maha returns
எல்லோரும் எப்பிடி இருக்கீங்க? குடும்ப பொறுப்பு அதிகமானதினாலே blog பார்க்க முடியலை. மன்னிக்கவும் .சரி நம்ம கதைக்கு வருவோம் . ஒரு வழியா A.C coach-la ஏறி உட்கார்ந்தோம் . எங்களோட seats side upper side lower .எனக்கு side upper வேணும்னு அடம் பிடிச்சு வாங்கிட்டேன். ஷங்கர்க்கும் அப்பாடான்னு இருந்துது. அப்போ மணி 11 இருக்கும். எல்லா வேலையும் முடிஞ்சுதுல மகான்னு கேட்ட உடனே ,நான் ஷங்கர் எனக்கு வாழை பழம் சாபிடனும்போல இருக்குதுன்னு ஆரம்பிச்சேன். ஆளை விடுடா சாமின்னு சொல்லிட்டு ஷங்கர் குப்புற படுத்து தூங்க ஆரம்பிச்சாச்சு. எனக்கு எவ்வளவு கோபம் வரும் நீங்களே சொல்லுங்க ?உடனே நான் எங்க மாமாக்கு (ஷங்கர் அப்பாக்கு ) போன் பண்ணி மாமா ,உங்க பையன் ஒரு வாழை பழம் கூட எனக்கு வாங்கிதர மாட்டேன்கிறாங்க .நான் நைட் சாப்பிட கூட இல்லைன்னு (!!!) ஒப்பாரி வைச்சேன் .எங்க மாமா எப்பவுமே என் பக்கம்தான் .அடுத்த நிமிஷம் ஷங்கருக்கு போன் பண்ணி பயங்கரமா டோஸ் விட, i got banana. எனக்கு A.C coachla பயணம் பண்றது முதல் தடவை. ஆனா இதை உங்க கிட்ட மட்டும் சொல்றேன். keep this as secret ok?ஷங்கர், மகா A.C la இதுக்கு முன்னாடி travel பண்ணி இருக்கியான்னு கேட்டதுதான் தாமதம் ,நான் விட்ட ரீல் கொஞ்ச நஞ்சம் இல்லை. எப்பிடி நீங்க இப்படி கேக்கபோச்சு? நாங்க flightla போனாலே buisness classlathan போவோம் . economy class la நான் பார்த்துகூட இல்லை ( maha ,this is too much, உனக்கு aeroplane ,helicopter வித்யாசம் தெரியுமான்னு என் மனச்சாட்சி வேற குரல் கொடுத்தது ) என்னை பார்த்து என்ன வார்த்தை கேட்டீங்கன்னு நான் பிலிம் ஓட்டினேன் . ஏதாவது சொன்ன ,என்னை நம்பலையா நீங்கன்னு நான் அடுத்த பிரச்சினை ஆரம்பிசுருவேன்னு பயத்தில shankar said nothing.
ஆனா விதி வேற ரூபத்தில என்கூட விளையாடியது .அது ஒரு சோக கதை .ஏன்பா, A.C ல போன bed எல்லாம் free கொடுப்பாங்களா? எனக்கு இந்த விஷயமே தெரியாது.ஒரு ரயில்வே employee எனக்கும் ஷங்கர்க்கு பெட் கொடுத்துட்டு போனான்.நான் என் வாயை வைச்சுகிட்டு சும்மா இருந்து இருக்கலாம் .சனியனை தூக்கி பனியனுக்குள்ள போடுறதுன்னு கேள்வி பட்டு இருக்கேன். அன்னைக்குதான் அதை அனுபவிச்சேன் .எங்களுக்கு பெட் எல்லாம் வேண்டாம்,எடுத்துட்டு போங்கன்னு சொல்லி இருந்தாலாவது ஏதோ தப்பிச்சு இருக்கலாம் ,அதை விட்டுட்டு,ஷங்கர் நான் காசு கொடுக்கறேன்னு சொலிட்டு அவனுககு 40 ருபீஸ் கொடுத்தேன் ( usually we will give 20 for each bed in normal coach) காசு எல்லாம் வேண்டாம்மா ,இது freennu அவன் சொன்ன உடனே எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.ஷங்கர் ,அப்போ சிரிக்க ஆரம்பிச்சதுதான் ,டூர் முடியறவரை சிரிச்சு சிரிச்சு , oh god, எனக்கு என்ன சொல்லி சிரிப்பை நிறுத்துரதுன்னே தெரியலை. சே ஒரு சின்ன விஷயத்தில slip ஆகிட்டியே மகான்னு புலம்பிகிட்டே வந்தேன்.
அப்புறும் அடுத்த matterkku வருவோம்,எனக்கு பொதுவாவே snacks ரொம்ப பிடிக்கும் அதுலயும் ,பயணம் பண்ணும்போது கேக்கவே வேண்டாம் .எந்நேரமும் grindingthaan. நான் காலையில இருந்து சமோசா ,வடை ,முறுக்கு ,பழம், etc etc விடாம வாங்கி சாப்பிட்டதில்,எனக்கு ஏதோ பசிக்கிற வியாதின்னு நினச்சு கூட பயணம் பண்ணினவங்க பயந்துதான் போய்ட்டாங்க.இதை பத்தி எல்லாம் கவலை பட்ட ,நான் என்ஜாய் பண்ண முடியமா ? நீங்களே சொல்லுங்க?ஷங்கர் போதும் ,போதும் மகா,please அப்படீன்னு சொல்லி சொல்லி ஏதோ ஓரளவு control பண்ணினேன். ஒருவழியா டெல்லியும் வந்தது.மீதி கதையை அடுத்த episodela பார்போம். bye ,take care
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
1 comments:
//ஏன்பா, A.C ல போன bed எல்லாம் free கொடுப்பாங்களா? எனக்கு இந்த விஷயமே தெரியாது.ஒரு ரயில்வே employee எனக்கும் ஷங்கர்க்கு பெட் கொடுத்துட்டு போனான்.//
டெல்லி வந்தவுடன், உங்களுக்கு Free யா கொடுத்த Bed ஐயும் சேர்த்து எடுத்துட்டு போயிருப்பீங்களே, அதை சொல்லல ??? :)
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.