பெண் மனம்

05-03-1992

நியூ யார்க்

அன்புள்ள அப்பா,

நாங்கள் நால்வரும் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம். 3 மாசம் இந்தியால இருந்துட்டு இங்க வந்து திருப்பி பழைய வாழ்கைக்கு போக கஷ்டமா இருக்கு. கோகுலும் அர்ச்சனாவும் வடை, பாயசம் , துணில அவிச்ச இட்லி, வாழை இலை. பணியாரம் , மைசூர் பாகு எல்லாம் கேக்குறாங்க. சாரதி இங்க வந்ததில சந்தோஷ படுறார்.

ஊர்ல என்னோட ஒரு செட் புக்ஸ் விட்டு வந்துட்டேன் பா. நம்ப வீட்ல இல்லாட்டி அது சாரதி வீட்ல இருக்கும். எனக்காக அடுத்த முறை நான் வர வரைக்கும் அதை பத்திர படுத்தி வச்சிருங்க பா. அது எல்லாம், எனக்கு ரொம்ப முக்கியம் , என்ன அது எனக்கு வைத்தி பரிசா கொடுத்தது.

சாரதா மாமி கிட்ட இருந்து வைத்தியோட அட்ரஸ் எனக்கு கிடச்சுது அப்பா. இப்போ சென்னைல இருக்கார். அவருக்கு எழுதினேன். வைத்தி இப்போ சென்னைல ஒரு பிரபலமான cardiologist னு தெரிஞ்சு ரொம்ப பெருமைய இருந்துச்சு பா. அவரோட phone நம்பர் கொடுத்தாரு. இத்தனை வருஷம் கழிச்சு என்கிகிட்ட பேசினதுல அவருக்கு ரொம்ப சந்தோசம்.அவரோட பொண்ணுங்களுக்கு என்ன பேரு தெரியுமா? சரண்யா , சகானா.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அப்பா, அவரு இன்னும் சைவம் தான். அவரு என்னை இழந்ததால அசைவத்துக்கு மாறலை. அவரு எங்கிட்ட இன்னும் பாட்டு பாடுறேனான்னு கேட்டார். கோகுலும் , அர்ச்சனாவும் பாடுவங்களான்னும் கேட்டார். அவர்கிட்ட ஒரு சந்தோஷமான பெருமையான தகப்பனை உணர முடிஞ்சுது, அவரோட பொண்ணுங்க 2 பேரும் பாட்டும் , டான்சும் கத்துக்க்கிரதா சொன்னார். அப்போ தான் எனக்கு ஒரு காலத்தில நான் பாட்டு படிபேன்ங்கரதே நியாபகம் வந்துச்சு. நான் ஏன் அதுக்கப்புறம் பாடலை ன்னும் , ஏன் என் குழந்தைகளை பாடவோ ஆடவோ சொல்லி கொடுகலைங்கறதும் எனக்கு தெரியலை.

ஆனா நான் எப்போ திருநெல்வேலிய விட்டு வந்தேனோ அபோவே இதெல்லாம் ஆழ புதைசுட்டேன், ஏன்னா என்னோட முதல் ரசிகரான வைத்திய விட்டதால. அந்த phone call கு அப்புறம் "அலைபாயுதே கண்ணா" பாட முயற்சி பண்ணேன் . ஆனா முடியலை, practice இல்லாததால மட்டும் இல்லபா , என் கண்ணில தேங்குன கண்ணீராலயும் , என் தொண்டை கட்டுனதாலயும்.

அப்புறம் ஒரு நாள் சாரதி கிட்டேயும் குழந்தைங்க கிட்டேயும் பாடி காட்டுனேன். கோகுலுக்கு ரொம்ப புடிசுருந்துது, ஆனா அப்பாவும் பொண்ணும் நான் எப்போடா முடிப்பேன்னு இருந்தாங்க. . அடுத்த தடவை என் friend யாரவது இந்தியா வந்த அவங்க கிட்ட சுருதி பொட்டி கொடுத்து விடுங்க அப்பா.. திருப்பியும் பாடலாம்னு இருக்கேன்.

அஞ்சல் வரும்,

சரண்யா


நட்புடன்,

ஆர்த்தி

8 comments:

N.Balajhi said...

