மகா அழைக்கிறார், எல்லோரும் இங்க வாங்க !!!!

வேணாம் கிட்ட வராதீங்க!!" அப்படீன்னு பாலா சொன்ன ஒரே வார்த்தைக்காக நான் blog பக்கமே வரலை(அவ்வளவு respect!) .ஆனா என்னை மன்னிச்சுரு பாலா வேற வழியே இல்லை ,இப்பிடியே போன நம்ம blog பக்கம் யாருமே வராம போயிருவாங்க .அப்புறும் counter ஏறவே ஏறாது. so please excuse me my dear friend!!! ஆனாலும் ஆர்த்திக்கு உன் மேல அநியாயத்துக்கு மரியாதை ,நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அவ எழுதுற தொடரை கூட தொடரமா இருக்காளே ,நட்புக்கு மரியாதை !!! 

சரி நான் என்ன எழுதுவது ?நாட்டு நடப்பு பத்தி எழுத மதன் அளவுக்கு எனக்கு G.K பத்தாது (?) பார்த்தீங்களா ,நம்ம blogkku வந்த நிலமைய ? பெரிய ஆளுங்க எல்லாம் எழுது இருந்தா உங்களுக்கு என் post yai படிக்க வேண்டிய நிலைமை வந்து இருக்காது. so sad!!

so சமீபத்திய என் சாதனைகளை நீங்க கேட்டுதான் ஆகணும். முக்கியமா மதனின் ( cartoonist ) "வந்தார்கள் வென்றார்கள் " படித்தேன்.அப்புறும் ரொம்ப நாளைக்கு அப்புறும் நல்ல படங்கள் பார்த்தேன். வெண்ணிலா கபடி குழு ,ஜோதா அக்பரும் இதில் அடக்கம்.வர்ஷிகவுக்கு (என் சீமந்த புத்திரி ) அவங்க அப்பா வேலை பாக்கிற company பேரை சொல்லி கொடுத்தேன். என் பேர் ,அவங்க அப்பா பேர் எல்லாம் சொல்லி கொடுத்தேன் .(she caling me isakki ) . 

வெண்ணிலா கபடி குழு ரொம்ப நல்ல படம். என்ன முடிவுதான் சொதப்பி இருந்தாங்க. யாரையாவது சாகாடிச்சதான் நல்ல படம் போல ? ஐயோ சரண்யா மோகன் அதுதாங்க கதையின் நாயகி , she rocks !!! அடுத்த ரேவதியா வரதுக்கான எல்லா அறிகுறிகளும் இருக்குது. கதா நாயகன் கூட நல்ல தேர்வு. படம் போறதே தெரியாம போகுது .படத்தில ஒவ்வொரு கதாபாத்திரமும் கவனத்தை ஈர்த்து இருக்காங்க .சொல்ல போன எல்லோரும் கதையின் நாயகர்கள்தான். சோ எல்லோரும் கண்டிப்பா பாருங்க !!! 

ஜோதா அக்பர் ,ரொம்ப நாளா ஹ்ரித்திக் ரோஷன் நடிச்சு இருக்கன்கிற வெறுப்புல பாக்காம இருந்தா படம்.ஆமாங்க , i just hate him. ஆனா ஷங்கர் force பண்ணினதலே ஐஷ்வர்யாக்காக பார்த்தேன். you wont believe me,its such a nice movie. ஐயோ இப்போ அக்பர்யை நினைத்தால் ஹ்ரித்திக் என் நினைவுக்கு வர்ற உருவம்,அக்பர் மாதிரி வாழ்ந்து இருந்தான்னு தன் சொல்லணும். he justified the role. aishvarya வழக்கம் போல அழாக இருந்தா. சொல்லிக்கிற மாதிரி நடிச்சு இருந்தா. they got nice chemistry. 

ஆனா வந்தார்கள் வென்றார்கள் படிச்சுட்டு ஜோதா அக்பர் பார்க்க கூடாதுங்க,. நான் தேடி தேடி பார்த்தும் ஜோதா பாய் பத்தி ஒரே ஒரு வரிதான் இருந்தது. ஜோதா பாய் ஒரு நல்ல கற்பனை கதை. அக்பர் ஒன்றும் ஹ்ரித்திக் அளவுக்கு பார்ப்பதற்கு smart இல்லை என்பதும் தெரிந்தது. ஆனா இஸ்லாமிய மன்னர்களில் I.Q அதிகமான மன்னர் அக்பர் என்பது தெரிந்தது.எனக்கு ஏற்கனவே வரலாறு மேல அளவு கடந்த ஆர்வம்.அந்த ஆர்வத்து க் கு இந்த புக் கொஞ்சம் தீனி போட்டுதுன்னு தான் சொல்லணும். முக்கியமா இந்த மாதிரி வரலாறு படிக்கும்போது நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பேன். ரொம்ப நல்ல படைப்பு. நீங்க எல்லோரும் ஏற்கனவே படிச்சு இருப்பீங்கன்னு தெரியும்.இருந்தாலும் என் சந்தோசத்தை உங்க கிட்ட பதிர்ந்துக்குரதில எனக்கு ரொம்ப சந்தோசம். மீதி விஷயத்தை மெதுவா பேசலாம். bye friends

2 comments:

பாலகுமார் said...

மகா,
நல்ல கோர்வையான டைரிக் குறிப்பு.

//வேணாம் கிட்ட வராதீங்க!!" அப்படீன்னு பாலா சொன்ன ஒரே வார்த்தைக்காக நான் blog பக்கமே வரலை//
ச்சே, என்ன ஒரு மரியாதை .....
இப்போ சொல்றேன்,,, அடிக்கடி எழுதுங்க... :)

உங்க பொண்ணுக்கு வாங்குற "Layz" பாக்கெட் எல்லாம், நீ தான் காலி பண்றியாமே ......

"வந்தார்கள் வென்றார்கள்" பற்றி தனியா ஒரு விமர்சனம் (?) எழுதேன் ..... ( நம்ம பதிவை எல்லாம் Cartoonist மதன் படிக்க மாட்டார் , சும்மா தைரியமா எழுது !!! ).

//முக்கியமா இந்த மாதிரி வரலாறு படிக்கும்போது நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி இருப்பேன்.//

இப்படி தான் சமீபத்துல விஜய் டி.வி ல ஒரு அம்மா , தான் தான் ஜோதா அக்பர் ன்னு சொன்னாங்க .... பார்த்து ... புத்தகம் படிக்கும் பொது கொஞ்சம் வெளிய இருந்தே படிங்க, புத்தகத்துக்கு உள்ளேயே போயிறாதீங்க....

நல்லா இருந்தது மகா .... வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள் ...

Aarthi DayaShankar said...

Hey maha,
Welcome back again to blog...Ippo thaan blog summa athiruthulla , nee vantha puram...
I second bala's opinion on vanthargal vendrargal...Please do write abt it :)

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்