பின்னாலிருந்து ஸ்டிக்கர் ஒட்டும் பேமானித்தனமும், பெண்ணினத்தின் பெருந்தவிப்பும்


 

ஸ்டிக்கர் ஒட்டனும்.

 

      நாலாவது செமஸ்டர் Signals and Systems தியரி கிளாஸ். வழக்கம் போல, ரெண்டு பொண்ணுங்கள செமினார் எடுக்கச் சொல்லிட்டு மேடம் கிளம்பிட்டாங்க.

      மதிய சாப்பாடு முடிஞ்சு First Hour வேறயா, பசங்களுக்கு தூக்கம் சொக்குது.

"மேடம் தாலாட்டுப்பாடி கிளாஸ் எடுத்தாலாவது நல்லா தூங்கலாம். ஆனா கூடப் படிக்கிற பொண்ணு செமினார் எடுக்கும் போது அதை விடை பெரிய சேட்டையெல்லாம் பண்ணனுமே !" இப்படித்தான் காடு யோசிச்சான்.

      எங்க Second Year Class Seating Arrangement எப்படின்னா, இடது பக்கம் ஒரு Column முழுதும் பொண்ணுங்க, வலது பக்கம் ஒரு Column முழுதும் பசங்க. நடுவுல உள்ள முதல் ரெண்டு பெஞ்ச் பொண்ணுங்க, பின்னாடி ரெண்டு பெஞ்ச் பசங்க.

      சேட்டை பண்ண முடிவு பண்ண காடு, "கிறுக்கனை" கூட கூட்டிக்கிட்டு, நடு Column ல் பொண்ணுகளுக்குப்  பின்னாடி உள்ள பெஞ்ச் போய் உக்கர்ந்துகிட்டான். முதல் பொண்ணு செமினார் எடுக்க ஆரம்பிச்சதும், காடு சின்சியரா நோட்ஸ் எடுக்குற மாதிரி தலைய தலைய ஆட்டிக்கிட்டு , அந்த பொண்ணையும் போர்டையும் நோட்டையும் மாறி மாறி வேகமாப் பார்த்துட்டு இருந்தான். செமினார் எடுத்த பொண்ணும் , "ச்சே, இவ்வளவு சின்சியரா நோட்ஸ் எடுக்குறானே !" ன்னு நம்பி  Signals and Systems யை அருவியா கொட்டிட்டு இருந்தது.

 

      கொஞ்ச நேரத்துல காடுக்கு இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போச்சு. உடனே பக்கத்துல இருந்த கிறுக்கனைப் பார்த்து,

"டேய், நாம சேட்டை பண்ணி ரொம்ப நாள் ஆச்சுல, கை பரபரக்குது. பொண்ணுங்க மனசுல நச்சுன்னு பதியுற மாதிரி ஒரு ஐடியா கொடுடா !"

பாதி தூக்கத்துல இருந்த  கிறுக்கனோ , " போ, நாயே ! என்னவோ பண்ணித் தொலை... இப்போ தான் கனவுல ஒரு டூயட் Situation வருது, அதை கெடுக்காதே !" ன்னு சொல்லிட்டு Dreams க்கு கிளம்பினான். சாட்சி இல்லாம பண்ற சாகசத்துக்கு ஒரு மதிப்பும் இல்லையே ... So, காடு கிறுக்கனை உள்ள இழுககுறதுக்காக, கொஞ்சம் கடுப்பேத்தினான். 

"சரிடா, பயந்து சாகாதே !  இன்னைக்கு மனசுல பதியுற மாதிரி வேண்டாம், உனக்காக முதுகுல பதியுற மாதிரி ஒரு ஐடியா இருக்கு,  அத நான் எப்படி Execute பண்றேன்னு மட்டும் நீ வேடிக்கை பாரு ..." ன்னு காடு  உசுப்பேத்தினான்.

விதி விரிச்ச வலைல ரெண்டு பேரும் விழ ஆரம்பிச்சாங்க .

"தம்பி, வேடிக்கை அப்பறம் பார்க்கலாம், நீ மேட்டர் என்னனு  சொல்லு !" கிறுக்கன் லைட் டா அசஞ்சு கொடுத்தான். உடனே காடு உற்சாகம் ஆகிட்டான்.

