அற்புதமான திரைப்படம் அலங்கோலமான கதை

மணிசித்திரதாழ் கடந்த ஞாயிறன்று சூர்யா டிவி ஒளிபரப்பிய படம். ஒரு நல்ல திரைபடத்தை பத்தி உங்க எல்லோர் கூடவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.சூர்யா டிவி இதுவரைக்கும் நூறு தடவைக்கு மேல இந்த படத்தை ஒளிபரப்பி விட்டது. ஆனாலும் ஒளிபரப்பப்பட்ட எல்லா நேரமும் தவறாமல் ரசித்து இருக்கிறேன் .ஒரு நல்ல படத்துக்கு உரிய எல்லா அம்சங்களும் மிதுதியகவே உள்ள திரைப்படம்.

இது என்னடா படம் முன்ன பின்ன கேள்வி பட்டதே இல்லையே அப்படீன்னு சொல்றவங்களுக்கு மட்டும் (ஒருத்தரும் சொல்ல மாடீங்கன்னு நினைகிறேன்)1993 வெளி வந்த மலையாள திரைப்படம்,. இதில் இருந்து நகல் எடுக்கப்பட்டவைதான் சந்திரமுகியும் கன்னடத்தின் ஆப்த மித்ராவும் மோகன்லால்,ஷோபனா ,சுரேஷ்கோபி என்று மலையாள முன்னணி நட்சத்திரங்கள் ஆர்பாட்டம் இல்லாமல் அற்புதமாக நடித்து இருந்த படம் அந்நியன் படத்தில் ஆர்ப்பாட்டமாக கட்டிய split personalityai அமைதியாக புரியவைத்த சினிமா. இந்த படம் என்னவோ நான் எட்டாவது படிக்கும்போது வந்து இருந்தாலும் நான் பார்த்தது என் பதினைந்து வயதில்தான்.மலையாள படம் என்றாலே art film என்ற எண்ணத்தை மாற்ற வைத்தது இந்த படம்தான்.ஒரு psycho thriller yai இந்த அளவுக்கு எந்த அருவெருப்பும் , காதை செவிடாக்கும் பின்னனி இசையும் இல்லாமல் கொடுத்து இருந்தார் இயக்குனர் பாசில் .எந்த தொய்வும் இல்லாத அழகான திரைகதை.

என்னை பொறுத்தவரை திரைக்கதைதான் முக்கியம்.அதற்ற்கு மெருகு ஊட்டவே நடிகர்கள் .அந்த பணியை சிறப்பாக செய்து இருந்தனர் அந்த படத்தின் கலைஞர்கள்.மோகன்லால் ,அற்புதமான அசர வைக்கும் நடிகர்.எல்லாவித பாத்திரங்களுக்கும் எளிதில் பொருந்தி விடக்கூடியவர். இந்த கதையின் மனோதத்துவ மருத்துவர். த்ருகு என்ன தேவையோ அதை மட்டும் வெளிப்படுத்தி இருந்தார். அவரின் அற்புதமான படங்களில் இதுவும் ஒன்று. ஷோபனா, பாவம் தமிழ் திரையுலகம் இவரை சரியாக பயன்படுத்தி கொள்ளாமலே போய் விட்டது. நாட்டிய தாரகை .கைதேர்ந்த நடிகை. இந்த படத்தில் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் கங்கா, நாகவல்லி (நாகவல்லி தன சந்திரமுகி)என்ற இருவேறு பாத்திரங்களை வேறுபடுத்தி காட்டி இருப்பார்.கங்காவாக இருக்கும்போது அப்பாவித்தனமா நடிப்பு ,நகவல்லியாக மாறியவுடன் புருவத்தை மட்டும் உயர்த்தி முகத்தை கொடூரமாக மாற்றி இருப்பார். low hip saree ,sleeveless blouse என்று எதுவுமே இல்லாமல் அழகை வெளி படுத்திய படம்.

