பெண் மனம்

13/05/2009
நியூ யார்க்.

அன்புள்ள நண்பர்களுக்கு,
ஆமாங்க..இந்த கடைசி கடிதம் உங்களுக்கு தான். நான் இன்று தற்செயலாக என்னுடைய மேசையை சுத்தம் செய்து கொண்டிருந்த போது நான் இத்தனை வருடங்களாக எழுதிய என் மன கிடக்கையை, என் அத்தனை அஞ்சல் செய்யப்படாத கடிதங்களையும் பார்த்து கொண்டிருந்தேன். அனைத்தும் எதாவது ஒரு வகையில் என்னை பாதித்த தினங்களில் எழுதியதே. அனால் எழுத துணிவிருந்த எனக்கு யாருக்கும் அதை அஞ்சல் செய்ய துணிவில்லை.

அப்பா..........
உங்களுக்கு எழுதிய கடிதங்களில் எனக்கு வைத்தியால் அவர் மேலிருந்த கோபங்களே வெளிப்பட்டது. உங்களுக்கு பயந்து அல்ல, ஆனால் உங்களை காயப்படுத்த விரும்பாததால் கடிதங்களை உங்களுக்கு அஞ்சல் செய்ய வில்லை. எனக்கு தெரியும் அப்பா, உள் மனதில் உங்களுக்கு தெரியும் வைத்தி மிகவும் நல்லவர், எனக்கு பொருத்தமானவர் என்று, அதனாலேயே உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருந்ததும் எனக்கு தெரியும். இன்று நீங்கள் இறந்து 2 வருடங்களும் , வைத்தி சென்னையில் கார் accident இல் இறந்து 6 மாதங்களும் ஆன நிலையில் இதை எல்லாம் மீண்டும் வாசித்து பார்கிறேன், ஏன் என்று எனக்கு புரியவில்லை அப்பா.

வைத்தி........
உங்களுக்கு எழுதியவை உங்களை வாழ்நாள் முழுதும் புண்படுத்தும், நான் பதில் ஏதும் சொல்லாவிடிலும் கூட நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் அஞ்சல் செய்ய வில்லை.

சாரதி .........
உங்க கிட்ட என் மனசுல உள்ளதை சொல்ல என்னைக்குமே எனக்கு தைரியம்வந்தது இல்லை. நீங்க ரொம்ப நல்லவரு, ஆனா நம்ப ரெண்டு பேருக்கும் frequency match இல்லை. நான் ரொம்ப தப்புன்னு நினைக்கிற சில விஷயங்கள சுலபமா தப்பே இல்லைன்னு பேசுவீங்க , நான் ரொம்ப சரின்னு நினைக்கிற சில விஷயங்களை தப்புன்னு சொல்லி கோபப்படுவீங்க. மொத்ததில எது சரி எது தப்புங்கற குழப்பம் எனக்கு வந்துடுச்சு, அதனால மனசில உள்ளதை நான் தைரியமா உங்க கிட்ட சொல்ல முடியல. ஆனா எனக்கு நீங்க கொடுத்த சுதந்திரம் ஏராளம். நான் தான் உங்களுக்கு பொருத்தமானவள் அல்ல. உங்க அலைவரிசையில் உள்ள எதாவது ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி இருந்தால் உங்கள் இருவர் வாழ்கையுமே அற்புதமாக இருந்திருக்கும், என்னை மனித்து விடுங்கள் சாரதி..

