சாகாவரம் பெற்ற MP3 க்கள்


அநேகமாய் 1987 களில் ஆரம்பிக்க பட்ட MPEG குழுமம் , 1997 வாக்கில் MPEG Audio Layer 3 என்ற MP3 யை வெளிக்கொண்டு வந்தது.


நோக்கம்: 1. கம்ப்யூட்டர் எல் குறைந்த இடத்தை அடைத்து கொண்டு, சாசுவாதமாக இசையை "play" செய்ய வேண்டும். 2. எங்கும் நீக்கமற பின்னிபினைந்திருக்கும் இணைய தளத்தில் எளிதாக, குறைவான பொருள் செலவில் அதே சமயத்தில் தரமான ஒலியுடன் கூடிய இசை கோப்புகளை உலவ விட வேண்டும்.

சாதாரண இசை கோப்புகளில் (.WAV) இருந்து "high perceptional" அலை துடிப்புகளை நாசூக்காக கத்தரித்து விட்டு, பெரும்பாலான "Human perceptional" அலைகளை துடிக்க செய்ய மண்டையை பிய்த்து கொண்டு "Mp3 Codec" களை உருவாக்கிருக்கிறார்கள்.

இதன் மூலம் சாதாரண இசை கோப்புகள் (.WAV) கம்ப்யூட்டர் -ல் ஆக்கிரமிக்கும் இடத்தைவிட பத்து மடங்கு குறைவான இடத்தை MP3 இசை கோப்புகள் பிடிக்கும்படி செய்திருக்கிறார்கள், ஒலி தரம் ரொம்பவும் கெட்டு விடாதபடி......விளைவாக 700MB குறுந்தகட்டில் 150 ற்கும் அதிகமான பாடல்களை பதிவு செய்யக்கூடிய வசதிகள் அறிமுகமானது...

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக உலகெங்கிலும் புழக்கத்தில் இருக்கும் MP3 ஒலி வடிவங்களுக்கு இனி அழிவு உண்டா?

என்னை கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. , காரணம்,

1. MP3 format களை விட குறைவான இடத்தை அடைத்து கொள்ளும் format கள் வந்தாலும் அவ்வளவு சீக்கிரமாக உலகெங்கும் வியாபித்திருக்கும் MP3 பிளேயர்கள் அவற்றை தலை தூக்க விடாது. வேறு புதிது புதிதாக music format கள் வந்தாலும் , MP3 compatibilty இல்லாமல் மார்க்கெட்டில் பிளேயர்கள் போணியாகாது. (இதே பாணியில் GSM phones Vs CDMA phones யும் விளக்க முடியும்; இப்போது இதை படிக்கும் பெரும்பாலான இந்தியர்கள் வைத்திருப்பது GSM Phones, சரிதானே !).....எத்தனையோ கழுதை , குதிரை music format கள் வந்து மறைந்து போனதும் இதன் காரணமாகத்தான்...


2. "பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை...புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை" என்பவர்கள் சிறந்த music system மற்றும் acoustic இருந்தாலொழிய உங்களுக்கு .WAV ற்கும் MP3 இசை கோப்பிற்கும் ஆனா பெரிதான ஒலித்தர வித்யாசங்களை கேட்டுணர முடியாது.....தலைக்கு மேலே "fan" சுற்றிகொண்டிருந்தாலே போச்சு கதை அம்பேல் ...சிரமப்பட்டு 15 KHz க்கு மேலாக ஒலி தரத்தை துல்லியமாக கேட்டு என்ன பெரிதாக மகிழ்ந்து விட போகிறீர்கள்...எப்பவாவது என்றால் முடியும்... ஆனால் எப்பவுமே முடியாதே.... MP3 ஒலிக்கும் போதே நாம் பெரும்பாலும் உணர கூடிய crisp கிடைத்து விடுகிறது .....i hope all of u got the point.....


3. இணையதள ஊடாக எளிதான பரிமாற்றம்


முக்கியமாக மேற் சொன்ன மூன்று காரணங்கள் MP3 format ஐ சாகா வரம் பெற்ற பிறவியாக மாற்றும் என்று என்னை நம்ப தூண்டுகிறது.


நாளை என்னவாக ஆகுமோ ?


-மதன்

2 comments:

Sakthidevi.I said...

Thank you for ur information...Neenga scientist ngratha proof panniteenga... :)
good point........good one....

பாலகுமார் said...

நாங்கெல்லாம் எஸ்.ஏ.ராஜ்குமாரோட "லாலா, லாலா" தான் கேட்போம், அது எல்லா ப்ளேயர்லயும் ஒரே மாதிரி தான் கேட்குது.

இருந்தாலும், இது போல் தொழில்நுட்ப இடுகைகள் வரவேற்கப்படுகின்றன. :)

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்