ஒருமுறை வந்து பார்த்தாயா(நம்ம லக லகாதான்) பாடல் படமாக்க படம் மிக அருமை. அதில் ஒவ்வொரு அபிநயங்களும் அருமை.ஒரு நல்ல நடிகை நடித்த பாத்திரத்தை ஜோதிகா முடிந்த அளவு கொலை பண்ணினார் என்றே சொல்ல வேண்டும் .பாவம் குதிப்பதை தவிர வேறு ஒன்றும் அறியாத்த அவரை பரத நாட்டியம் ஆட வைத்தது மிகவும் பரிதாபம். எனக்கு தெரிந்து இதுவரை இயக்குனர் வாசு தமிழ் மக்களை முட்டாளாக நினைத்தே எல்லா படமும் எடுத்து இருக்கிறார்.(சின்ன தம்பி ஒரு உதாரணம் )ஒரு அழகான ஓவியத்தின் மேல தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது சந்திரமுகி .
அதிலும் ரஜினி ஒருவருக்கு புகழ் சேர்க்க மத பாத்திரங்களை டம்மி ஆக்கி இருந்தது கொடுமையிலும் கொடுமை.ரஜினி அவர் பங்குக்கு மோகன்லால் கதாபாத்திரத்தின் மேல காரி உமிழ்ந்து இருந்தார் . அவருக்கு இந்த அவயத்திலும் நயன் தர்ராவோடு டூயட் பாட மட்டும் நன்றாக வருதிறது.அவர் அவருடைய அற்புதமான நடிப்பை மறந்து அதிக நாட்கள் ஆகிறது. பாலச்சந்தரின் மாணவன் தான என்று யோசிக்க வைத்து விட்டார். இந்த லட்சணத்தில் சந்தரமுகி part 2 வர போகுதான் சாமி, நீதான் எங்க எல்லாரையும் காப்பத்தனும் ! நண்பர்களே மணிசித்திரதாழ் பார்க்காமல் யாரும் இருந்தீங்கன்னா கண்டிப்பா dvd வாங்கி mmiss பண்ணாம பாருங்க. முடிந்தால் உங்களோட கருத்தை என்னோட பகிர்ந்து கொள்ளுங்கள்.
நட்புடன்,
மகா.

2 comments:

பாலகுமார் said...

//என்னை பொறுத்தவரை திரைக்கதைதான் முக்கியம்.//

எப்போது இருந்து இப்படி ????

//ஒரு அழகான ஓவியத்தின் மேல தண்ணீர் ஊற்றியது போல்//

நல்ல உதாரணம். :)

//ரஜினி அவர் பங்குக்கு மோகன்லால் கதாபாத்திரத்தின் மேல காரி உமிழ்ந்து இருந்தார்//

ரஜினியின் கண்மூடித்தனமான ரசிகையா இப்படி சொல்றது ??????

அருமையான விமர்சனம், வாழ்த்துக்கள்... மகா !!!! :)

தொடர்ந்து எழுதுங்கள். உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்... (சிரிக்காமல் படிக்கவும்)

Aarthi DayaShankar said...

மஹா,
நீண்ட நாட்களுக்கு பின் திரும்பி வந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி..

அனால் எனக்கு உன் கருத்துக்களோட ஒப்ப முடிய வில்லை.
//ஒரு அழகான ஓவியத்தின் மேல தண்ணீர் ஊற்றியது போல் இருந்தது சந்திரமுகி //

சந்திரமுகி மிகவும் அற்புதமான திரைப்படம் என்று வாதிடவில்லை..ஆனால் நீ கூறியிருக்கும் உவமை அளவுக்கு மோசமில்லை என்பது என் கருத்து..

//ஒரு நல்ல நடிகை நடித்த பாத்திரத்தை ஜோதிகா முடிந்த அளவு கொலை பண்ணினார் என்றே சொல்ல வேண்டும் .பாவம் குதிப்பதை தவிர வேறு ஒன்றும் அறியாத்த அவரை பரத நாட்டியம் ஆட வைத்தது மிகவும் பரிதாபம்//

ஷோபனா மித அற்புதமான நடன கலைஞர் என்பது ஊரறிந்த உண்மை..ஆனால் நீ சொன்னது போல் நடனமே தெரியாத ஜோதிகா நடனம் ஆடியது தான் சிறப்பு என்று நான் நினைக்கிறேன்... பத்மா சுப்ரமணியம் கூட ஒரு முறை தனது பேட்டியில் ஜோதிகா மிக அற்புதமாக நடனம் ஆடியிருப்பதாக குறிப்பிடிருந்தார்...

உன் கருத்தை மறுத்து பேசுவது அல்ல எனது நோக்கம்...என் மனதில் தோன்றிய கருத்துக்களை சொல்ல நினைத்தேன் அவ்வளவே..

நட்புடன்,
ஆர்த்தி.

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்