பெண் மனம்


30-10-1982
திருநெல்வேலி


அன்புள்ள வைத்திக்கு,

அநேகமா இது தான் நான் உங்களுக்கு எழுதுற கடைசி கடிதமா இருக்கும்னு நினைக்கிறேன். நாளைக்கு எனக்கு பார்த்தசாரதியோட கல்யாணம். இன்னும் 20 நாட்களில அமெரிக்கா போறேன் . உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

நான் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்னு உங்களுக்கு என் மேல கோபம் இருக்கும்..அது நியாயம் தான். அப்பாவை மீறி என்னால ஒண்ணும் பண்ண முடியாது வைத்தி. நான் எவ்வளவோ போராடி பார்த்தேன் அப்பாகிட்ட. அப்பா சமாதனம் ஆகலை. நீங்களும் அப்பா சம்மதிகலேன்னா நாம கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிடீங்க. ஆனா சொல்றதுக்கு எல்லாமே சுலபம் தான் வைத்தி, செயலாக்கும் போது தான் வலி தெரியுது.

நடந்ததை எல்லாம் மனசில ஒரு ஓரத்துல நான் என்னிக்குமே வச்சிருப்பேன் வைத்தி. அது நான் பார்த்தசாரதிக்கு பண்ற துரோகம் இல்லை. ஆனா என் மனசில இந்த அழகான நாட்களுக்கு கண்டிப்பா இடம் உண்டு.உங்க மனசிலேயும் என் நியாபகங்கள் என்னிக்கும் ஒரு ஓரத்துல இருக்கும்னு நம்பறேன். நீங்க உங்க Cardiologist படிப்பை நல்ல படியா முடிச்சு பெரிய டாக்டரா வரணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்,

நவம்பர் 20 ம் தேதி நான் பார்த்தசாரதி கூட அமெரிக்கா போறேன். அவரு நியூ யார்க் ல தான் வேலை பார்க்கிறார். அங்கேயே எனக்கும் வேலை கிடைக்கும்னு சொல்றாரு. நான் வேலை பாக்குற மனோ பக்குவத்துல இருகிறேன்னானு எனக்கு தெரியலே.

பார்த்தசாரதி 2 நாள் முன்னாடி தான் அமெரிக்கால இருந்து இங்க வந்தாரு. என்னை பாக்க வந்தார். புடிச்சிருக்கான்னு கேட்டார்.நான் ஒண்ணும் பதில் சொல்லலை. வெட்க படறேன்னு நினைச்சாரோ என்னவோ அப்புறம் ஒண்ணும் கேக்கலை. அவ்ளோ தான்.. இனி என்ன எழுதுறதுன்னு தெரியலே.. கடைசியா .. நான் ஏதாவது தெரிஞ்சோ தெரியாமலோ தப்பு பண்ணி இருந்தா என்னை மன்னிச்சுருங்க வைத்தி.

- சரண்யா
- அஞ்சல் வரும்
- ஆர்த்தி

4 comments:

isakki said...

hello aarthy,week by week it becomes interesting.and especially this time it is really good.waiting eagerly for next episode!

பாலகுமார் said...

good going ,,,

//அநேகமா இது தான் நான் உங்களுக்கு எழுதுற கடைசி கடிதமா இருக்கும்னு நினைக்கிறேன்.//

expecting the twist of the letter series, in next episode. :)

அடுத்த லெட்டர் யாருக்கு ?

madhan said...

"மறைக்க முயன்றேன் முடியவில்லை-உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

நினைக்கும் நிலையிலும் நானில்லை- உன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்........"

-மதன்

சிவரஞ்சனி said...

முடிவை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. வைத்தியோட பதில் கடிதத்தை எழுது ஆர்த்தி .... இன்னும் சுவாரசியமாக போகும் ...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்