you too பிள்ளையாரப்பா !!!

உங்க எல்லோருக்கும் திரும்பவும் தொல்லை கொடுப்பதில் ரொம்ப ரொம்ப சந்தோசம்.வாழ்கையில எப்போவும் சந்தோஷமே வந்துட்டு இருந்தா நல்லவா இருக்கும்.? so i am forcing u people to read my article. "பாலா ,மதன் மாதிரி பெரிய range ஆளுங்களோட எழுதற அளவுக்கு இசக்கி உனக்கு ரொம்ப தைரியம்தான்னு சிவரஞ்சனி என்னை கேவலமா திட்டியதை கூட நான் ரொம்ப பெரிசா எடுத்துக்கலை .யென்ன அவங்க எல்லோரும் முன்னமே எழுதுவாங்கன்னு தெரியும்.ஆனா இந்த ஆர்த்தி ? (எவ்வளவு அடிபட்டாலும் தாங்குற மஹா , u are so great !!!)

கதைய எங்க விட்டேன்.? கடைசி check upkku போனதோட விட்டேன். அதுக்கு முன்னால விஷயம் தெரியாதவங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்க ஆசைபடுறேன். இந்த சுக பிரசவம்ன்னு சொன்னா AC roomla எந்த வலியும் இல்லாம நடக்கிற பிரசவம் கிடையாது. எந்த கிறுக்கு பயலோ புரியாம வைச்ச பேர் அது. ( மதன் kindly note down the point) சரி அது கிடக்குது. நம்ம கதைக்கு வருவோம். டாக்டர் அம்மாவும் செக் பண்ணினாங்க.எடை பார்க்க சொன்னாங்க. வழக்கம் போல weight machine எனக்கு ஆப்பு வைத்தது . எங்க அம்மா கண்ணீர் விட்டு ஆஸ்பத்திரிய மிதக்க விட்டாங்க. ஏன் டாக்டர் சுக பிரசவம் ஆகுறது கஷ்டமான்னு ஒரே அழுகை. எனக்கும் ஒரே கவலை. ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு அம்மா நல்ல வடை சுடுவாங்க. எப்போ check up வந்தாலும் வாங்கி சாபிடுவேன். ஆனா இப்போ கேட்டா கிடைக்காதே. ச! மனுஷன் நினைச்சதை கூட வாங்கி சாப்பிட முடியலைடா சாமி !!! எனக்கு அழுவாச்சியா வந்துச்சு. எங்க அம்மா உடனே இப்போ அழுது என்ன பிரயோஜனம் ? நான் தலை தலையா அடிச்சுகிட்டேன். பிள்ளைன்னா பெத்தவங்க பேச்சை கேக்கணும் ,இல்லன்னா இப்படிதான் அழனும் அப்படி இப்படீன்னு ஒரே புலம்பல். உடனே டாக்டர் ச்ம்தன படுத்தி இன்னும் ஒரு பத்து நாள் இருக்கு இதுக்கு மேல weight போடாம பார்த்துக்கோங்க .சுக பிரசவத்துக்கு 90 சதவீதம்
வாய்ப்பு இருக்குன்னு சொல்ல ,எனக்கு என்னடா இது வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறியாச்சேன்னு ஒரே கவலை. எங்க அம்மா முகத்தில ஒரே சிரிப்பு.
நான் வீட்டுக்கு வந்ததும் சாமி முன்னால உக்கார்ந்து ஒரே மிரட்டல்தான் .எனக்கு தப்பி தவறி சுக பிரசவம் ஆச்சுது ,அவ்வளவுதான் நடக்கிறதே வேற ,பிள்ளையாரப்பா , அப்படி எதாவது நடந்தது ,உன் முன்னால தினசரி பாடுவேன். .நான்தான் என் கையால உனக்கு கொழுக்கட்டை செஞ்சு தருவேன். so be careful!!! இப்படி ஏகத்துக்கும் மிரட்டி வைச்சு இருந்தேன்.
எங்க ஊருக்கு போனாலே குஷிதான் .எங்க அப்பா தினசரி வேலை முடிந்து வரும்போது ஏதாவது வடை ,பஜ்ஜின்னு வாங்கிட்டு வருவாங்க. எனக்கு ஒரே கொண்டாட்டம்தான். பங்கு கேக்கிறதுக்கு யாரும் இல்லை. அப்பாவும் அம்மாவும் as usual கேக்க மாட்டங்க . ஒரே குஷிதான் . ஆனா இப்போதான் நிலைமை தலைகீழா மாறிபோச்சே. சோக கடல்ல மூழ்கி முத்து எடுத்துட்டு இருந்தேன். ஒரு நாள் எங்க அம்மா கோயில் போன நேராம பார்த்து எங்க அப்பாகிட்ட பிட் போடா ஆரம்பிச்சேன்.அப்பா , எனக்கு நேந்திர பழ அப்பம் சாபிடனும் போல இருக்குப்பா ,ஒன்னே ஒன்னு மட்டும் வாங்கி தாங்கப்பா ,அம்மா சாப்பாடே சரியா போடலைப்பான்னு ஒரே ஒப்பாரி. எங்க அப்பாக்கு நான் நாலு சொட்டு கண்ணீர் விட்டா தாங்காது. சோ என்ன நடந்து இருக்கும்னு உங்களுக்கே தெரிஞ்சு இருக்கும்.

