Penn manam

09-10-2000

நியூ யார்க்

அன்புள்ள சாரதிக்கு,

நான் ஏன் இந்த கடிதம் எழுதுறேன்னு எனக்கே புரியலே.. ஏதோ திடீர்னு தோணிச்சு..நீங்க 2 மாசம் Boston டூர் போனதாலே, தனிமையில கொஞ்சம் குழம்பி போயட்டேனானு தெரியலே. அமெரிக்கா மாத்ரி இடம் என்னை மாதிரி திருநெல்வேலி பட்டிகாடுக்கு லாயக்கு கிடையாது. இந்த தனிமை என்னை கொன்னுரும்.

கோகுலும் அர்ச்சனாவும் எப்போவும் போல அவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருகாங்க. எனக்கு தான் அது முடியலே. எப்போவும் அடுத்தவங்களுக்காக வாழ்ந்தே பழக்க பட்டுட்டேன். நீங்க என்னை என் வாழ்கைய வாழ வைக்க எவளவோ முயற்சி ப்ண்ணுனீங்க. என்னால தாங்க மாற முடியல. சின்ன வயசுல இருந்து அப்பா அம்மாவுக்காக வாழ்ந்தேன். அப்புறம் உங்களுக்காக. இப்போ குழந்தைகளுக்காகவும் வாழுறேன்.

உங்களை கல்யாணம் பண்ணி வந்த புதிசில எல்லாமே ஆச்சர்யமா இருந்துச்சுங்க. எங்க வீட்ல எல்லாம் அம்மா தான் முதல எழுந்திரிக்கணும். காபி போட்டு அப்பாவை எழுப்ப்ணும்.ஆனா இங்க வந்த புதுசுல நான் jet lagla தூங்கிட்டு இருந்தபவும் நீங்க என்னை எழுப்பாம நீங்களே எழுந்து காபி போட்டு குடிச்சு, எனக்கும் சேர்த்து காபி போட்டு வச்சி, சாப்பாடு செஞ்சு வச்சது முதல் ஆச்சரியம். எங்க வீட்ல எல்லாம் நாங்க எங்க அப்பாவோட சேர்ந்து உக்காந்து சாபிடதே இல்லை.. ஆனா இங்க நம்ப நாலு பெரும் ஒண்ணா தான் உக்காந்து சாபிடுறோம், நான் பரிமாறுகிறது இல்லை, அது ரெண்டாவது ஆச்சரியம்.

இந்த ஊரு காத்தா , என்னனு தெரியல, ஆனா எப்போவும் யாரு விஷயத்துலேயும் யாரும் தலை இட கூடாதுங்கறது மூணாவது ஆச்சரியம், நீங்க ALice பத்தி சொல்லும் பொது சொன்ன வார்த்தைகள் இவை. கல்யாணத்துக்கு முன்னாடி யாரும் எப்படியும் இருந்திருக்கலாம், ஆனா இப்போ வாழ்கைல ஒழுங்கா இருகேன்னனு மட்டும் பாருன்னு சொன்னீங்க. அதே மாதிரி நான் வைத்தி பத்தி சொன்னபவும் ஈசியா எடுத்துகிடீங்க. ஆனா எங்க பழக்கம் எது வரை இருந்துச்சுன்னு நீங்க கேக்க தவறலை.

உங்களுக்கு ஞாபகம் இருக்கா, என்னனு எனக்கு தெரியலே, நான் ஒரு Engineering gradute நு. இங்க வந்த புதுசில எனக்கு வேலை பாக்கணுமா வேண்டாமா , எதுவுமே கேக்கலை , H1B apply பண்ணீங்க. ஆனா அதுக்கப்புறம் , கோகுலும் அர்ச்சனாவும் பிறந்ததாலே வேலை மறந்தே போச்சு. எனக்கு பாட ரொம்ப புடிக்கும் , ஆனா எனக்கு சங்கீதம் தெரியுமா என்னங்க்ரதே உங்களுக்கு தெரியுமான்னு எனக்கு தெரியலே, அப்புறமா நான் இங்க பாட்டு கிளாஸ் ஆரம்பிச்சப்புரம் , உங்க நண்பர்கள் "Oh wow , ur wife voice is very sweet" னு சொன்னபோ ஒரு நாள் எங்கிட்ட கேட்டீங்க , நீ எவ்ளோ நாள் சங்கீதம் படிச்சிருக்கே , இங்க எல்லாம் அரை குறையா எதாவது பண்ணா உள்ள தூக்கி போட்டுறுவான்னு சொன்னீங்க. அது என்னோட நல்லதுக்காக தான் சொன்னீங்க, எனக்கு தெரியும்.

