பெண் மனம்
11-02-1985
நியூ யார்க்
அன்புள்ள அப்பாவுக்கு,
நான், சாரதி, கோகுல் மூவரும் நலம்.கோகுல் மழலை பேசுகிறான். நேத்திக்கு தாத்தானு சொன்னான். அம்மா போன வாரம் போன் பேசும் போது பக்கத்தாத்து சீதாவுக்கு கல்யாணம் ஆயிடிச்சுன்னு சொன்னா. சாரதா மாமி கிட்ட அவளோட அட்ரஸ் வங்கி கொடுக்க சொல்லுங்க. போன வாரம் ராஜி கிட்ட பேசினேன். நல்ல வேளை அவ கிட்டேயாவது போன் இருக்கு.
இப்போ அவளுக்கு நாலு மாசம் ஆகுதுன்னு சொன்னா. வைத்திக்கு கல்யாணம் ஆகிடிச்சுன்னும் சொன்னா.அவரோட மனைவி அவங்க மாமா பொண்ணுன்னு கேள்வி பட்டேன். அவங்க அம்மா பேச்சை தட்டாத பிள்ளை அவர்.
ஆவணி அவிட்டம் எப்படி போச்சுது அப்பா? சாரதியோட அம்மா போன முறை நான் வந்தப்ப எங்கிட்ட பூணூல் கொடுத்து விட்டாங்க. ஆனா சாரதி அன்னிக்கு போஸ்டன் போயிட்டாரு. எப்படி இருந்தாலும் அவரு அதை போடிருகவும் மாட்டரு. நான் அவரை பூணூல் போட்டு பார்த்ததே இல்லை, எங்க கல்யாணத்தப்போ தவிர. இப்போ கோகுல் தான் அதை எல்லாம் வச்சி விளையாடிண்டு இருக்கான். அவனுக்கு அது வெறும் கயிறு தான். அவன் காலத்தில இது எல்லாம் அவனுக்கு தெரியாமலே போய்டும்னு பயமா இருக்கு அப்பா.
சாரதி அவன்கிட்ட இங்கிலிஷ்ல மட்டும் தான் பேசறார். அப்போ தான் அமெரிக்கால ஈசியா இருக்கும்னு சொல்கிறார். ஆனாலும் நான் அவனுக்கு அப்பப்ப பாரதியார் கவிதைகள் வாசிச்சு காட்றேன்.அது எனக்கு வைத்தி பரிசா கொடுத்தது தான். இன்னும் முதல் பக்கத்தில அவரோட கை எழுத்து இருக்கு.
அதை பாத்துட்டு சாரதி வைத்தி யாருன்னு கேட்டார். நான் எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். பதறாதீங்க அப்பா. என்னை வீட்டை விட்டு வெளிய போன்னு அவரு சொல்லலை. அவரு ரொம்ப நல்லவரு அப்பா. ஒரு கேள்வி கூட என்னை கேக்கலை. அவரு அதை ரொம்ப ஈசியா எடுதுகிட்டாரு.
அப்போ தான் அவரு அவோரட girl friend பத்தி சொன்னாரு. அமெரிக்காவுக்கு வந்த புதுசுல அவரு கூட படிச்சா பொண்ணாம் அவ. பேரு alice. ரெண்டு பெரும் லவ் பண்ணி 3 மாசம் ஒண்ணா வாழ்ந்து பார்த்தாங்களாம். அப்புறம் 2 பேருக்கும் ஒத்து வரலேன்னு தனி தனியா போய்டாங்க. Alice ஒரு முறை வீட்டுக்கு கூட வந்தா. ரொம்ப நல்ல பொண்ணு.
அம்மாவை ஒரு வருசத்துக்கு தேவையான சாம்பார் பொடி, புளி கொழம்பு பொடி எல்லாம் ரெடி பண்ணி வைக்க சொல்லுங்க. என் friend சுதா மெட்ராஸ் வரா. அதை சீனு கிட்ட கொடுத்து மதராஸ்ல சுதாவை பாத்து திரும்பி வரும் போது அவ கிட்ட கொடுத்து விட சொல்லுங்க.
அஞ்சல் வரும்
சரண்யா
நட்புடன்
ஆர்த்தி
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
5 comments:
ஆவணி அவிட்டம் எப்படி போச்சுது அப்பா? சாரதியோட அம்மா போன முறை நான் வந்தப்ப எங்கிட்ட பூணூல் கொடுத்து விட்டாங்க. ஆனா சாரதி அன்னிக்கு போஸ்டன் போயிட்டாரு. எப்படி இருந்தாலும் அவரு அதை போடிருகவும் மாட்டரு.
aarthy ,how is it possible for you to write all these things without having much idea about them.superb!!
அப்பப்ப பாரதியார் கவிதைகள் வாசிச்சு காட்றேன்.அது எனக்கு வைத்தி பரிசா கொடுத்தது தான். இன்னும் முதல் பக்கத்தில அவரோட கை எழுத்து இருக்கு.
so touching aarthy!
keep the nice work going...
//அது எனக்கு வைத்தி பரிசா கொடுத்தது தான். இன்னும் முதல் பக்கத்தில அவரோட கை எழுத்து இருக்கு. //
"அந்த பொன்னான காலங்கள் கண்ணீரில் கரையுது ,
ஏரிக்கரை பூங்காற்றே ......."
-மதன்
ஆர்த்தி நீ எப்படி அய்யர் ஆத்து பொண்ணு ஆன? அப்படியே அய்யராத்து வாசனை மணக்கிறது உன் எழுத்துகளில் ... மிகவும் அருமை ...
Hey shiva,
Thanx for ur comments :)
Enna romba naala blog pakkame kanom??
Hey Madhan,
Ennoda ovoru episode kum i want u to give a relative song link :)..Thanks for ur comments.
Hey Maha and Bala,
Thanks for ur encouraging comments.
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.