penn manam
27-01-1983
நியூ யார்க்
அன்புள்ள அப்பாவுக்கு,
நானும் சாரதியும் இங்கு நலம்..நீங்களும் அம்மாவும் எப்படி இருக்கிறீர்கள்? நியூ யோர்க்கில் குளிர் கொல்லுகிறது.ஆனால் இவர் சொல்கிறார் நீ இந்த வருஷம் winter குளிர மிஸ் பண்ணிட்டேன்னு. இன்னும் இங்க ஸ்நோ ஆகலை..அதை தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
ஆனா இன்னும் நான் திருநெல்வேலிய விட்டு வந்ததற்காக வருத்தப்படுறேன். உங்களை, அம்மாவை, பக்கத்தாத்து குழந்தைகளை, நெல்லையப்பர் கோவிலை, அம்மாவோட பில்டர் காபியை , எங்க காலேஜை , இருட்டு கடை அல்வாவை , விகடனை, கோலங்களை, வைத்தியை எல்லாத்தயும் ரொம்ப மிஸ் பண்றேன்.
எனக்கு தெரியும் இந்த பேரு உங்களை ரொம்ப சங்கடம் பண்ணும்னு. கவலை படாதீங்க அப்பா, சாரதி தான் எனக்கு பொருத்தமானவர்னு எண்ணி தான் நீங்க எனக்கு அவரை கல்யாணம் பண்ணி வச்சீங்க. அது எனக்கு புரியுது.
வைத்தியை பத்தி நான் சொன்ன அன்னிக்கு அம்மா அழுதது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்குப்பா..எதையும் மறக்கலை நான்.அப்புறமா மெதுவா ரெண்டு நாளைக்கபுறம் நீங்களும் அம்மாவும் பெரிய லிஸ்டே கொடுத்தீங்க - நான் ஏன் வைத்திய கலயணம் பண்ண கூடாதுன்னு. நான் ஒத்துக்குறேன் அப்பா 21 வயசு கல்யாணத்தை முடிவெடுக்குற வயசில்லை தான். அக்ரகாரமே உங்களை கரிச்சு கொட்டிருக்கும். எப்படி ஒரு அசைவம் சாபிடுறவன் வேணு சாஸ்த்ரிகள் பொண்ணை கல்யாணம் பண்ணலாம்னு எல்லாரும் உங்களை கேட்டிருபாங்க. இன்னும் என்னனவோ காரணங்கள். எல்லாம் ஞாபகம் இருக்குப்பா.
ஆனா சாரதி பூணூல் போட்டவர். நீலகண்ட சாஸ்த்ரிகளோட ஒரே பய்யன். என்ஜிநியர்.அமெரிக்கா மாப்பிள்ளை. அதனால தான் உங்களுக்கு சாரதி பெட்டரா தோணினார். நான் குறை சொல்லலை அப்பா, சாரதி ரொம்ப நல்லவர் தான்.
இந்த வருஷம் பொங்கலுக்கு அவருக்கு லீவ் கிடைக்கலை. அதனால பொங்கல் எல்லாம் சிம்பிளா செஞ்சிகிட்டோம், அம்மா சொன்ன சொதி ரெசிபிய செஞ்சு பாக்கலாம்னு நினைச்சேன், ஆனா இங்க தேங்காய் எல்லாம் ரொம்ப விலை ஜாஸ்தி. மேலும் இவரு பொங்கல் அன்னிக்கு வெளிய சாப்பிலாம்னு சொல்லிட்டார். இங்க ஒரு north indian family இருகாங்க. அவரோட ஆபீஸ்ல வேலை பாக்குறவங்க. அந்த குடும்பத்தையும் சாப்பிட கூட்டிட்டு போனோம், எனக்கு ஹிந்தி பேச தெரியாததால நான் மெனு கார்ட்லியே மூழ்கி இருந்தேன். அவங்க நிறைய மீன், இறால், மட்டன் எல்லாம் ஆர்டர் பண்ணாங்க.நான் ஆரஞ்சு ஜூசும் சாண்ட்விச்சும் ஆர்டர் பண்ணேன். அன்னிக்கு தான் தெரிஞ்சு கிட்டேன் சாரதிக்கு மீன், மட்டன், beef தான் புடிச்ச அயிடங்கள்னு.
