புத்தம் புதிய ஆண்டாகவே......

புத்தம் புதிய ஆண்டாகவே......
------------------------------------------------------------






"பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறுகளை களைய உதவும்" என்னும் (சுட்ட) தத்துவத்தோடு பதிவை ஆரம்பிக்கலாம். (வருடா வருடம் இவனோட இதே தொல்லையா போச்சு) 

தமிழ் சினிமா பற்றி வாய் திறக்கா விட்டால் ஜென்மசாபல்யம் அடைய முடியாது என்பதால் ....முதலில் "தமிழ் சினிமா 2009" பற்றி...... 

நல்ல தமிழ் படங்களை பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டி இருந்தது. ஆறுதலாய் நாடோடிகள், வெண்ணிலா கபடி குழு , பசங்க, அயன், பேராண்மை, ஈரம். கமல் படம் பார்க்க போனால் மதப் பிரச்சினை ஆகி விடும் போல என்று மக்கள் பேசி கொண்டார்கள். விஜய் படம் பார்க்க போனால் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று பயமுறுத்தினார்கள். மீடியா பலம் இருந்தால் மொக்கை படத்தை கூட தூக்கி நிறுத்தலாம் என்கிற பார்முலா தவிர்க்க முடியாமல் உருவாக்க பட்டது. 

இயக்குனர் பாலா அடுத்த படத்திலாவது சுடுகாடு, இடுகாடு, கஞ்சா, தொண்டையை கடித்து ரத்தம் குடிப்பது என்று படம் எடுக்காமல் இருந்தால் தேவலாம் போல தோன்றுகிறது. பேராண்மை படம் பார்க்கும் பொழுது திரைக்கதையின் வேகத்திற்காக நடு நடுவில் ஒரு திரில்லேர் கதையின் அத்தியாங்களை கிழித்து விட்டு படம் எடுத்தது போல் இருந்தது, இருப்பினும் அங்கங்கே திட்டு திட்டாய் நல்ல விசயங்களை துணிச்சலுடன் கையாண்டிருப்பதற்காக இயக்குனர் ஜனநாதனை பாராட்டியே ஆக வேண்டும். 

அடுப்பில் கால் வைத்து எரித்ததை தவிர "மச்சான்ஸ்" நமீதா (படம்:ஜகன் மோகினி) வேறொன்றும் புதுமை செய்ய வில்லை. நான் அவனில்லை - இரண்டாம் பாகம் எதிர் பார்த்த க்ரிப் இல்லாததால் டிரைலர் பார்த்ததுடன் முடித்து கொள்ள வேண்டிருந்தது. பொக்கிஷம் படச்சுருள்கள் பெட்டிக்குள் பொக்கிஷமாய் பாதுகாக்க பட்டது (சாரி சேரேன், ஆட்டோகிராப் சாயலையும் குமுறி குமுறி அழுவதையும் மாற்றியே ஆக வேண்டும்). கந்தசாமி சேவல் குழந்தைகளிடம் ஓரளவுக்கு reach ஆனது. வேட்டைக்காரன் இணையதளங்களால் வேட்டை ஆடப்பட்டது. 

இனி சிறப்பு தேர்வுகள் ..... 

சிறந்த படம்: நாடோடிகள் / ஈரம் / பேராண்மை (பிரித்து வழங்க படுகிறது!) 
சிறந்த நடிகர்: ஜெயம் ரவி (பேராண்மை) 
சிறந்த நடிகை: நயன்தாரா (.....பதிலும்) / ஸ்ரேயா (.....பதிலும்) 
சிறந்த இயக்குனர்: S.P. ஜனநாதன் (பேராண்மை) 
சிறந்த இசைஅமைப்பாளர்: இளையராஜா (நான் கடவுள்) 
சிறந்த பாடகர்: மது பாலகிருஷ்ணன் (பிச்சை பாத்திரம் ஏந்தி... நான் கடவுள்) 
சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல் (கண்ணில் பார்வை போன ...நான் கடவுள்) 
சிறந்த துள்ளல் இசை பாடல்: பள பளக்கிற பகலா நீ.... (அயன்) 
சிறந்த குத்து பாடல்: உச்சிமீது வானிடிந்து (சிந்தனை செய்) 
என் பேரு மீனாகுமாரி (கந்தசாமி) 

