பெண் மனம்

18-11-2007
நியூ யார்க்


அன்புள்ள அர்ச்சனா,
அம்மா உனக்கு திடீர்னு கடிதம் எழுதறது உனக்கு புதுசா இருக்கலாம், அதுவும் இந்த இன்டர்நெட் ஈமெயில் காலத்தில. என்ன பண்றது கடிதம் எழுதற சுகம் எனக்கு இன்னும் இன்டர்நெட் ல வரல டா. நீ அமெரிக்காலயே பிறந்து வளர்ந்த செல்ல பொண்ணு.

நீ பிறந்தப்போ அம்மா உன்னை பாத்து அப்பா கிட்ட என்ன சொன்னேன் தெரியுமா ..நம்ப வீட்டுக்கு லக்ஷ்மி வந்தாச்சு னு சொன்னேன். நீ அப்படியே என் ஜாடைல இருக்குறதை பாத்து பாத்து பெருமை எனக்கு.

நேத்திக்கு தான் நீ பிறந்த மாதிரி இருக்குடா, அதுக்குள்ள நீ படிச்சு முடிச்சு வேலைக்கும் போய், தனியா போய்ட்டே. அமெரிக்கா கலாச்சாரம். எனக்கு நீ எங்களோட வீட்ல இருக்கணும் னு தாண்டா ரொம்ப ஆசை.

கோகுல் போன வருஷம் தனியா போனப்போ நெஞ்சை அடைச்சுது. ஆனா உங்க அப்பா ஒரே வார்த்தைல அவன் வாழ்க்கைல நீ தலை இடாதே னு சொல்லிட்டாரு. அவனுக்கு போகவே இஷ்டம் இல்லை , ஆனா உங்க அப்பா தான் , தனியா இருந்த தான் நல்லது , அது இதுனு சொல்லி அவனை குழப்பி அனுப்பி வச்சிட்டாரு. என்ன கலாச்சாரமோ, எனக்கு இன்னும் புரியவே இல்லை .
மாசத்தில 2 தரம் எங்களை வந்து பாக்குறீங்க.

உனக்கு சமைக்க வேற தெரியாது. அடிக்கடி burger சாப்பிடாதே. தினமும் தலைக்கு குளிக்கிறியா? எவ்ளோ அழகான முடி டா உனக்கு , அதை போய் boy cut வெட்டி வச்சிருக்கே. சொன்னா mummy இது தான் வசதியா இருக்கு னு சொல்லுவே.

காதில ஒரு கம்மல் போட்டா என்னடா? கழுத்தில ஒரு செயின் கிடையாது.. என்ன தான் fashion o ? அம்மாவுக்கும் ரொம்ப நகை போட பிடிக்காதுன்னு உனக்கு தெரியும், ஆனா சின்னதாவாவது எதாவது போட்டுகோடா..ஒண்ணும் இல்லாம உன்னை பார்க்கறதுக்கு நல்லா இல்லை.
Jeans and T shirt தான் வசதி, i agree கண்ணா, ஆனா அப்பப்போ சுடிதார், சாரீ, gagra choli எல்லாம் போடுடா. உன்னை அழகு பார்க்கிரதில தாண்டா எங்களுக்கு சந்தோசம் .

போன வாட்டி இங்க வந்தப்போ சந்தன் சட்டர்ஜீ பத்தி சொன்னே.. அந்த பய்யனை உனக்கு பிடிச்சிருக்கிறது தப்புன்னு அம்மா சொல்லவே இல்லை. நல்ல வேளை அவன் ஒரு இந்தியன் settled in America னு தான் நான் சந்தோஷ படுறேன். ஆனா நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ, Living together எல்லாம் எனக்கு சரின்னு தோணலை டா .