அன்னைக்கு காலைல, N.S.S கொடுத்த "சாலை விதிகளை மதிப்போம் "ன்னு அச்சடிச்ச ஒரு ஸ்டிக்கர் எடுத்தான். உள்ளங்கை அளவு இருந்த அந்த ஸ்டிக்கர் , "விதி வலியது" ன்னு எழுதியிருந்தது, பாவம் பசங்களுக்கு தெரியல...

காடு  தீவிரமா திட்டத்தை விளக்கினான்.

"டேய், நல்ல கேட்டுக்கோ ! உனக்கு நேரா முன் பெஞ்ச் உட்கார்ந்து இருக்குற பொண்ணு தான் அடுத்து செமினார் எடுக்கப் போகுது. அவ போறதுக்குள்ள, அவ முதுகுல இந்த ஸ்டிக்கரை நான் ஒட்டப் போறேன். அவ முன்னாடி போனவுடன் எல்லாரும் சிரிப்பாங்க... இது தான் இன்னிக்கி Assignment !"

இந்த சாகசத்துல தனக்கும் ஒரு Scope இருக்கும்னு நம்புன கிறுக்கன், Gap கிடா வெட்ட ரெடி ஆகிட்டான்.

      எப்படியாவது Limelight க்கு வர துடிச்சுக்கிட்டு இருந்த காடோட மனநிலை, சமநிலைய தாண்டி Excitement ஓட உச்ச கட்டத்துக்குப் போயிருச்சு. ஆனாலும் அவனோட  Engineer மூளை நிதானமா யோசிக்க ஆரம்பிச்சிச்சு.

"ஸ்டிக்கர் ஒட்டும் போது, தப்பித்தவறி கை, அவ மேல பட்டா அவ்வளவு தான் டின்னு கட்டிடுவாங்க. அதே நேரம் ஸ்டிக்கர் ஐயும் ஒட்டனும் !"

      "வாழ்க்கைல கண்டிப்பா Engineering Drawing எங்கயாவது கண்டிப்பா யூஸ் பண்ணாம இருக்கவே முடியாது!" - First year வாத்தியார் சூடம் அடிச்சு சத்தியம் பண்ணது காடுக்கு டக் ன்னு ஞாபகம் வந்தது.

     

      ஐடியா.... ஐடியா .... ஐயோ, Typical Engineering ஐடியா !" காடு மனசுக்குள்ளயே Calculation போட ஆரம்பிச்சான்.

"அந்த பொண்ணு முதுகுக்கும், பின்னாடி சாயுற பெஞ்ச் க்கும் உள்ள இடைவெளி, அதோட Perspective view, Angle of Deviation, Angle of Elevation, Pivoted View, Actual Distance எல்லாத்தையும் கண்ணாலேயே அளந்தான். ஸ்டிக்கர் ரோட பசைப்பகுதி வெளியே தெரியுற மாதிரி, ரெண்டா மடிச்சு ஒரு பகுதியோட ஒரத்த, அந்த பெஞ்ச் சைடு ஒரு எடத்துல லேசா படுற மாதிரி ஒட்டினான். மடிப்போட இன்னொரு End , மேல் நோக்கி மடிச்ச மாதிரி வச்சான்.

      Correct ரெண்டு நிமிஷம் கழிச்சு, முன்னாடி இருந்த பொண்ணு, பின்னாடி பெஞ்ச் சாய, மடிசிருந்த End, அந்த பொண்ணு சுடிதார்ல , சரியா நடு முதுகு பகுதில ஓட்ட, பெஞ்ச்ல ஒட்டியிருந்த End, ரிலீஸ் ஆகிடுச்சு. கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் சாயும் போது....... "Perfect" .... முழு ஸ்டிக்கரும் பக்காவா ஒட்டி, அந்த பொண்ண ஒரு நடமாடும் Signboard மாத்திடுச்சு. காடுக்கு Mission Success ஆகப்போறத நினைச்சு ஒரே பரபரப்பு.

அந்த பொண்ணு Stage க்கு போகுறதுக்காக காடு டென்ஷனோட Waiting...