அப்பா உங்களுக்கு ஒண்ணு தெரியுமா , வைத்தி என்னக்காக அசைவம் சாபிடுரத விட்டார்னு? ஆனா வைத்தி பூணூல் போடலை, நீல கண்ட சாஸ்திரிகளோட பய்யன் இல்லை.
அம்மாவை இனி என்னக்காக பொங்கலுக்கு பட்டு புடவை எடுக்க வேணாம்னு சொல்லிடுங்க. ஒரு வாட்டி இங்க கட்டினேன். இங்க ஒரு கோமாளி மாத்ரி இருந்துச்சு எனக்கு.
அடுத்த வருஷம் தான் எனக்கு H1B விசா எடுக்க முடியும்னு சொல்லிடாங்க. அது வரைக்கும் வேலை பாக்க முடியாது. இப்போ எனக்கு இங்க நேரம் போறது ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. அவரு என்னை நேரத்தை வேஸ்ட் பண்ணாம படின்னு சொல்கிறார். மற்றவை அடுத்த கடிதத்தில்
- சரண்யா
அஞ்சல் வரும்
ஆர்த்தி
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
3 comments:
aarthy very nice ,மண் மணம் மாறாம இருக்கு ஆர்த்தி. அதுவும் சொதியை மத்தவங்களுக்கு அறிமுக படுத்தியதில் சந்தோசம். i love that. என்னடா சாப்பாடு பத்தி மட்டும் பேசுறாளேன்னு தப்பா நினைக்காதே.உன் கடிதமும் சொதி போல இருந்தது.
this letter is something different.. nice.. getting matured as writer.. keep going.... i guess next letter is also to her father.. right aa?
//ஆனா இன்னும் நான் திருநெல்வேலிய விட்டு வந்ததற்காக வருத்தப்படுறேன். உங்களை, அம்மாவை, பக்கத்தாத்து குழந்தைகளை, நெல்லையப்பர் கோவிலை, அம்மாவோட பில்டர் காபியை , எங்க காலேஜை , இருட்டு கடை அல்வாவை , விகடனை, கோலங்களை, வைத்தியை எல்லாத்தயும் ரொம்ப மிஸ் பண்றேன்.//
superb list !
//ஆனா சாரதி பூணூல் போட்டவர். நீலகண்ட சாஸ்த்ரிகளோட ஒரே பய்யன். என்ஜிநியர்.அமெரிக்கா மாப்பிள்ளை. அதனால தான் உங்களுக்கு சாரதி பெட்டரா தோணினார். //
life-ல எல்லாமே calculation ஆகி போச்சுல்ல
//அப்பா உங்களுக்கு ஒண்ணு தெரியுமா , வைத்தி என்னக்காக அசைவம் சாபிடுரத விட்டார்னு? ஆனா வைத்தி பூணூல் போடலை, நீல கண்ட சாஸ்திரிகளோட பய்யன் இல்லை.//
" மணம் மாறுமோ மலரில் ஏது மாறாது அந்த வாசம்,
மனம் போகுமோ நெஞ்சில் ஏது போகாது இந்த பாசம்"
//அம்மாவை இனி என்னக்காக பொங்கலுக்கு பட்டு புடவை எடுக்க வேணாம்னு சொல்லிடுங்க. ஒரு வாட்டி இங்க கட்டினேன். இங்க ஒரு கோமாளி மாத்ரி இருந்துச்சு எனக்கு.//
சங்கடமான சந்தோசம்.....
-மதன்
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.