மனதை வருடிய மெலடிகள்: விழி மூடி யோசித்தால்... (அயன்) 
அழகாய் பூக்குதே ... (நினைத்தாலே இனிக்கும்) 
முதன்முதல் உன்னை பார்த்ததும் .. (குளிர் 100 deg ) 
லேசா பறக்குது மனசு...(வெண்ணிலா கபடி குழு) 
வாராயோ வாராயோ மோனலிசா ..(ஆதவன்) 

தமிழ் உணர்வுள்ள (!) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பற்றி ... 
நொடிக்கொரு முறை வரும் சன் பிக்சர்ஸ் விளம்பரங்களினால் பதட்டத்துடன் ரிமோட்டை கையில் வைத்துகொண்டு TV முன்னால் அமர வேண்டிருந்தது. (சாவடிக்காதீங்க டா டேய்...) 
எதோ ஒரு சேனலில் இசைஅமைப்பாளர் ஆதித்யன் சமையல் கற்று கொடுத்தது ஆச்சர்யமாய் இருந்தது. 

விஜய் TV யில் பாபாஜி குகைக்கு போகிறேன் பேர்வழி என்று பயணத்தை இழு இழு என்று இழுத்தார்கள். கடைசியில் அது பாபாஜியின் உண்மையான குகைதானா என்று சந்தேகம்வேறு கிளம்ப தொடங்கியது.இருப்பினும் ரஜினியின் வெளிப்படையான பேச்சினால் "கமல்-50" சிறந்த மேடை நிகழ்ச்சியாக ஆனது. 

பெரும்பாலும் மேடை விவாத நிகழ்ச்சிகள் என்னை ஈர்த்தது (நீயா நானா, கருத்து யுத்தம் )..குழந்தைகள் கர்ண கடூரமாய் கத்தும் நிகழ்ச்சிகள் வெறுக்க செய்தது . டீலா நோ டீலா வை டீலில் விட்டாச்சு. சன் மியூசிக் ல் இரவு பதினோரு மணிக்கு மேல் போன் போட்டு பேசுவோரை போட்டு தள்ள வேண்டும் போலிருக்கிறது. திரைக்கே வராத திரை படங்களையெல்லாம் போட்டு கலைஞர் சேனல் சாதனை படைத்தது (போதும்டா சாமி) பொதிகை நிகழ்ச்சிகளை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தமே எனக்கு .... 

சிறந்த விளம்பரம் : Hamam சோப்பு (இந்த சோப்ப யார் மாத்துனா) 
எரிச்சலை கிளப்பிய விளம்பரம்: thanks to vasan eye care 

யூகி சேதுவின் "நையாண்டி தர்பார் " போன்ற நிகழ்ச்சிகளை மீண்டும் எதிர்பார்கிறேன். பார்க்கலாம் .... 

இனி அரசியல் & பொது நிகழ்வுகள் பற்றி.... 

*தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மெல்ல மெல்ல புழக்கத்திற்கு வந்தது. சேலத்துக்காரர்கள் யாரோ ரயில்வேயிடம் இருந்து முன்பதிவு பற்றி விளக்கம் கேட்டு பின் கோர்ட் வரை ரயில்வேயை இழுத்தது அருமையான நிகழ்வு (தகவல்: "ஓ" - ஞாநி) 

*தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்திற்க்கான அறிகுறி தெரிந்தது . பிள்ளைகளுக்கு வீட்டு பாடம் எல்லாம் கொடுக்க தேவை இல்லை என்றார் அமர்த்திய சென். (பள்ளி குழந்தைகள் எல்லாம் இவருக்கு ரசிகர் மன்றம் துவங்க போவதாக அறிகிறேன்) 

* 108 - அவசர சேவை பயனுள்ளதாக தமிழகத்தில் அறியப்பட்டது. 