உங்க அப்பாவுக்கு நான் இப்படி கடிதம் எழுதறது தெரிஞ்சாலே ரொம்ப சத்தம் போடுவார். ஆனா என் செல்ல குட்டி எதையும் யோசிச்சு தான் பண்ணுவேன்னு அம்மாவுக்கு நம்பிக்கை இருக்கு. இதை நீ நல்ல யோசிச்சு முடிவு எடு. நீ ஏற்கனவே யோசிசிருப்பெனு எனக்கு தெரியும், இருந்தாலும் நீ இதை பத்தி மறுபடியும் நல்ல யோசிச்சு செயல் படணும்னு அம்மா நினைக்கிறேன்.

இந்த மாதிரி விஷயங்கள்ல எல்லாம் மனசு காயப்பட்டா அது ரொம்ப நாளைக்கு வலிக்கும் டா. நீயும் சந்தனும் நல்ல பேசி முடிவு எடுங்க. ஆனா living together கலாச்சாரம் எனக்கு பிடிக்கலை டா. கோகுல் என்னடான்னா அம்மா எனக்கு இந்தியா கலாச்சாரம் படி தான் ஒரு பொண்ணு வேணும் , அதனால நீயே எனக்கு இந்தியால ஒரு பொண்ணை பாரு, அவளையே நான் கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்றான். இத்தனை நாள் இங்க வளந்துட்ட அவனுக்கு ஒரு இந்திய மனைவி ஒத்து வருவாளான்னும் எனக்கு புரியலே, ஏன்னா அவனுக்கு இந்தியா கலாச்சாரம் மேல craze ஜாஸ்தி, ஆனா இயல்பு வாழ்க்கை வேற கனவுகள் வேற.அது புரிஞ்சிருக்கானான்னு எனக்கு தெரியலே. உங்க அப்பா என்னடான்னா அவனை சத்தம் போடுறாரு.

உன் வாழ்கைய நீ முடிவு எடுத்த தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு டா. ஆனா அது நல்ல படியா இருக்கணுமேன்னு தான் என் கவலை.
அடுத்து வீட்டுக்கு எப்போடா வருவே..தீபாவளிக்கு கூட நீ வரலே, கோகுல் வந்திருந்தான், அவனுக்கு எப்போவும் தீபவளி ஸ்நானம் , பக்ஷணம் பட்டாசு எல்லாமே இஷ்டம். கிறிஸ்துமஸ் லீவ் காவது வருவியா டா?

அஞ்சல் வரும்
சரண்யா

நட்புடன்
ஆர்த்தி

8 comments:

isakki said...

very nice aarthy!!! every letter carries an interesting message.keep it up yaar.

madhan said...

அது ஏனோ தெரியவில்லை, " இப்படி இருந்தால் தான் நன்றாக இருக்கும் " என்பது சரண்யா விற்கு மட்டுமல்ல , சாதரண பட்ட எல்லோருக்குமான ஒரு வித ஏக்கம். ...ஏக்கம் என்று சொல்லும் போதே நம் மனது நமக்கு தெரியாமலே அதை எப்படியாவது நினைத்ததை நிறைவேற்றி விட வேண்டும் என்று வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது....saranyavirkum அது தான் ...முதலில் காதல் மீது ஏக்கம் ஆனால் இப்போது இது கலாச்சாரத்தின் ஏக்கம் ....கலாச்சார இடைவெளியின் ஏக்கம்....

"கலாச்சார ஏக்கம்" & "Living Together" என்று சும்மா இதை எடுத்து கொள்ள முடியுமா? ...'அடத்தூ அமெரிக்கா காரனுங்கள' என்று சரண்யா போன்றோரும் ..'ச்சீ இந்தியாகரனுங்களா' என்று பிறரும் சொல்கிற வேளைகளில் ...உங்க ஊர்களில் நீங்கள் அப்டி வேணும்னா இருங்க, ஆனா இந்த ஊர்ல நாங்க இப்படித்தான் இருப்போம்னு இருசாரரும் பேசுகிற வேளைகளில் .."நாகரிகமான சமூகம்" & "மேம்பட்ட சமூகம்" போன்ற சொற்களை இதனுடன் பொருத்தி பார்த்தால்....!!!.........பழங்குடியினர்/மலைகளில் வசிக்கும் சில சமூக மக்களின் கல்யாணம் கட்டுப்பாடு போன்ற வகையாரக்களை இதனுடன் பொருத்தி பார்த்தால் ....!!!!.........அட போங்கப்பா!!!!!
(கோகுல் , இந்தியா பெண் வேணும் என்று கேட்பதில் நிறைய்ய்ய்ய ஆச்சரியம்)

