எல்லா புகழும் இறைவனுக்கே!

எல்லா புகழும் இறைவனுக்கே!
---------------------------------------

















"ஆஸ்கார் தமிழன்" என்று பட்டம் கொடுத்து A.R.ரகுமான் -i வாழ்த்தி வரவேற்று மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருக்கிறது சென்னையும், ஒட்டு மொத்த தமிழகமும்.

SLUMDOG - கள் எல்லாம் வடக்கத்திய செய்தி சேனல் களுக்கு தீடீரென SLUMGOD ஆக மாறிப்போனது.(எல்லாம் ஆஸ்கார் செய்யும் மாயம் தான்)

"ஏலே சாமி நம்ம பயடா" என்று சாமி படத்தில் ஒரு வில்லன் சொல்லுவாரே, அது மாதிரி கலைஞர் , A.R.ரகுமான் -i " சிறுபான்மை இனத்திலிருந்து ....என்று விஷமாய் ஆரம்பித்து அவர் சென்னையின் செல்லப்பிள்ளை" என்று பாசத்தோடு முடித்திருக்கிறார். (பாசம் என்றதும் அவர் சொத்தில் பங்கு கொடுப்பாரா? கட்சியில் பதவி கொடுப்பாரா? என்றெல்லாம் யாரும் கேட்கபிடாது)

Kolywood,Bolywood, Tolywood, Malluwood போன்ற இந்தியாவின் எல்லா சினிமா "கட்டை" களுக்கும் எட்டாக்கனியாக தொடர்ந்து கொண்டிருந்த ஒரு கதைக்கு (சத்தியஜித்ரே-க்கு அடுத்து) A.R.ரகுமான் முற்றுபுள்ளி வைத்திருக்கிறார்.

யார் உங்களுக்கு சொன்னது? ஆஸ்கார் தான் தரமான சினிமாவின் அளவுகோல் என்று .....என்று அநேகம் பேர் அடித்துகொண்டிருக்கும் வேலைகளும் தொடருகின்றன. ....அடியேனும் அதில் ஒரு வாதி...சிலரிடம் இதுபற்றி வளவள என்ற போது அன்பர்கள் உதிர்த்த வார்த்தைகள் உங்கள் கவனத்திற்கு...

* முதலில் "SLUMDOG MILLIONAIRE" ஒரு இந்திய படமே கிடையாது , இதற்க்கு ஆஸ்கார் கிடைததற்க்காக ரொம்ப ஆடவேண்டாம்.
*நாம் நமது மக்களுக்காக சினிமா எடுக்கிறோம், அமெரிக்கர்கள் எதிர் பார்க்கும் தரத்திறக்காக படம் எடுப்பது நம்மை நாமே கேவல படுத்தி கொள்வது மாதிரியானது. என்றாவது நம் பிராந்திய மொழி சினிமாக்களுக்கு ஆஸ்கார் கிடக்கும் , அப்போது பெருமை பட்டு கொள்ளுவோம்.
*இங்கேயே "குடத்துக்குள் விளக்காய்" சிலர் இருக்கும் போது , ஆங்கில படத்தில் பணி ஆற்றினார் என்ற ஒரே காரணத்திற்க்காக A.R.ரகுமான் க்கு ஆஸ்கார் கிடைத்ததை பெரிதாக எடுத்து கொள்ள முடியாது.
*எது எப்படியோ ஆஸ்கார் நம்ம ஆளு ஒருத்தன் வாங்கியிருக்கான் ....அமெரிக்க தரம் என்ன வேறு எந்த நிலைக்கும் தமிழன் தகுதி ஆனவன் தான் என்று உலகிற்க்கு எடுத்து காட்டி உள்ளார். இது நாம் பெருமை பட வேண்டிய விஷயம்.
*அட போய்யா, "லகான்" படத்திற்கே ஆஸ்கார் கொடுத்திருக்க வேண்டியது, சதி பண்ணிட்டானுங்க....."லகான்" ஒப்பிடும் போது ஸ்லம்டாக் மில்லினர் எல்லாம் ஒன்றும் கிடையாது.
* "கன்னத்தில் முத்தமிட்டால் " க்காக ஆஸ்கார் கொடுத்திருக்கலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க ,

"எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று தமிழில் ஆஸ்கார் மேடையில் முழங்கிய A.R.ரகுமான் , சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் "பாக்ஸ் " ஆபீஸ் செய்த விளம்பர உத்தி தான் ஸ்லம்டாக் மில்லினர் -i ஆஸ்கார் அளவில் உயர செய்தது , தமிழ் படங்களும் சரியான நேர்த்தி உடன் எடுத்தால் ஆஸ்கார் பெற முடியும்

மேலும்,


இளையராஜா இசை ரொம்பப் பெரிய விஷயம். சர்வதேச அளவில் பெரிய ரீச் இருக்கு அவரோட இசைக்கு. சிம்பொனி, திருவாசகம்னு நிறைய புராஜக்ட் பண்ணியிருக்கார் சர்வதேச அளவில்.அவர் ஆஸ்கருக்கு அப்பாற்பட்டவர். அவரது இசையும் அப்படித்தான்... அவருக்கும் சர்வதேச வாய்ப்பு வந்து, அந்த இசை பாக்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்தின் மூலம் அகாடமிக்கு கொண்டு போகப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.


இது முதல் படி தான், இனி வருவோரும் ஆஸ்கார் விருதுகள் வாங்க வேண்டும், அவர்களுக்கு இந்த விருதினை Dedicate செய்கிறேன் என்றார்.