அந்த பொண்ணு செமினார் எடுக்குற டைம் வந்துச்சு.. But, Just அந்த பொண்ணு எந்திரிக்கும் போதே, பக்கத்துல இருந்த இன்னொரு பொண்ணு பின்னாடி ஒட்டி இருந்த ஸ்டிக்கரை பார்த்து, அதை எடுத்து விட்டுருச்சு (ச்சே! நாட்ல இந்த உயிர் தோழிகளோட சேவை தாங்க முடியலப்பா !!!! )

      காடு  வேகமா எந்துருச்சு ஏதோ சொல்ல வந்தான். திரும்பி, அந்த உயிர்த்தோழி விட்ட லுக் பார்த்து Off ஆகி அப்படியே உக்கார்ந்துட்டான் ................. ஆனா மேட்டர், இதோட முடியல ...

 

      செமினார் எடுக்குற வெறில இருந்த அந்த பொண்ணு, தன் மேல ஸ்டிக்கர் எப்படி வந்துன்னு ஒரு பெரிய  ப்ராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சிருச்சு... பொண்ணுங்க எல்லாருக்கும் உள்ளூர ஒரே குஷி... "அடியே, எவனோ ஒரு அப்பாவி சிக்கப் போறாண்டி, வாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு காட்டு காட்டுவோம்!" ன்னு தீர்மானம் நிறைவேற்றி  Stage  க்கு வந்து "பின்னாலிருந்து Sticker ஒட்டும் பேமானித்தனமும், பெண்ணினத்தின் பெருந்தவிப்பும் " ன்னு தலைப்பு வச்சு பட்டிமன்றம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க.  .

      "This is too much... ஒரு பொண்ண தொட்டு ஸ்டிக்கர் ஒட்டுறதெல்லாம் ரொம்ப அநாகரீகம். யாரு இத செஞ்சாங்களோ, அவுங்க எல்லார் முன்னாடியும் மன்னிப்பு கேட்கணும், இல்லாட்டி எல்லாப் பொண்ணுங்களும் ஒண்ணா H.O.D ரூமுக்கு முன்னாடி போராட்டம் நடத்துவோம் !" ன்னு பீதிய கிளப்புனாங்க .

 காடோட நிலைமை ரொம்ப பரிதாபமா போகப் போறதப் பார்த்த கிறுக்கன்,

      "ச்சே, காடு இப்போ மாட்டப் போறானே. இப்போ  கொஞ்சம் ரிஸ்க் எடுத்து இவன  காப்பாத்த வேண்டியது, ஒரு ஹீரோவா  நம்ம கடமை இல்லையா.  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... எப்பப்பா, ஹீரோவானலே, இது தான் பெரிய பிரச்சனை, இந்த Friend நாயிங்க பண்ற தப்புக்கெல்லாம் நாம தான் சமாதானம் சொல்லி, பொண்ணுங்கள சமாளிக்க வேண்டி இருக்கு !" ன்னு   அவனா மனசுக்குள்ள ஒரு பெருந்தன்மைய வரவைத்து, பொண்ணுங்க எல்லார்ட்டையும்  Engineering Drawing Idea வைப் பத்தி Explain பண்ணி,

      "பசங்க யாரும் அந்த பொண்ணு நிழலைக் கூட தொடல, Just jolly க்காக பண்ணோம். சீரியஸ் எடுத்துக்காதீங்க " ன்னு மெதுவா விளக்கி பொண்ணுங்கள கூல் பண்ணிட்டான். பொண்ணுங்களும் , " எதிர் பார்த்த அளவு மேட்டர் ஒன்னும் தேறலடீ, சபைய கலச்சுரலாம்"ன்னு சொல்லி வெள்ளைக் கொடி காட்டிட்டு போய்ட்டாங்க.

 

அன்னைக்கு கிளாஸ் முடிஞ்சு  எல்லாரும் கிளம்பிட்டாங்க. காடு மட்டும் ரொம்ப சோகமா , டெஸ்க் மேல தலைய வச்சு படுத்தே இருந்தான் ....கிறுக்கனுக்கு ரொம்ப Feeling ஆகிருச்சு.

      "டேய் காடு, விடுடா. அதான் மேட்டர் சால்வ் ஆகிருச்சுல்ல, இனிமே ஒன்னும் H.O.D ட்ட எல்லாம் போக மாட்டாங்க... பயப்படாதடா !"

காடு, கிறுக்கன் சொன்னத கேட்டு மெதுவா எந்துருச்சு,

      ".கே டா, கொஞ்சம் அந்த பக்கம் திரும்பி நிக்கிறியா ?"