கோகுல் & அர்ச்சனா ..................
உங்க அப்பா எப்போவுமே அடுத்தவங்க வாழ்கையிலே தலையிடுற உரிமை நமக்கு இல்லைன்னு சொல்வாரு, அது நாம பெத்த குழந்தைங்களா இருந்தாலும் , அவரு என்னிக்குமே எனக்குன்னு ஒரு personal space கொடுதிருந்தாரு, அதே space a அவரும் எதிர் பார்த்தாரு, அதே போல உங்கள்ளுக்கும் நான் space கொடுக்கணும்னு எதிர்பார்த்தாரு, நீங்கல்லாம் ஒரு வயசுக்கு மேல வளர்ந்தப்புரம் உங்க முடிவுகளை நீங்க தான் எடுக்கணும்னு விருப்பப்பட்டாரு, அது எனக்கு புடிச்சிருந்துச்சு, ஆனாலும் தாய் மனசு இல்லியா , குழப்பத்துல என்னிக்காவது எதாவது தோணும் போது கடிதம் எழுதுவேன், ஆனா ஒரு individual வாழ்கையிலே தன் வாழ்கையை தானே முடிவெடுக்கிறது எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும் , அதனால தான் உங்க வாழ்கையிலே நான் தலை இடலெ.நான் சரியாய் தான் இருந்திருக்கேன்னு எனக்கு இப்போ திருப்தி இருக்கு. நீங்க உங்க வாழ்கையிலே சந்தோஷமா இருகீங்கங்கர மன திருப்தியே எனக்கு போதும்.,


இந்த கடிதங்கள் எல்லாம் மற்றவர்களை பொறுத்தவரை வெறும் காகிதங்கள் ,
ஆனால் எனக்கு இவை எல்லாம் நான் வாழாது போன எனது வாழ்கை..

ஊமை பெண் ஒரு கனவு கண்டாள்...
அதை மனதில் வைத்தே அமைதி கொண்டாள்...

அஞ்சல் இனி வராது,
சரண்யா

நன்றி வணக்கம்!!!!!!!!!!

நட்புடன்
ஆர்த்தி

7 comments:

பாலகுமார் said...

அருமையான கடிதத்தொகுப்பு.... வாழ்த்துக்கள் ஆர்த்தி .... ஆனா சீக்கிரமே , முடிச்சுட்ட மாதிரி தோனுது ....

//எழுத துணிவிருந்த எனக்கு யாருக்கும் அதை அஞ்சல் செய்ய துணிவில்லை.//

சரண்யாவின் குணத்திற்கு, யாரிடமும் சொல்லாமல் தான் இருந்திருப்பார் என்றே நினைத்தேன்....

//ஆனால் எனக்கு இவை எல்லாம் நான் வாழாது போன எனது வாழ்கை..//

நிஜம் :(

//ஊமை பெண் ஒரு கனவு கண்டாள்...
அதை மனதில் வைத்தே அமைதி கொண்டாள்... //

இந்த தொடரோட மொத்த கருவையும், ரெண்டே வரியில் சொல்லி விட்டீர்கள் ....

//அஞ்சல் இனி வராது,//
:( :( :(

வேறு ஒரு தொடருடன் மீண்டும் விரைவில் வரவும் ..... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....

Sakthidevi.I said...

remba arumaiya irunthuchu unga pen manam.but takkunu mudichuteenga...vaazhkaiyila sila visayangalai naama neyabagam vachuruppom,nadakkaa vittaalum athula oru amaithiya feel pannuvom..unga kadithangalum ullukkul irukkum ennangalai thatti ezhuppi athula oru thirupthiyai yerpaduthiyathu...manam neraintha vaazhthukkal aarthi...

isakki said...

very bad aarthy.you finished all of a sudden.nalla cinemakku sudddenyaa end card potta mathiri irukkuthu.romba nalla ezhuthura aarthy.why cant you send this to a magazine?
un adutha padaippukkga vazhi mael vizhi vaithu kathu irukkum un rasigai!

madhan said...

"......But நான் யாருக்கு லெட்டர் எழுதுறது...இந்த உலகத்துல எனக்கு தெரிஞ்சது நீ ஒருத்தி தான் ஆனந்தி ...But உனக்கு லெட்டர் எழுதுறதுல ஒரு பிரச்சினை ஆனந்தி.. . நீ எங்க இருக்குறேன்னு தெரியாது .... உன் அட்ரஸ் தெரியாது...லெட்டர் எழுதுனா போஸ்ட் பண்ணனும்னு அவசியமா என்ன..லெட்டர் எழுதுறதுக்கு ஒரு பேர் வேணும்....இந்த உலகத்துல உன்ன விட ஒரு பொருத்தமான பேர் கிடைக்கவா போகுது ஆனந்தி....."

