இன்று ஒரு நாள் மட்டும்

இன்று ஒரு நாள் மட்டும்
நீ துகில் எழுகையில்
உன் முகம் பார்த்து சிரிப்பேன்

இன்று ஒரு நாள் மட்டும்
உனக்கு நானே
bed coffee கொடுப்பேன்

இன்று ஒரு நாள் மட்டும்
நீ என்ன அணிய வேண்டும்
என்பதை நான் முடிவு செய்வேன்

இன்று ஒரு நாள் மட்டும்
உன்னுடன் அலுக்காமல் shopping வந்து
கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்

இன்று ஒரு நாள் மட்டும்
நீ விரும்பிய படத்துக்கு
வந்து நானும் விரும்பி பார்ப்பேன்

இன்று ஒரு நாள் மட்டும்
உனக்கு பிடித்த restaurant இல்
நாம் இருவர் மட்டும்
சேர்ந்து சாப்பிடுவோம்

இன்று ஒரு நாள் மட்டும்
நீ முதன் முதலில்பேசிய
வார்த்தைகளை பேசி சிலாகிப்போம்

இன்று ஒரு நாள் மட்டும்
உன் முதல் சைக்கிள் பயணத்து
காயங்களை மறந்து
மீண்டும் இருவரும்
சைக்கிளில் போவோம்

இன்று ஒரு நாள் மட்டும்
நீ முதன் முதலில்
புடவை அணிந்த நாள்
பற்றி பேசி மகிழ்வோம்

இன்று ஒரு நாள் மட்டும்
உன் சிறு வயது ஞாபக album
பார்த்து அனைத்து சம்பவங்களையும்
பேசி விடுவோம்

இன்று ஒரு நாள் மட்டும்
உனக்கு பிடித்த gulab jamoon
நானே செய்து தருவேன்

இன்று ஒரு நாள் மட்டும்
உன் கல்லூரி காலத்து குறும்புகளை
யோசித்து சிரிப்போம்

இன்று ஒரு நாள் மட்டும்
நாம் இருவரும் badminton ஆடி
நானே தோற்பேன்
அத்தனை முறையும்

இன்று ஒரு நாள் மட்டும்
எனக்கு பிடிக்காத காரணத்தால்
கண்ணாடி வளையல்
அணியாதே பெண்ணே

இன்று ஒரு நாள் மட்டும்
நாம் முதன் முதலில்
சண்டை போட்டதையும்
நான் உன்னை
சமாதனம் செய்ததையும்
மௌனத்துடன் பேசி கொள்வோம்

இன்று ஒரு நாள் மட்டும்
நாம் இருவரும் நேரம் பார்க்காமல்
நடந்து கொண்டே இருப்போம்

இன்று ஒரு நாள் மட்டும்
மொட்டை மாடியில்
நிலா பார்த்து
நிலா சோறு சாப்பிடுவோம்

இன்று ஒரு நாள் மட்டும்
நீ தூங்க போகையில்
உன் அருகே அமர்ந்திருப்பேன்

ஏனெனில் மகளே
நீ நாளை
மற்றொருவனுக்கு சொந்தமாகிறாய்

இன்று ஒரு நாள் மட்டும்
இந்த தகப்பனுக்கு
கொடு மகளே !



நட்புடன்
ஆர்த்தி


7 comments:

மயிலவன் said...

இன்று ஒரு நாள் மட்டும்.......

எனது வாழ்த்துகள் முதலாய் இருக்கட்டும்.........

Sakthidevi.I said...

nice poem....
but father has rights to these all behaviour after his daughter's marriage also na?

so dnt worry abt that....

daily nenachu paakkalaam...pogalaam...

good feelings....cheers..

பாலகுமார் said...

உருக்கமான, உண்மையான கவிதை .... நல்லா இருக்கு ஆர்த்தி !

மீண்டும்,மீண்டும் படிக்கும் போது, கவிதையின் ஆழம் அழகாய் விரிகிறது....

மகளுக்கு பதிலா, தங்கை என்று படித்துக் கொண்டேன்.

isakki said...

ஐயோ !! நான் இனிமே இந்த ப்ளோக்ல எழுதவே மாட்டேன் .போங்கப்பா !! எல்லோரும் நல்லா கவிதை எழுதுறீங்க !!! இப்பிடியே போனா என் வயிறு எரியுறது அதிகமாயிரும்.
ஆர்த்தி ,உனக்கு இவ்வளவு நல்ல கவிதை எழுத வரும்னு சொல்லி இருந்தா நான் இந்த விளையாட்டுக்கே வந்து இருக்க மாட்டேன் .போங்கப்பா ,ஒரு அப்பாவி பொண்ணை நம்ப வைச்சு ஏமாத்திடீங்க !!! உங்க பேச்சு கா !!
just for fun aarthy, its very nice. wonderful ! சத்யா சொன்ன மாதிரி எனக்கும் என் அப்பாவுக்குமான நெருக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்பிடியேதான் இருக்குது.

Aarthi DayaShankar said...

ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றி..

சத்யா , மஹா
பெண்கள் என்ன தான் தாங்கள் தங்கள் பெற்றோரிடம் அன்பு மாறாமல் இருப்பதாக நினைத்தாலும் அது நடைமுறையில் அப்படி இல்லை.. என்னால் கூட கூற முடியும் எனக்கும் என் அப்பாவுக்கும் ஆனா உறவில் மாற்றம் ஒன்றும் இல்லை என்று, அனால் உங்கள் ஆழ் மனதையே கேட்டு பாருங்கள் , உங்களுக்கு விடை கிடைக்கும். அல்லது உங்கள் அப்பாவிடம் கேட்டு பாருங்கள் அப்போது புரியும் அவரது மனநிலை.

பாலா,
//மகளுக்கு பதிலா, தங்கை என்று படித்துக் கொண்டேன்.//
உன் வலி புரிகிறது பாலா..அது எல்லாருக்கும் உண்டான இயலபான உணர்ச்சி தான்..

முதன் முதலில் வாழ்த்துக்கள் தெரிவித்த மயிலவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Sakthidevi.I said...

Kandippa aarthi ...i accept ur point...
sure pengalaa piranthaale namma kudumbaththavittu piraya vendiya nilai vanthuruthula?...hmmmmmmmm...........yes aal manathodu yosicha light a heart ganamaaguthu...
thanks........
innum neraiya ezhuthungal...all the best..

Anonymous said...

//இன்று ஒரு நாள் மட்டும்
எனக்கு பிடிக்காத காரணத்தால்
கண்ணாடி வளையல்
அணியாதே பெண்ணே//

contradicting with other lines....but superb!...இது மாதிரி ஆகவும் இருக்கோனும்....i like this...

//எனக்கும் என் அப்பாவுக்குமான நெருக்கம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்பிடியேதான் இருக்குது.//

//பெண்கள் என்ன தான் தாங்கள் தங்கள் பெற்றோரிடம் அன்பு மாறாமல் இருப்பதாக நினைத்தாலும் அது நடைமுறையில் அப்படி இல்லை.. //

வெளிப்படையாக அது அவரவர் மனநிலையை பொறுத்தது என்றாலும்......ஆர்த்தி & சத்யா சொல்றது என்னிடம் 80% மார்க் வாங்குகிறது ....

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்