*பள்ளி வாகன விபத்துகளும் நீலகிரி சரிவும் பயமுறுத்தின 

* எதிர் பார்த்தது போலவே விடுதலை புலிகள் பின்வாங்கி மறைந்தனர். பிரபாகரன் 100 மில்லியன் " ?" ஆனார். ராஜபக்சே - பொன்சேஹா தேர்தல் ஸ்டண்டு கள் ஆரம்பமாகின . பிரணாப் முகர்ஜி ஓடோடி சென்று எப்படி தேர்தல் அதிகாரிகளை கைக்குள் போடுவது முதல் அனைத்து தேர்தல் தில்லு முல்லுகளையும் ராஜபக்சே பிரதர்ஸ் க்கு பாடம் எடுத்தார். 

* நமது பாராளுமன்றம் மீண்டும் சீக்கிய தலைப்பாகை சூடி கொண்டது. (voting machine யில் malpractice செய்ய முடியுமா?) . ப.சிதம்பரம் கத்திரிக்காய் கதை மாதிரி (துக்ளக்) வெற்றி "பெற்றார்" . 

*திருச்செந்தூர் - வந்தவாசி இடைதேர்தல்களில் காந்தி படம் போட்ட நோட்டும், குவாட்டர் பிரியாணி காம்பிநேசனும் பெரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றன . 

*விஜய்-ராகுல் சந்திப்பை தொடர்ந்து, விஜய் அரசியலுக்கு வருவதற்கு அச்சாரம் போட நினைத்தவர்கள் அனைத்து தமிழர்கள் ஒட்டுமொத்தமாக விளக்குமாறை தூக்கியதும் பம்மி கொண்டார்கள். நல்ல வேளை!. (பழனி மலை அல்லாவுக்கு ஸ்தோத்திரம்) . கோலிகுண்டு ஆடுற பையன் ராகுல் காந்தி தமிழக கல்வி நிறுவனங்களில் புகுந்து அடாவடி செய்தான்/ர். 

* ஸ்பெக்ட்ரம் பூதம் தமிழக அரசியலை வழிநடத்தியது 

* "அடுத்த வருடம் அரசியலை விட்டு விலகபோவதாக அறிவித்து தமிழக மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் கலைஞர் கருணாநிதி 

* தினமலரின் "தொழில்" சர்வேயும் , "ங்கொக்கா" விவேக்கும் பரபரப்பை உண்டாக்கினர். 

*இந்த ஆண்டு காவேரி பிரச்சினை ஏதும் இல்லாமையால் தமிழகத்து பேருந்துகள் சந்தோஷ பட்டு கொண்டன. "முல்லை பெரியாறு அணைகட்ட மணல் அனுப்புகிற தமிழகம் அணை கட்டிட வேலை செய்ய ஆட்களையும் அனுப்பினால் லோகத்திலே இருக்குற எல்லா மலையாளிகளும் சந்தோஷ படுவோம். நண்ணி நமஸ்காரம்" என்று தமிழக முதல்வருக்கு அச்சுதானந்தன் கடிதம் எழுதாது தான் பாக்கி. (கூடிய விரைவில் அதுவும் நடக்கும் - உலகத்துலே தமிழன்தான் மிகவும் நல்லவன்) 

* ராஜபக்சே கால் வைத்த ஆந்திரா (திருப்பதி௦) சின்னபின்னமானது (ராஜசேகர் ரெட்டி, தெலுங்கனா, கவர்னர்) 

* சந்திரயான் fuse போய்விட்டது கரித்து கொட்டியவர்கள் , தண்ணீர் கண்டுபிடித்திருக்கிறது என்று பாராட்டினார்கள். sensor அமெரிக்காவினுடையது என்று அங்கலாய்த்தார்கள் . 

* ஆஸ்கார் வென்று A.R. ரகுமான் உற்சாகபடுத்தினார் 

*நோபெல் வெங்கி ஜோல்னபையுடன் அலட்டிகொள்ளாமல் பேசி ஆச்சர்ய படுத்தினார். 