- பிரபா (கற்றது தமிழ்)
***********************************************

மனசுல உள்ளத யார் கிடேயாவது சொன்னோம்னா ஒரு ஆறுதல் கிடைக்கும்....அதுக்கு பெஸ்ட் டைரி தான்....நாம என்ன சொன்னாலும் டைரி தான் சமத்தா கேட்டுக்கும்...வேற யாரும்னா cross Q எல்லாம் கேட்பாங்க...அப்புறம் பிரச்சினை....சரண்யா எழுதியதும் அந்த வகை தான்...மேல சொன்ன பிரபா மாதிரி....

இது மாதிரியாக மனதால் தனி ஒரு வாழ்க்கை வாழ்வதில் தனிப்பட்ட ஒரு சுதந்திரம் இருக்கிறது....வெளிப்புற சூழ்நிலைகள் ஒவ்வாது இருக்கும் போது உள்புற சூழ்நிலைகளை தனக்கு ஏற்றார் போல் மாற்றி அமைப்பது இதம்......

//நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் //

அந்த நம்பிக்கை தான் உண்மையான காதலின் அடையாளம்....

// அவரு என்னிக்குமே எனக்குன்னு ஒரு personal space கொடுதிருந்தாரு, //

personal space - நல்லதொரு வார்த்தை.....

//ஊமை பெண் ஒரு கனவு கண்டாள்...
அதை மனதில் வைத்தே அமைதி கொண்டாள்... //

"மண்ணில் வாழவும் முடியவில்லை - அந்த
வானத்தில் பறக்கவும் சிறகில்லை
ஊமை பெண் ஒரு ........."
(கஷ்டம் தான் போங்க...)

அருமை யான கடிதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் போதே....திடீரென "காதல்" திரைப்படத்தில் "end card" போடுவார்களே...அது மாதிரியாக //அஞ்சல் இனி வராது// ன்னு சொல்லி புட்டீங்க ஆர்த்தி...

நான் முந்தய பின்னூட்டங்களில் குறிப்பிட்டதை போல...வெவ்வேறு கால கட்டத்தின் "பெண் மனம் " எழுதுவது சற்று challenging..... ஆர்த்தி அதை நேர்த்தி யாக செய்திருக்கிறார்.......மனமார்ந்த பாராட்டுக்கள்......வாழ்த்துக்கள்.....தொடர்ந்து எழுதவும்....

பி.கு: ஆர்த்தி வசம் "Time machine" ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது....13/05/2009
தேதியிட்ட லெட்டர் , 11/05/2009 அன்றே நட்புவட்டாரத்தில் post செய்ய முடிகிறது.... Keep it with u safely....:)

-மதன்

Aarthi DayaShankar said...

இது வரை என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
//
பி.கு: ஆர்த்தி வசம் "Time machine" ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது....13/05/2009
தேதியிட்ட லெட்டர் , 11/05/2009 அன்றே நட்புவட்டாரத்தில் post செய்ய முடிகிறது.... Keep it with u safely....:)
//

நான் ஏற்கனவே சொன்னது போல் கடித தேதிகள் ஒவ்வொன்றும் எனக்கு முக்கியமான தேதிகள். என் வாழ்வில் நடந்த நல்லவையோ கெட்டதயோ அது குறிக்கும்...நான் ஏறக்குறைய கடைசி கடிதம் லேட் ஆக எழுதியதற்கு 13/05/2009 என்ற தேதி குறிப்பும் ஒரு காரணம்.. நான் மிகவும் வெறுக்கும் ஒரு நபர் இந்த மண்ணுலகில் உதித்த நாள்...அவ்வளவே...மற்றபடி time machine எல்லாம் இல்லபா...

பாலகுமார் said...

ஒவ்வொரு தேதிக்குள்ளும் ஒவ்வொரு கதை இருக்கும் போல ...... :)
என்வே, மக்களே விரைவில் எதிர்பாருங்கள், நமது கடித சூறாவளி, "ஆர்த்தி"யின் அடுத்த படைப்பு .... "எண் மனம்" நமது நட்புவட்டாரத்தில் ..... (போஸ்ட்டர் ஒட்டிரலாமா ஆர்த்தி???)

மயிலவன் said...

Realy super letter story..ஆனா ஓரே ஒரு வருத்தம் கடிதம் இனி வராது. anyway வாழ்த்துக்கள் மேலும் எழுத

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்