எங்க ம்மா வந்து வழக்கம் போல நாலு இட்லி வைக்க நான் சத்தமே போடாமா சாப்டேன். அம்மாக்கு ஒரே ஆச்சர்யம். இதே மாதிரி பத்து நாளும் ஓடி போச்சு. அக்டோபர் ஏழாம் தேதி வரை வலி வரலை.எனக்கு ஒரே சந்தோசம் .அக்டோபர் ஒன்பது நாள் கொடுத்து இருந்தாங்க. எட்டாம் தேதி , i got admitted in hospital . அம்மாக்கு வழக்கம் போல கவலை.எனக்கு ம்ம்ம்ம்ம்.............ம்ம்ம்ம்.
ஒன்பதாம் தேதி காலையும் வந்தது. டாக்டர் அம்மா வலி வரலைன்னா என்ன ஊசி போட்டு வலி வரவழைத்து விடலாம்னு ஒரு பெரிய குண்டோட என்னை கூட்டிட்டு போனாங்க. நான் போற வழி எல்லாம் பிள்ளையாரை மிரட்டிகிட்ட போனேன். ஊசியும் போட்டாங்க. என்ன நடந்து இருக்கும்னு நினைக்கீறீங்க?உங்க எல்லோரோட ஆசையை பூர்த்தி பண்ணு விதமா வலி வந்துருச்சு. எங்க அம்மாக்கு ஒரே சந்தோசம். எனக்கு இப்பிடி பிள்ளையார் இப்படி ஏமாதிடாரேன்னு ஒரே கோபம். ஆனா அவர் அப்போதான் ,பக்தையே ,உன் பக்திக்கு மெச்சினேன் . உனக்கு சுக பிரசவம் ஆகாதுன்னு அருள் பாலிச்சு இருப்பாருன்னு நினைக்கிறேன். காலைல ஒன்பது மணிக்கு அஆரம்பிச்ச வலி சாயங்காலம் எட்டு மணி வரை தொடர்ந்தது. அட ! கடவுளே நம்மதான் தப்ப வேண்டிகிட்டோம்னு அப்போதான் தோனுச்சு. வலி வராம குழந்தை பிறக்கணும்னு வேண்டாமா, சுக பிரசவம் ஆகா கூடாதுன்னு வேண்டிகிடோமேன்னு கவலை பட்டேன்.

பிள்ளையார் அவர் கடமைய ஒழுங்கா செய்தாரு. சுக பிரசவத்துக்கு எல்லா வலியும் அனுபவிச்ச பின்னால ,டாக்டர் வேற வழியே இல்லை.ஆபரேஷன் பண்ணி பிள்ளைய எடுத்துரலாம்னு சொல்ல ,ஆபரேஷன் பண்ண வேண்டியதா போச்சு. வர்ஷி குட்டியும் தப்பித்தோம்,பிழைதொம்னு வெளி உலகத்துக்கு வந்துட்டா.
நீதி :
so friends ,be careful ,while you are asking something to god. be clear in ur statement.

நட்புடன்,
மகா...


6 comments:

Aarthi DayaShankar said...

ஹா ஹா ஹா மகா,
உன் நிலமைய நினைச்ச பரிதாபமா இருக்கு...சுக பிரசவ வலிய அனுபவிக்க முடியலயேனு நான் நிறைய நாள் வருத்த பட்டிருக்கேன்...ஆனா உன் எபிசொட் எ படிச்சப்புறம் நல்ல வேளை பா நு நினைச்சுகிட்டேன்...
என்ன இருந்தாலும் சுக பிரசவம் ஆனா தான் healthy எ இருந்திருக்கலாம் நு ஒரு நிறைவேறாத ஆசை என் அடி மனசில இருக்குது உண்மை.

Sakthidevi.I said...

Ha Ha Ha Ha ...;) :) :)

Maha oru periya matter a ivvolo azhaga comedy aa ungalaala mattum thaan ezhutha mudiyumnu nenaikiren...

Really very superb......

