எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!

ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காக, பணிக்கு, அன்றாட நடைமுறைகளுக்கு இடையூறு இல்லாத செயலாகத் தான் இதை நினைத்திருந்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பார்க்காத போது, நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட‌ பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான். நாமும் கவனிக்கப்படுகிறோம் என்ற உற்சாகம் தரும் உந்துசக்தி இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயமாக‌ உதவும்.

போதும், ஓவர் பில்டப் ..... என்னோட வலைப்பதிவு பத்தி இந்த வாரம் "கல்கி" இதழ்ல (28/06/2009 இதழ், 72ம் பக்கம்) நாலு வரி பாராட்டி எழுதி, வலைப்பதிவு பெயரை (http://solaiazhagupuram.blogspot.com/) வாசகர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. கல்கிக்கு நன்றிகள் பல.
எப்போதும் உடன்வரும், உற்சாகமளிக்கும், கிண்டலடிக்கும், ஓட்டும், குட்டும், படித்துவிட்டு எஸ்கேப் ஆகும், படிக்காமலே பாராட்டும் நண்பர்கள் அனைவரும் நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி அவர்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை. :)விரைவில் சந்திப்போம்....

நட்புடன்,
வி.பாலகுமார்.

4 comments:

Anonymous said...

//நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட‌ பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான்.//

உண்மை தான்!....எனவே இன்று முதல் உன்னுடைய "பொறுப்பும்" அதிகம் ஆகிறது:)

// நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி//

முதல்ல நீங்கதான் எங்களுக்கு பார்ட்டி கொடுக்கணும்......அப்புறம் வேணும்னா so called பாராட்டு விழா பத்தி யோசிக்கலாம்....

Anyway, வாழ்த்துக்கள் டா நண்பா .....தொடரட்டும் உன் கலை (!) சேவை :)

-மதன்

Aarthi DayaShankar said...

மிக்க சந்தோசம் பாலா... உன் வெற்றியில் நாங்கள் அனைவரும் வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம்...வாழ்த்துக்கள்....இன்னும் மேன்மேலும் புகழ் பல பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

--நட்புடன்
ஆர்த்தி

அன்புடன் அருணா said...

பூங்கொத்து....

Anonymous said...

google da

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்