* சென்ற வருட மும்பை தாக்குதலை வைத்து ஆங்கில ஊடகங்கள் பிழைப்பு நடத்தின. செய்திகள் வரும் முன்னே அதை பற்றி விமர்சனங்கள் வந்து பொது மக்கள் முன் விழுவது நவீன யுகத்தின் சாபக்கேடானது 

* "நாமலிங்க" ராஜூ (சத்யம்) கோடிகளை முழுங்கி விட்டு சிறை கோடியில் படுத்து கொண்டார். 

* இணைய துருவி Chrome பிரபலமானது ... Twitter சங்கதிகள் புதிய தொடர்பு முறையை அறிமுகபடுத்தியது ....3G மொபைல் சர்வீஸ் இந்தியாவில் "முகம்" காட்டியது.( http://natpuvattaram.blogspot.com/2009/11/3.html 3G பற்றி தகவலை சொல்லியது) 

* "உலக வெப்ப மயமாதல் " இந்தியா போன்ற வளரும் நாடுகளால் என்றார்கள். (பெங்களூரில் ஓடும் ஆட்டோ க்கள் emission குறைந்தாலே பாதி pollution இந்தியா வில் குறைந்துவிடும்) 

* 2012 ம ஆண்டு டிசம்பர் 21 தேதி உலகம் அழிய போகிறது என்ற புது கதையை கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதை தொடர்ந்து, செல் போன் பில் கட்ட வேண்டாம், பிகர்களுக்காக லோ லோ என்று அலையவேண்டாம் என்று ஒரு கோஷ்டி கிளம்பிருக்கிறது . 

இவ்வாறாக "சுமாராக" கழிந்த 2009 த்தின் பாதிப்புகள் ஏதும் இல்லாமல் "2010௦" பிரெஷ் ஆக, புத்தம் புதிய ஆண்டாகவே மலர விரும்புகிறேன். 

அனைவருக்கும் இனிய "புத்தம்" புதிய ஆண்டு 2010 வாழ்த்துக்கள். 

-மதன்



4 comments:

Balakumar Vijayaraman said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். (எப்படிப்பா, வருசம் முச்சூடும் குறிப்பு எடுத்து வச்சு எழுதுவியா. இவ்வளவு ஞாபக சக்தி தமிழனுக்கு ஆகாதுப்பா )

நினைவுகளுடன் -நிகே- said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Aarthi DayaShankar said...

ஆனாலும் மதன் பொது வாழ்கைல ரொம்ப அக்கறை கட்டிருக்கே..ஹிஹிஹிஹி இன்றைய நிலைமையில் டிவி யும் சினிமாவும் தான் ஒருத்தர் பொது வாழ்கையில active ஆ இருக்காரா இல்லியான்னு சொல்லுது...படித்த புத்தகங்கள் விட்டுட்ட. செத்தவங்க லிஸ்ட்... அப்புறம் ஸ்போர்ட்ஸ்....உன்கிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறோம் நாங்க...பாராட்டுக்கள் மதன்...புத்தாண்டு இனிய ஆண்டாக மலரட்டும்.
- ஆர்த்தி

Aarthi DayaShankar said...

கடந்த ஆண்டு புது வரவுகளை பெற்ற மற்றும் இந்த ஆண்டு புது வரவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய வரவுகள் நல்வரவாகுக. மன(ண) வாழ்கையில் இணைந்து எங்கள் வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அடி(?) எடுத்து(வாங்கி?!$##%^^&) வைத்திருக்கும் அனைவருக்கும் இது மன தைரியம் மிக்க ஆண்டாக இருக்கட்டும்...சென்ற ஆண்டு வேலையில் முன்னேற்றம் கண்டு அடுத்த பதவிக்கு போனவர்களுக்கும் , சில சறுக்கல்களை சந்தித்தவர்களுக்கும் இந்த ஆண்டு இனிய ஆண்டாக முனேற்ற பாதையில் அழைத்து செல்லும் ஆண்டாக மலர வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் அனைவருக்கும் நல்ல மன நிம்மதியையும் நல்ல உடல் நலத்தையும் சந்தோஷத்தையும் அள்ளி வழங்கும் ஆண்டாக திகழட்டும்.

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்