A.R.ரகுமான் சொன்ன கடைசி வரிகளை கேட்கும் பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது. (உபயம்: சன் டிவி )

"உலகையே வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு புயல் தமிழுக்காக கொஞ்சம் தென்றலாய் தவழ்ந்து ....." என்று பாரதிராஜா சொல்லியது போல் தமிழில் அவர் தொடர்ந்து அவர் நிறைய்ய இசை அமைக்க வேண்டுமென எல்லோரும் போல் நானும் நினைத்து கொள்கிறேன். ...திரையிசையில் மட்டு மல்லாது தனித்தொகுப்பு பாடல்களிலும் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

(" ரோஜா" வில் ஆரம்பித்து என்கிறார்கள் சிலர்... ஆனால் முதலில் திருடா திருடா படத்திற்குதான் A.R.ரகுமான் முதலில் music compose செய்ததாக சொல்லி கொள்கிறார்கள்....."தீ தீ தித்திக்கும் தீ" நினைவிருக்கிறதா?)

எல்லோருடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.

ஜெய் ஹோ !!!

-மதன்

6 comments:

Balajhi said...

மதன்

சத்யஜித்ரேக்கும் முன்னாடி ஆஸ்கார் ஒரு இந்தியருக்கு கிடைச்சிருக்கு. அவங்க பேரு பானு ஆத்தையா. காந்தி படத்துக்கு காஸ்ட்யும் டிசைன் ஆஸ்கார் இவங்களுக்கும் இன்னும் ஒருத்தருக்கும் கிடைச்சது. இவங்கதான் முதல் இந்திய ஆஸ்கார் விருது வென்றவர்.

http://en.wikipedia.org/wiki/Bhanu_Athaiya

ரஹ்மானுக்கும், பூக்குட்டிக்கும் வாழ்த்துக்கள்.

பாலகுமார் said...

ராசா,
கலக்கிட்ட போ .... நீயே ஆஸ்க்கர் வாங்கின மாதிரி , ஒரு மெதப்புல தான் எழுதி இருக்க ... நல்லா இருக்கு டா !
............................
//யார் உங்களுக்கு சொன்னது? ஆஸ்கார் தான் தரமான சினிமாவின் அளவுகோல் என்று .....//
ஆஸ்க்கர் என்பது அமெரிக்கர்களின் அளவுகோல், அவ்வளவுதான் .... இனி உலக சந்தையில் இந்திய இசையை விற்க, இந்த விருது கொஞ்சம் உதவும் ...

//"எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று தமிழில் ஆஸ்கார் மேடையில் முழங்கிய A.R.ரகுமான்......//
இதை நிச்சயம் பெருமைப்பட வேண்டிய நிகழ்வாகக் கொள்ளலாம்.. :)

//(பாசம் என்றதும் அவர் சொத்தில் பங்கு கொடுப்பாரா? கட்சியில் பதவி கொடுப்பாரா? என்றெல்லாம் யாரும் கேட்கபிடாது)//
இங்கெல்லாம் கண்கள் பணிக்க, இதயம் இனிக்க வாய்ப்பில்லை என்பதை நீயே அறிவாய் , உடன்பிறப்பே !

//ஜெய் ஹோ !!! //

இதைப் பற்றி நண்பர் ஒருத்தர்ட்ட பேசிட்டு இருக்கும் போது , " நான் இன்னும் அந்த பாட்டை கேட்கலை" ன்னு சொன்னேன். அவர் என்னை ஒரு புழுவை பார்க்குற மாதிரி பார்க்குறார் ... ( பேசாம, சூப்பர்ண்ணே ! ஆஸ்க்கர் ன்னா ஆஸ்க்கர் தான் .... அமெரிக்கா காரவங்க சொன்னா, சரியா தான் இருக்கும் னு சொல்லி இருக்கணுமோ ?!?!?!?!)

எது எப்படி இருந்தாலும், "எங்கள்" ரஹ்மான் என்று பூரிப்படைகிற பெருமைக்காக """ஜெய் ஹோ !!""" ... வாழ்த்துக்கள் ரஹ்மான் .... :)

madhan said...

Mr N. பாலாஜ்ஹி,

Satyajit Ray ஆஸ்கார் வாங்கிய பிறகு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கார் என்ற நோக்கத்தில் தான் எழுதி இருந்தேன். யார் முதலில் வாங்கினார்கள் என்று அல்ல.....

உண்மையில் எனக்கு யார் ஆஸ்கார் இந்தியாவிலிருந்து முதலில் வாங்கினார்கள் என தெரியாது. கடைசியாக Satyajit Ray தான் ஆஸ்கார் ரொம்ப நாளைக்கு முன்னாடி வாங்கினார் என்றும் , அதன் பிறகு ஆஸ்கார் வாங்க இந்தியா படாத பாடு பட்டுகொண்டிருப்பதாக தான் மனதில் பதிந்திருந்தது. அதனால் தான் அவ்வாறு எழுதினேன் போல. ...தவறாக அர்த்தம் வருவதாக இருந்தால் மன்னிக்கவும்...

நீங்கள் சொன்ன பிறகு
Bhanu Athaiya - 1982 களிலும் , Satyajit Ray - 1992 களிலும் என்றும் பதிவாகிறது.

தகவலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி .

-மதன்

Balajhi said...

Not at all Madhan. You can just take that as an information. Even I learnt it very recently when I searched Oscar awardees for Gandhi.

Aarthi DayaShankar said...

Nice one madhan...Hats off...
But what i feel is there are definitely much better songs than Jai Ho which AR Rehman has done...

Anonymous said...

//But what i feel is there are definitely much better songs than Jai Ho which AR Rehman has done//

நீங்க சொல்றது சரிதான் ஆர்த்தி

"முக்காலா முக்காபலா ......." கேட்கிற போது இருக்கும் உற்சாகத்தையும் , " கண்ணாளனே....." தருகிற சுகத்தையும் மறக்க முடியுமா?

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்