I have been reading your 'Pen manam' series. I found it nice, refreshing and good when I started reading them. But now you seem to have got stuck with one theme, that of highlighting the loss of Vaidhi by 'Saranya'. Generally such a theme can't last more than one or two letters. Your perseverance with this paints the character bit sadistic as she keeps pricking her father for the mistake he had done. It's wrong on his part to marry off his daughter without her consent but then her daughter's unforgiving attitude doesn't comes across good either. At least you could have provided perspectives of Father and Vaidhi characters.

Hope you don't mind this feedback. Good luck.

பாலகுமார் said...

//அவரோட பொண்ணுங்களுக்கு என்ன பேரு தெரியுமா? சரண்யா , சகானா.//

சகானா யாராக இருக்கும் ? :)

Aarthi DayaShankar said...

ada paavi...:)

Aarthi DayaShankar said...

Hi Balaji,
I dont think i know you.. Thank for your blog visit and valuable comments...I completely agree with your view...But i want you to wait and read the next 3 episodes also :)..Thank You and Keep reading :)

madhan said...

// வைத்தி இப்போ சென்னைல ஒரு பிரபலமான cardiologist னு தெரிஞ்சு ரொம்ப பெருமைய இருந்துச்சு பா. அவரோட phone நம்பர் கொடுத்தாரு. இத்தனை வருஷம் கழிச்சு என்கிகிட்ட பேசினதுல அவருக்கு ரொம்ப சந்தோசம்.//

"இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போது பொறப்போம்
ஒன்னோடு ஒன்னா கலந்து அன்போட இருப்போம்,
அது கண்காம போச்சுதுன்னா என் ராசாவே
நான் வெண்மேகமாக விடிவெள்ளியாக வானத்தில் பொறந்திருப்பேன்,
என்னை அடையாளம் கண்டு நீ தேடி வந்தா அப்போது நான் சிரிப்பேன்.
பொன்மானை தேடி .................................................................................."

//Your perseverance with this paints the character bit sadistic as she keeps pricking her father for the mistake he had done. It's wrong on his part to marry off his daughter without her consent but then her daughter's unforgiving attitude doesn't comes across good either.// - By N.Balajhi

ஏனுங்க பாலாஜ்ஹி ( பெயர் சரிதானா?!...:) )
நீங்க சொல்றது ரொம்ப சரிங்க ....ஏதோ அந்த புள்ளையோட (சரண்யா) அப்பாரு தான் புத்தி கித்தி கெட்டு போயி சட்டு புட்டுன்னு அவளுக்கு வேற ஒரு எடத்துல ஒரு கண்ணாலம் கட்டி வச்சி போட்டாரு .... ஏதோ அந்த புள்ளை கோவத்துல அப்பனை ஒன்னு ரெண்டு வார்த்தை நறுக்குன்னு கேட்டாக்க பரவயில்லைங்க....அட அது படிச்ச கழுதை ...எடுத்ததுக்கெல்லாம் இப்படி அப்பனை குத்தம் குறைன்னு ஊசியால குத்திகிட்டே இருக்கிறது நல்லவா இருக்குது ....அவ உசுரேன்னு நெனச்ச அந்த பயல விட்டுட்டு இருக்குற குறைய விட வேறென்ன பெருசா எது அந்த புள்ளைய கவலை பட வச்சிட முடியும்.. .அதனால அப்பன் மேல உள்ள கோவத்த எல்லாம் மனசுக்குள்ளேயே வச்சுருக்கிறது ஒன்னும் பெரிய அளவுல கஷ்டம் இல்லைங்கிறேன்....

//I completely agree with your view...But i want you to wait and read the next 3 episodes also :)..// - By Aarthi.

இனி பார்க்கலாம் "பெண்மனம் " எப்படி போகிறதென .... 'பெண்மனம்" அருமையான வாழ்க்கை கண்ணாடி ....வாழ்த்துக்கள் ஆர்த்தி !!!!

-மதன்.

N.Balajhi said...

Hi Aarthi

Thanks for publishing my comments. No you don't know me. I came to this blog via solaipuram blog which was listed on feedjit sometime back. I find the stories at both blogs nice and good so started frequenting.

Hi Madhan

How do you people type in Thamizh?

madhan said...

Hello Balajhi,

type in tamil ,

http://www.google.com/transliterate/indic/Tamil#


Example: amma, nilaa


-Madhan

N.Balajhi said...

நன்றி மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்