ஹலோ ,செல்லங்களா !
எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.எல்லோரும் எப்பிடி இருக்கீங்க ?பொங்கலுக்கு வீட்டை ஒதுங்க வைக்கிற வேலை இருந்ததால உங்களை எல்லாம் கஷ்டப்படுத்த முடியலை. எனக்கு ரொம்ப வருத்தம்தான். ஆனா உங்களுக்கு எல்லாம் ஒரு சந்தோஷமான விஷயம், என்னோட இந்த நைனிதால் பயண கட்டுரையை இதோட முடிச்சுக்கலாம்னு பார்கிறேன். உங்களை எல்லாம் இனிமே எப்பிடி படுத்தலாம்னு நான் ரொம்ப யோசிக்கணும்.ஆனா படுத்தாம மட்டும் விட்டுருவேன்னு கனவுலயும் நினைக்காதீங்க. அது மட்டும் நடக்காது.போன தடவை எதுல விட்டேன்?
ஆங் !! ஆமா டெல்லி வந்து சேர்ந்ததொட விட்டேன். வழக்கம்போல அவங்க frind சந்தோஷ் வந்து pickup பண்ணிகிட்டாங்க .அதுனால நோ பிரச்சினை. i had a nice sleep. பொதுவா நான் தூங்கற நேரம் எல்லாமே ஷங்கர்க்கு சந்தோஷமான நேரம்தான். he is enjoying with his friend. எப்பிடியோ பொழுது ஓடி போச்சு. எனக்குதான் சப்ன்னு இருந்தது.
மறுநாள் ,panikkar travelsla ஆக்ரா ,மதுரா tripkku book பண்ணி இருந்தோம்.எந்த பிரச்சினையும் இல்லாம ,காலைல கிளம்பிட்டோம்.முதல்ல தாஜ்மஹால் போய சேர்ந்தோம். ஷங்கர்க்கு தரைல கால் இல்லை. heis too much romantic.நான் romancena kilo என்ன விலைன்னு கேக்கிற ஆளு. ஷாஜகான் அங்க நின்னு இருப்பரோ,இங்க நின்னு இருப்பாரோன்னு yaegapatta கேள்வி கேட்டு கிட்டே இருந்தாப்ல .இதுல வேற அங்க என்ன எழுதி இருக்குது,இங்க என்ன எழுதி இருக்குதுன்னு ஒரே torture .எனக்கு ஹிந்தியே தகாராறு ,இந்த லட்சணத்துல கல்வெட்டு எல்லாம் உஉருதுல இருக்குது.நானும் சளைக்காம கதைய விட்டேன். எவ்வளவு நேரம்தான் நல்லவள நடிக்கிரதுங்க ?
ஷங்கர் எங்க ரெண்டு பேரையும் ஷாஜகான் ,மும்தாஜ் rangekku கற்பனை பண்ணிட்டு இருந்த நேரத்தில,ஷங்கர் எனக்கு இப்போவே பாணி பூரி சாபிடனும் போல இருக்குதுன்னு சொன்னேன்.ஷங்கர் ரொம்பவே நொந்து போய்ட்டாங்க. ஆனா உணமைலயே எனக்கு பாணி பூரி சாபிடனும்போல இருந்துச்சுங்க .மும்தாஜ் கேட்டுஇருந்தா ஷாஜகான் உடனே வாங்கி கொடுத்து இருப்பாருன்னு நான் அழ ஆரம்பிக்க வேற வழியே இல்லாம வாங்கி கொடுத்தாங்க.ஏங்க நீங்களே சொல்லுங்க ! அந்த தாஜ்மஹால் ல அப்பிடி என்னதான் இருக்குது ?வெறும் கல்லறை .வௌவால் நாத்தம் வேற தாங்க முடியலை. நாங்க லவ் பண்ணும்போதே இதை மாதிரி நிறைய கோக்கு மாக்கு பண்ணி இருக்கேன் .அது எல்லாம் நேரம் இருந்த கண்டிப்பா எழுதுறேன்.
tajmahal நல்ல பார்க்க முடியலயேன்னு ஒரு சோகத்தோட ஷங்கரும் ,இன்னொரு பாணி பூரி சாப்பிட முடியாம போச்சேன்னு வருத்தத்துல நானும் பஸ்க்கு வந்து சேர்ந்தோம். அப்புறும் மதுரா போனோம். எனக்கு சாதரணமாவே கோயில் போறது பிடிக்கும்.அதுவும் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்ன கேக்கவே வேணாம்.எனக்கு சாமியே வந்துரும்!!! ஷங்கருக்கும் பிடிக்கும்.ஆனா என்னை மாதிரி கிறுக்கு கிடையாது.நான் பக்தி அதிகமாகி அருள் வாக்கு சொல்லுற அளவுக்கு எல்லாம் போயிருவேன். மதுரா ல தயிர் நல்ல இருக்கும்,.கூட வந்த எல்லோரும் குடிச்சாங்க .