எனக்கு இந்த amreica தனிமை ஒத்து வரலேன்னு , ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ஒரு நாள் உங்க கிட்ட சொன்னப்போ, நீங்க எங்கிட்ட சொன்ன வார்த்தைகள் - ஒண்ணொன்னு அமெரிக்கா வரணும்னு துடியா துடிச்சுகிட்டு இருக்கு, நீ ரொம்ப கொடுத்து வச்சவ , அமெரிக்கால இருக்கோம்னு பெருமை படு னு சொன்னீங்க. வாரம் அஞ்சு நாளும் சுவத்தை பாத்துக்கிட்டு , weekend மட்டும் potluck party, get together, தமிழ் சங்கம்னு வாழ ரொம்ப கஷ்டமா இருக்குங்க. தினம் சாயும்காலம் 4 மணி ல இருந்து 6 மணி வரைக்கும் தான் பாட்டு கிளாஸ் நால கொஞ்சம் மூச்சு விட்டுட்டு இருக்கேன்

அன்பான கணவன் , அருமையான குழந்தைகள், அமெரிக்கா வாழ்க்கை , ஆனாலும் எனக்கு நிறைவில்லை வாழ்கையில. என் மனம் விரும்பறது , கணவனுக்கு முன்னாடி காலைல எழுந்திருச்சு, குளிச்சு முடிச்சு , வாசலில கோலம் போட்டு, எல்லாருக்கும் காபி ரெடி பண்ணிட்டு , சுப்ரபாதம் சத்ததோட உங்களை எல்லாரையும் எழுப்பி , குளிக்க போக சொல்லி சத்தம் போட்டு, குளிச்சு முடிச்சு வரதுக்குள்ள, காலை சாப்பாடு ரெடி பண்ணி, உங்களை ஆபிசுக்கு அனுப்பி , குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பி, நீங்க மதியம் வரதுக்குள்ள உங்களுக்கு சாப்பாடு செஞ்சு , என் கையால உங்களுக்கு பரிமாறி, ஸ்கூலுக்கு போய் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து, மதியம் எப்படா வரும்னு ஒரு தூக்கம் போட்டு, சாயங்காலம் நீங்களும் குழந்தகளும் வரதுக்குள்ள நான் கிளம்பி, ஒரு டிபன் பண்ணி வச்சி, சாயுங்காலம் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்து , நிலவொளில எல்லாரும் அன்னைக்கு நடந்தவை பத்தி பேசிகிட்டே இரவு சாப்பட முடிச்சு , அடுத்த நாள் விடியலுக்காக ஏங்கி தூங்க போறது தாங்க எனக்கு புடிச்சிருக்கு.

நூல் புடவைல கூட நீ அழகா இருக்கேன்னு நீங்க சொல்றதை தான் நான் விரும்பறேன், என்ன வேணுமோ நீயே வாங்கிக்கோன்னு சொல்றதுல எனக்கு சந்தோஷமே இல்லிங்க. நானே போய் பட்டு புடவை வாங்கினாலும் ,நீங்க வாங்கி கொடுக்குற நூல் புடவைல தான் என் சந்தோசம்.

அசிங்கமாவே இருந்தாலும் நாளுக்கு ஒரு தரம் நீ ரொம்ப அழகுன்னு சொன்னிங்கன்னா என் நாள் அன்னிக்கு சந்தொஷமாயிடும். உடம்பு சரி இல்லன்னா , என்னமா ஆச்சு உடம்புக்கு னு நீங்க கேக்குற ஒரு வார்த்தைல நான் சரி ஆயிடுவேன், பெரிய ஆஸ்பத்திரிக்கு போவோம்னு நீங்க நினைக்கிறது தேவை இல்லிங்க. நீங்க நினைக்கலாம் , நாம எவ்ளோ செஞ்சாலும் இவளுக்கு திருப்தியே வராதுன்னு , என்னங்க பண்றது இல்லாதத தானே மனசு நினைச்சு ஏங்குது எப்போவும்.

அஞ்சல் வரும்

சரண்யா

நட்புடன்,

ஆர்த்தி.

2 comments:

Balajhi said...

அப்பா சாரதி, சரண்யா மாதிரி ஒரு பொண்ணு மனைவியா அமைய நீ ரொம்ப குடுத்து வச்சிருக்கணும். இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப அபூர்வம்.

----

Good one Arthi. Out of curiosity, how many girls / women really think like Saranya in real life, in these times, especially in cities.

isakki said...

நானே போய் பட்டு புடவை வாங்கினாலும் ,நீங்க வாங்கி கொடுக்குற நூல் புடவைல தான் என் சந்தோசம்.


what happened to saranya aarthy?why she was thinking like this?

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்