' வயதில் ' காதல் என்றால் என்ன?' என்றே சரி வர தெரியாமலேயே, உலகுக்கு பறை சாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே !! தவறாக என்ன வேண்டாம். நான் கொஞ்சம் 'பள்ளியில் வரும் காதலை' வரவேற்கும் அளவுக்கு பரந்த மனப்பான்மை படைத்தவள் அல்ல.

தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், ஊடகங்களின் தாக்கத்தினாலும், globalization' மற்றும் அயல் நாட்டு கலாச்சார மோகத்தினாலும் நாம் சிறிது கலாச்சார பாதையிலிருந்து தடம் மாறி செல்வதாக என்னுள் தோன்றியது. 'Dating' , 'Living together' என பல பரிமாணங்களை நமது நாடும், மேலை நாட்டிற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணத்துடன் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது.அதற்காக நான் இந்திய மக்கள் அனைவரையும் சாட வில்லை. ஆனால் பெரு நகரங்களில் இதன் தாக்கம் அதிகமே என்பது நாம் ஒத்து கொள்ள வேண்டிய உண்மை . எல்லாவற்றிக்கும் அளவு கோலாக நாம் நினைக்கும் '2020' யில் இதன் நிலைப்பாடு என்ன?

அயல் நாட்டு மக்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய 'நல்ல விஷயங்கள்' பல இருக்கும் பொழுது, நமது நாட்டின் கலாச்சாரத்தையும், தன்னிகரற்ற சிறப்பையும் சீர் தூக்கி பார்க்கும் கலாச்சார மாற்றம் தேவை தானா?

சிந்திப்போம் !! நமது நாட்டின் தன்னிகரில்லா அடையாளமான 'சிறப்பான கலாச்சாரத்தை' காப்போம்.

கருத்துக்கள் வேறு படலாம். நான் எண்ணுவதை அனைவரும் ஒத்து கொள்ளா விட்டாலும், பெரும்பான்மையோர் எனது மன அலை வரிசையில் ஒத்து செல்வர் என்ற எண்ணத்துடன் விடை பெறுகிறேன்.

உங்கள் விமர்சனத்திற்காக !!

நட்புடன்

ஆனந்தி
6 comments:

சோலைஅழகுபுரம் - பாலா said...

ரொம்ப நல்லா இருக்கு , ஆனந்தி !

Aarthi DayaShankar said...

ஆனந்தி,
உன்னை என்ன சொல்லி பாரட்டுரதுனே தெரியலே.. உனது கருத்துக்களும் தமிழ் நடையும் மிகவும் அருமை. உனது அடுத்த பதிப்பை எதிர் நோக்கி....

ஆர்த்தி

isakki said...

kalakkura aanu,keep it up!!

gems-voice said...

All you writtings are very nice...
A latent talent...

gems-voice said...

All your writtings are nice....
A latent talent......

சிவரஞ்சனி said...

ரொம்ப அருமை ஆனந்தி .. உன்னுடைய தமிழ் நடை அருமை .. நல்ல சிந்தனைகள் வாழ்த்துக்கள் ..

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்