மகா ,சுவாமி பார்கிறதுக்கு முன்னாடி நாமும் குடிக்கலாம் ,எனக்கு பசியா இருக்குதுன்னு ஷங்கர் சொல்லவும் , எனக்கு சாமி வராத குறை, நம்ம தயிர் சாப்பிட்டுகிட்டு இருந்த கோயில் பூடிருவாங்க, சாமிய பாக்கலைனா எனக்கு உயிரே போயிரும் ,பசிய பொறுத்துக்கோங்க,ஏன் நான் இல்லையா? எனக்கும்தான் பசிக்குது,நான் போறுதுக்கலையா?(பாணி பூரி என் வயித்துக்குள்ள இருந்து சத்தம் கொடுத்தது. )சாமிதான் முக்கியம், பசியா முக்கியம் ? அப்படி இப்படின்னு டயலாக் பேசி கோவிலுக்கு இழுத்துட்டு போய்ட்டேன். வேரோட பிடுங்காத குறையா நான் சாமி கும்பிட்டு வர்றதுக்குள்ள ,பஸ் எடுத்துட்டான் வேற வழியே இல்லாம ,ஷங்கர் தயிர் ஆசைய தியாகம் பண்ணிட்டு பஸ்ல ஏறினார் .
அப்புறும் திரும்ப டெல்லி வந்து சேர்ந்தோம். மறுநாள் டெல்லி லோக்கல் ட்ரிப் .பெரிசா நான் எந்த சாதனையும் பண்ணலை. மறுநாள் சாயங்காலம் ஏழு மணிக்கு madrasku train. same tamilnadu express. ஒன்னுக்கு பாத்து தடவை luggage எல்லாம் சரி பார்த்துட்டேன். எனக்கு overconfidenceyae வந்துருச்சு. நாங்க இருந்தது குதுப்மினார் பக்கத்துல .டாக்ஸி பிடிச்ச இருபத்து நிமிஷத்துல station போயிறலாம் .சோ டாக்ஸி வந்தது.மகா ,டிக்கெட் செக் பண்ணியாச்சா ? old delhiya ,new delhiyaanu பார்துகிட்டியா? ன்னு ஷங்கர் கேக்க ,நான் பார்த்தாச்சு ,பார்த்தாச்சு ன்னு வடிவேல் rangekku விட்டேத்தியா பதில் சொன்னேன்.(என்னை பொறுப்பான பொண்ண மாத்துறேன் பேர்வழின்னு ஷங்கர் இந்த மாதிரி விபரீதமா முயற்சி எடுக்கறது உண்டு.,நாங்க எல்லாம் பொறுப்பு கூடவே மூணு வருஷம் காலேஜ்ல ஒன்னா படிச்சும் திருந்தாத ஆளுன்னு ஷங்கர்க்கு தெரியாது ) அந்த நேரம் பார்த்து சந்தோஷ் வேற நியூ டெல்லிதான் நினைகிறேன் ,எதுக்கும் நீ செக் பண்ணிக்கோ மகான்னு சொல்ல ,நான் எப்பவோ செக் பண்ணியாச்சுன்னு சொல்லி வைச்சேன்.(எனக்கு தீடிர்னு அநியாத்துக்கு என் மேல ஓவர் confidence வந்துருங்க ) . அஞ்சு அரைக்கு டாக்ஸி வந்தது .நியூடெல்லி ஸ்டேஷன் ந இருபத்து நிமிஷத்துல போயிறலாம்,அதுனால மெதுவா கிளம்புங்கன்னு சந்தோஷ் சொல்லவும் , நான் டிவி பார்க்க ஆரம்பிச்சுட்டேன் .ஷங்கர் திரும்ப திரும்ப டிக்கெட் கொடு நான் செக் பண்ணட்டும்னு சொல்ல எனக்கு ரொம்ப கோபம்,. என்ன இது சின்ன புள்ளதனமா இருக்குது.முதல்ல பொண்டாட்டி சொன்ன நம்பனும்,இப்பிடி சந்தேக படகூடதுன்னு நான் lecture அடிக்கவும் ஷங்கர் ,அமைதி ஆகியாச்சு.
ஓவரா பேசிட்டமொன்னு நினைப்புல ,நான் மெதுவா டிக்கெட் எடுத்து பார்த்தேன் .என் டிக்கெட்ல சனியன் உக்காந்து சிரிச்சுகிட்டு இருந்தான்.ஆமாங்க boarding station ஓல்ட் டெல்லிதான் .ஷங்கருக்கு என்ன பண்றதுன்னே தெரியலை.அப்போ மணி ஆறு பத்து .அந்த டாக்ஸி டிரைவர் மனசு வச்சதால ஸ்டேஷன் வந்து சேர்ந்தோம். he was not driving ,he was flying. வழக்கம் போல வண்டி கண்டு பிடிச்சு ஏறும்போது, வண்டி நகர ஆரம்பிச்சுருச்சு .ஷங்கருக்கு நெற்றி கண்ணை திறப்பதை தவிர வேற வழி தெரியலை. நான் சென்னை வந்து சேரும் வரை வாய் திறக்கலையே! என் மேல உள்ள கடுப்புல என்னை central staionla உள்ள saravana bavankku கூட கூட்டிட்டு போலங்க !!!
everybody is saying that we have gone for a honeymoon trip .அப்பிடியா? உங்களுக்கு என்ன தோனுது?நான் next summer குளுமனலி போலாம்னு நினைகிறேன்!!!நீங்க என்ன நினைகிறீங்க?