முதல் இரண்டு அத்தியாங்களில் காதலின் சுவாரசியத்தையும் & வாழ்க்கையின் எதிர்பார்ப்பு களையும் ,,,,அதன்பின்பு காதலின் வலி & வாழ்க்கையின் ஏமாற்றங்களையும் சந்தித்து சகித்த "பெண் மனம்" ....இப்போது தனது பிள்ளைகளின் எதிர்காலம் & கலாச்சார நடைமுறைகள் என்று .......வெவ்வேறு தளங்களில் பயணிப்பதில் சுவாரசியமும் & ஈடுபாடும் "பெண் மனம்" மீது எனக்கு அதிகமாயிருக்கிறது....வாழ்த்துக்கள் ஆர்த்தி......."பெண் மனம்" எப்போது பரிபூரண சந்தோஷ மன நிலையையும் , நிம்மதியையும் அடையுமோ? ......

-மதன்

பாலகுமார் said...

really very nice flow aarthi...
congrats ....

//இத்தனை நாள் இங்க வளந்துட்ட அவனுக்கு ஒரு இந்திய மனைவி ஒத்து வருவாளான்னும் எனக்கு புரியலே, ஏன்னா அவனுக்கு இந்தியா கலாச்சாரம் மேல craze ஜாஸ்தி, ஆனா இயல்பு வாழ்க்கை வேற கனவுகள் வேற.அது புரிஞ்சிருக்கானான்னு எனக்கு தெரியலே. //

a true concern ....


a nice episode altogether, keep going !!!

isakki said...

"கோகுல் , இந்தியா பெண் வேணும் என்று கேட்பதில் நிறைய்ய்ய்ய ஆச்சரியம்)"இதுல ஆச்சர்ய பட ஒன்னுமே இல்லை மதன் .வெளிநாட்டுல பிறந்து வளர்ந்தாலும் ஒரு இந்திய ஆண்மகனுக்கு இந்திய பொண்ணுதான் மனைவியா வரணும்னு ஆசை இருக்கும்.அவதான் அவனுக்கு அடங்கி ஒடுங்கி இருப்பா . he can dominate her.
கணவனே கண்கண்ட தெய்வம்னு இருப்பா. கணவன் எங்க(?) போயிட்டு வந்தாலும் நாலு நாள் அழுதுட்டு அப்புறும் தாலியை எடுத்து கண்ணுல ஒதிக்குவா .
அப்பிடியே தப்பி தவறி ஒன்னு ரெண்டு பொண்ணுங்க கொஞ்சம் யோசிச்சாலும் நம்ம சமுகம் அவங்க தலையில் ஆணி அடிச்சு உக்கார வைத்திடும் .
அதுனால கோகுல் யோசிக்கிரதுல எந்த வியப்பும் இல்லை.அவன் மாதி யோசிச்சு இருந்தாதான் ஆச்சரியம் .எல்லா நெறி முறைகளும் பொண்ணுக்கு மட்டும்தான்ன்னு நம்ம சமுகம் உறுதியா சொல்லுது!!!

Aarthi DayaShankar said...

