பெயரைக் கொடுக்கும் வள்ளல்கள் ! (கிறுக்கனிஸம் - 0)

எங்க கல்லூரி வாழ்க்கைல, நாங்க பண்ண கிறுக்குத்தனமான விஷயங்களை கொஞ்சம் உண்மை, அப்புறம் நிறைய கற்பனை, அப்புறம் கொஞ்சம் உண்மை கலந்து எழுதலாம்னு இருக்கோம்...

நாங்கன்னா, நாங்க ஏழு பேரு... கிறுக்கன், மட்டை, காடு, வாய்க்கா, காந்தி, டுபுக்கு, பொறுப்பு.

"கிறுக்கன்"

- தலைப்புக்கு பெயர்க்காரணமே இவன் தான். ஆனா ரொம்ப தன்னடக்கம் உள்ளவன். எவ்வளவு கிறுக்குத்தனம் பண்ணாலும் ஒன்னுமே தெரியாத மாதிரி அமைதியா இருப்பான். யாரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான், ஏன்னா இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவன் !

"மட்டை"

- "இந்த பூனையும் பச்சை தண்ணீர் குடிக்குமா?" ன்னு கேக்குற அளவு அமைதியான பையன். மட்டையா மடங்கிருவான். இரன்டாம் காட்சிக்கு, இவங்க தியேட்டர்ல பிட்டு படம் ஓட்டும் போது கூட நிதானம் இழக்காம சரியா 5 நிமிஷத்துல மெயின் படத்த மறுபடியும் போட்டுருவான், அந்த அளவு யோக்கியன்.

"காடு"

- பேசுறத பார்த்தா முரடன்னு தோனும். கல்லூரில எல்லாரும் காட்டுப்பயன்னு தான் சொல்லுவாங்க. ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப பயந்தவன். அதை வெளியே காட்டிக்காம இமேஜ் மெயின்டெயின் பண்ணனுமே, அதனால அப்பைக்கப்ப ஏதாவது சவுன்டு விட்டுகிட்டே இருப்பான்

"வாய்க்கா"

- எங்களோட கடைசியா வந்து சேர்ந்தவன். நாங்கெல்லாம் ஓட்டி, ஓட்டியே Close Frind ஆகிட்டான். Hostel ல சிங்கம் மாதிரி சவுன்டு விடுவான், Class Room க்கு போய், பொண்ணுங்களை பார்த்தவுடனே ....."மியாவ் !!!"

"காந்தி"

- இவனுக்கு ஏன் தான் காந்தினு பேரு வச்சோமோ, மனசுக்குள்ள "உத்தமர்" காந்தின்னே நினைப்பு. வாயத்திறந்தா அட்வைஸ் மழைய நிறுத்த முடியாது. ஆனாலும் அப்பைக்கப்ப ஓஷோ பத்தியெல்லாம் சொல்லுவான்.

"டுபுக்கு"

- இவன் மனசுக்குள்ள தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் ன்னு நினைப்பு. ஆனா மெட்டீரியலை தைக்கிறதுக்கு முன்னாடியே நாசமாப்போனான். எஙளோட Maximum Comedy இவன வச்சு தான் நடக்கும். இவன ஏத்தி விட்டு, சூடாக்கி, அந்த சூட்டுல குளிர் காயுறதுன்னா பசங்களுக்கு அப்படியொரு சுகம்!

"பொறுப்பு"

-இவனுக்கு தான் கருத்து சொல்லாட்டி, உலகத்துல எந்த விஷயமும் முடிவுக்கு வராதுன்னு அப்படியொரு நம்பிக்கை. தெரியாதவஙகிட்ட பேசவே மாடான், தெரிஞ்சவங்க கிட்ட பேசினா, நிறுத்தவே மாட்டான்.

So, எங்க ஏழு பேரோட பார்வையில் , எங்க கல்லூரி வாழ்க்கை தான் இந்த "கிறுக்கனிஸம்". இதை யாராவது (முழுதும் படிக்கும் வரை பொறுமை இருந்து) படித்து விட்டு, இது "Five Point Someone" மாதிரி இருக்குது, இல்ல, அது அளவு இல்ல, இது வேற மாதிரி இருக்குது என்றெல்லாம் சொன்னால்,அவர்களின் அறியாமையை எண்ணி நாங்கள் சிரிக்கின்றோம் !!!


:) வாங்க, "கிறுக்கனிஸம்" தொடங்குகிறது...!

எச்சரிக்கை: இந்த தொடர்ல வரப்போற சாகசம் எல்லாம் நாங்க பண்ணது ன்னு நினைச்சு, எங்கள கும்ம வராதீங்க.. இதுல்ல வர்ற Nick name மட்டும் தான் எங்களோடது. Incidents எல்லாம் சும்மா ரூம் போட்டு உக்கார்ந்து யோசிச்சது .... ஒரு popularity க்காக எங்க பட்டப் பெயரைக் கொடுத்து உதவின வள்ளல்கள் நாங்க... (குத்து விளக்கு ஏத்த வந்திருக்குற, வரப் போற வீட்டு அம்மணிகள் தயவு செஞ்சு கவனிச்சிக்கோங்க ! , அப்பாடா, We the Escape...)

பெயரைக் கெடுக்கும்  வள்ளல்கள் ! :) :) :)


இன்னும் கிறுக்குவோம்...
source : http://solaiazhagupuram.blogspot.com

5 comments:

Aarthi DayaShankar said...

A great start to go..... waiting for the next episoder :)

சிவரஞ்சனி said...

பொறுப்பு என்ற பெயரை மாத்தி கருத்து கந்தசாமி என்று வச்சுக்கலாமே ??? பொருத்தமா இருக்கும் .. ஆரம்பமே அமர்களமா இருக்கு ...

isakki said...

கடவுளே நம்ம classla இத்தனை வள்ளல்களா!!! ஒரே இன்ப அதிர்ச்சியாக இருக்குது. (!) அது என்னப்பா "five point someone" ? i couldn't get it.

சோலைஅழகுபுரம் - பாலா said...

" Five point someone" is a novel based on the college life in IIT (written by a IITan)

thanks to all ! :)

sathya said...

Really very good...........eager to see your next....all the best..

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்