      "எதுக்குடா ?" ன்னு கேட்டுகிட்டே கிறுக்கன்  மெல்லத் திரும்ப, காடு ஓங்கி ஒரு எத்து விட்டான். கிறுக்கன் ஒரு நாலு அடி தள்ளி விழுந்தான்.

      "டேய், அறிவு கெட்ட பரதேசி நாயே ! நான் உயிரை பணயம் வச்சு ஒரு ஐடியா யோசிச்சு ஸ்டிக்கர் ஓட்டினா, எல்லாரும் சேர்ந்து தான் பண்ணோம்னு மன்னிப்பு கேட்பீங்களோ, ஏன்டா காடு தான் பண்ணான்னு சொல்லி இருந்தா பொண்ணுங்களுக்கு உள்ளூர என் மேல ஒரு Grace உருவாகி இருக்கும்...... பஞ்சாயத்து பண்றேன்னு கெடுத்துட்டியே டா, பாவி ....   H.O.D ரூமுக்குப் போக உனக்கு தான்டா பயம். அதனால நீ எஸ்கேப் ஆகுறதுக்காக, தெளிவா சமாதானம் பேசிட்ட. இந்நேரம் மேட்டர் மட்டும் H.O.D ரூமுக்குப் போயிருந்தா, இன்னைக்கு Girls Hostel நான் தான்டா  Hot Topic. என்னோட முயற்சிய எல்லாம் கெடுத்துட்டியே டா , துரோகி !" ன்னு சொல்லி வெறியோட வெளிய கிளம்பிப் போய்ட்டான்.

 

ஒரு ஹீரோ ன்னா, சமயத்துல Friend கிட்ட கூட உதை வாங்க வேண்டி இருக்கும்னு கிறுக்கனுக்கு தெரியும். So, இதுக்கெல்லாம் அவன் Feel பண்ணவே இல்ல . அவனுக்கு இருந்த ஒரே சந்தேகம்.... " நான் பண்ண பஞ்சாயத்தைப் பத்தி, இன்னிக்கி Girls Hostel , பேசுவாங்களா, மாட்டாங்களா ?| 

 

இன்னும் கிறுக்குவோம் ..
அடுத்த வாரம் "பேசாம டாப்பர் ஆகி நல்லவனா ஆகிறவா ? "
source : http://solaiazhagupuram.blogspot.com

3 comments:

Aarthi DayaShankar said...

/////////"அந்த பொண்ணு முதுகுக்கும், பின்னாடி சாயுற பெஞ்ச் க்கும் உள்ள இடைவெளி, அதோட Perspective view, Angle of Deviation, Angle of Elevation, Pivoted View, Actual Distance எல்லாத்தையும் கண்ணாலேயே அளந்தான். ஸ்டிக்கர் ரோட பசைப்பகுதி வெளியே தெரியுற மாதிரி, ரெண்டா மடிச்சு ஒரு பகுதியோட ஒரத்த, அந்த பெஞ்ச் ல சைடு ல ஒரு எடத்துல லேசா படுற மாதிரி ஒட்டினான். மடிப்போட இன்னொரு End , மேல் நோக்கி மடிச்ச மாதிரி வச்சான்.//////////

You have not still forgotten Engineering drawing. Athuke unaku oru oooooooooo podanum.....Very funny episode...Bala ....u r improving day by day as a good writer...Keep it up :)I loved this episode :)

Anonymous said...

your way of writing is very good.you can become a good story writer.

madhan said...

//பொண்ணுங்க எல்லாருக்கும் உள்ளூர ஒரே குஷி... "அடியே, எவனோ ஒரு அப்பாவி சிக்கப் போறாண்டி, வாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு காட்டு காட்டுவோம்!" ன்னு//

அடிப்பாவிகளா!!!

//இந்நேரம் மேட்டர் மட்டும் H.O.D ரூமுக்குப் போயிருந்தா, இன்னைக்கு Girls Hostel ல நான் தான்டா Hot Topic. என்னோட முயற்சிய எல்லாம் கெடுத்துட்டியே டா , துரோகி !" //

என்னா ஒரு லட்சியம்

//அவனுக்கு இருந்த ஒரே சந்தேகம்.... " நான் பண்ண பஞ்சாயத்தைப் பத்தி, இன்னிக்கி Girls Hostel ல, பேசுவாங்களா, மாட்டாங்களா ?| //

பின்னே இருக்காதா!!!

cheerz
-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்