3 comments:

பாலகுமார் said...

//ஆனா உணமைலயே எனக்கு பாணி பூரி சாபிடனும்போல இருந்துச்சுங்க .மும்தாஜ் கேட்டுஇருந்தா ஷாஜகான் உடனே வாங்கி கொடுத்து இருப்பாருன்னு நான் அழ ஆரம்பிக்க வேற வழியே இல்லாம வாங்கி கொடுத்தாங்க.//

hi, the article was fine, enjoyable ...

madhan said...

//ஏங்க நீங்களே சொல்லுங்க ! அந்த தாஜ்மஹால் ல அப்பிடி என்னதான் இருக்குது ?வெறும் கல்லறை .வௌவால் நாத்தம் வேற தாங்க முடியலை.//

Thanks for ur True Comments!!!

// உங்களை எல்லாம் இனிமே எப்பிடி படுத்தலாம்னு நான் ரொம்ப யோசிக்கணும்.ஆனா படுத்தாம மட்டும் விட்டுருவேன்னு கனவுலயும் நினைக்காதீங்க. அது மட்டும் நடக்காது.//

Keep it Up

-Madhan

Aarthi DayaShankar said...

நாங்க லவ் பண்ணும்போதே இதை மாதிரி நிறைய கோக்கு மாக்கு பண்ணி இருக்கேன் .அது எல்லாம் நேரம் இருந்த கண்டிப்பா எழுதுறேன்.


- Ungolodathu love marriage nu inga niraya perukku theriyathu.. Athai pathi eluthu...


A very nice and funny way of narrating... I enjoyes MAHA THE EXPLORER... Aduthu maha enna avatharam edukka pora ...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்