மகா ,
ஒவொருவருக்கும் ஒவொரு கருத்து இருக்கு, அது கருத்து சுதந்திரம், அதை பற்றி நான் comment பண்ண விரும்பலை..ஆனா என் கதையில் வரும் கோகுலுக்கு இந்தியா பத்தி ஒரு விதமான nostalgia இருக்கு.
நாம எல்லாம் பட்டண வாழ்கைக்கு பழக்கப்பட்ட பின்பு எப்போடா ஊருக்கு போவோம்னு நினைக்கிறோம் இல்லியா அதை மாதிரி..ஆனா உண்மை என்னன்னா நம்ப இனி ஊருக்கு போனாலும் நமக்கு இந்த பட்ட்ண வாழ்க்கை தான் சரியா வரும் ..ஏன்னா ஊர்ல இருக்குற வரைக்கும் நாம எப்போடா வேலை கிடைச்சு சென்னை போவோம் , பெங்களூர் போவோம் , டெல்லி போவோம் , அமெரிக்கா போவோம்னு நினைச்சோம், ஆனா இப்போ திருப்பி எப்போ ஊருக்கு போவோம்னு ஏங்குகிறோம். அது தான் நிதர்சனமான உண்மை...அது தான் சரண்யா வின் கவலையும் கூட...எப்போ நினைச்சது கிடக்குதோ அப்போவே அதுல உள்ள interest போய்டும் , அது தானே மனித இயல்பு...
Gokul's point of view is அம்மா மாதிரி நல்ல கலாச்சாரம் மிக்க மனைவி அமெரிக்கால பார்க்கிறது கஷ்டம், அவனோட எண்ணம் என்னன்னா இந்தியால தான் இப்படி பெண்கள் இருப்பாங்க , அதனால இந்தியா மனைவி வந்தால் நல்லதுனு நினைக்கிறான். அம்மாவை மாதிரி மனைவி வேணும்னு தான் 80 சதவிகிதம் ஆண்கள் நினைகிறார்கள். காதலிக்கிறது யாரை வேணா காதலிக்கலாம் , ஆனா மனைவின்னு வரும் பொது அவ தன் தாய போல இருக்கணும்னு தான் எல்லா ஆண்களும் விரும்பறாங்க.
Day today life ல ஆண்கள் அவர்களுக்கே தெரியாம தங்களுடைய தாயை தேடுகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.. சாப்பிடும் போது முக்கியமாக. :)
கலையில எழுந்தவுடன் காபி குடிப்பதில் தொடங்கும் அவர்களின் தேடல் தூங்கும் போது "பால் குடிச்சிட்டு படேண்டா" னு சொல்ற அந்த நாளின் கடைசி நொடி வரை தொடர்கிறது அவர்களுக்கே தெரியாமல். இதை படிக்கிற ஆண்கள் இந்த கருத்து உண்மையான்னு சொல்லுங்க. கோகுல் அதை உணர்ந்து இருக்கிறான், எனவே தான் அவனுடைய தேடல் விதய்சமாக இருக்கிறது.
வேற எந்த எண்ணத்திலேயும் நான் இந்த கதையில கொண்டு வரலே. மன்னிக்கவும் மகா..hope u take it in a right sense .. உன் கருத்து ஒரு வேளை உண்மையா கூட இருக்கலாம் , ஆனா நான் அதை மனதில் வைத்து நிச்சயமாக இந்த கதையை எழுத வில்லை.

ஆனால் அர்ச்சனாவின் தேடல் வேறு வகை. அவள் தன்னை புரிந்து கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கிறாள். மேலும் அவளால் இந்தியா கணவனின் எதிர் பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதிலும் தெளிவாக இருக்கிறாள்..இதை சரண்யாவும் உணர்ந்தே இருக்கிறாள்.

அதனால் கோகுல் இந்தியா பெண்ண வேணும்னு கேட்பதில் ஆச்சர்யமும் , அர்ச்சனா ஒரு அமெரிக்கா வாழ் இந்தியாயருடன் சேர்ந்து வாழ நினைப்பதில் அதிர்ச்சியும் தேவை இல்லை :)

மதன் ,
என்னுடைய 2 episode கு பாட்டு வரிகள் நீ கொடுகாததில் எனக்கு வருத்தமே....
நட்புடன்
ஆர்த்தி.

பாலகுமார் said...

aarthi,
even u can transform ur comment, also as an letter .. :)

sathya said...

nice one...aarthi, i m reading all ur post..all r really good....keep it up..most of girls thinking like this .... all the best..

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்