Vidunga aduththa thadava olunga vendunga.....

Pillaiyaar unga kitta evalavu kasta paattutu irukkaarnu ippa theriyuthu... :)

nalla comedy aa ezhuthureenga.....cheers up..

varungaala comedy writter neenga thaan maha....

madhan said...

//பாலா ,மதன் மாதிரி பெரிய range ஆளுங்களோட எழுதற அளவுக்கு இசக்கி உனக்கு ரொம்ப தைரியம்தான்னு சிவரஞ்சனி என்னை கேவலமா திட்டியதை கூட நான் ரொம்ப பெரிசா எடுத்துக்கலை...//

ஹய்யோ..ஹய்யோ....நீங்க சொல்றதெல்லாம் நெனச்சா எனக்கு ஒரே 'நகைச்சுவையா' இருக்கு.....எத்தனவாட்டி சொல்றது நான் அவன் இல்ல...நான் அவன் இல்ல ...நான் அவன் இல்ல.....

//இந்த சுக பிரசவம்ன்னு சொன்னா AC roomla எந்த வலியும் இல்லாம நடக்கிற பிரசவம் கிடையாது. எந்த கிறுக்கு பயலோ புரியாம வைச்ச பேர் அது. ( மதன் kindly note down the point)..//

நானும் அப்படி சொல்லல மகா......நீ முன்னமே சொன்ன "thought" (operation delivery Vs normal delivery) தான்....different but panic என்று சொல்ல வேண்டியதாகி விட்டது.....அப்பொழுதே மனதில் பட்டது நீ எதோ கோட்டு மாத்து பண்ணி இருக்கிறாய் என்று....நீயே இப்போஅதை யும் சொல்லி விட்டாய்....நல்லது....//அட ! கடவுளே நம்மதான் தப்ப வேண்டிகிட்டோம்னு அப்போதான் தோனுச்சு// .........இருந்தாலும் கடைசியாக சொன்ன நீதி Highlight!.....

//sathya said...
Maha oru periya matter a ivvolo azhaga comedy aa ungalaala mattum thaan ezhutha mudiyumnu nenaikiren...//

இது மாதிரியாக "sportive" ஆக எழுத எல்லோருக்கும் வராது....இதெற்கெல்லாம் உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த மனம் வேண்டும்.......( யப்பா.ஒரு பொய் சொல்ல எவ்ளோ மெனக்கெட வேண்டியிருக்கு....:) )

//Pillaiyaar unga kitta evalavu kasta paattutu irukkaarnu ippa theriyuthu... :) //
அவ யாரு ....train la காபி கிடைக்கலன்னாலும் பிள்ளையாரை ஒரு வழி பண்ணி விடுவேன் என்று சொன்னவளாச்சே....இனி கோவிலுக்கு போகும் அன்பர்கள் மகாவிடம் இருந்து பிள்ளையாரை காக்க வேண்டவும்....:) :) :)

-மதன்

பாலகுமார் said...

// so i am forcing u people to read my article. "பாலா ,மதன் மாதிரி பெரிய range ஆளுங்களோட எழுதற அளவுக்கு இசக்கி உனக்கு ரொம்ப தைரியம்தான்னு சிவரஞ்சனி என்னை கேவலமா திட்டியதை கூட நான் ரொம்ப பெரிசா எடுத்துக்கலை .//

இன்னும்மாடா, இந்த உலகம், நம்ம நம்பிட்டு இருக்கு ?!?!?!?

//ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு அம்மா நல்ல வடை சுடுவாங்க. எப்போ check up வந்தாலும் வாங்கி சாபிடுவேன். ஆனா இப்போ கேட்டா கிடைக்காதே. //

வ‌டை போச்சே !

// அப்படி எதாவது நடந்தது ,உன் முன்னால தினசரி பாடுவேன். .நான்தான் என் கையால உனக்கு கொழுக்கட்டை செஞ்சு தருவேன். so be careful!!! //

இப்போ தினமும் பாடிட்டே தான் இருக்கீங்களா.....?

//so friends ,be careful ,while you are asking something to god. be clear in ur statement.//

ஹ்ம்ம்ம், நீதிக்க‌தை எல்லாம் சொல்றீங்க‌ .....

//Vidunga aduththa thadava olunga vendunga.....//


ஆமாம், அடுத்த‌ த‌ட‌வை ச‌ரியா வேண்டிக்கோங்க‌ !

சிவரஞ்சனி said...

காமெடி கலந்த உன் article superb. உனக்கு எவ்வளவு எடுத்து சொன்னேன் ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான். உனக்கெல்லாம் ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாபிடுவது போல !!!!!!!!
சிவரஞ்சனி

Unknown said...

maha! article superb!

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்