உயிர்

நண்பர்களுக்கு என் வணக்கம்...
மன்னிக்க வேண்டும் வெகு நாட்கள் கழித்து வலை பூவில் எழுதுவதற்கு.எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் எதோ ஒன்று அதை தடுத்து கொண்டே இருந்தது..இதோ உங்களை சந்திக்க மறுபடியும் நட்புடன் வந்து விட்டேன்.

மறுபடியும் ஒரு கதை களத்துடன் தான் வந்திருக்கிறேன்...ரொம்ப உங்களை எல்லாம் அறுக்காமல் கொஞ்சமே பெரிய சிறுகதை வடிவில் இதை கொடுக்க முடிவு எடுத்து இருக்கிறேன். இந்த வலை பூ ஆரம்பித்த புதிதில் இதில் எழுதியவர்கள் பாதி பேர் இப்பொழுது இதை padikkirargalaa என்பது கூட தெரியவில்லை. பாலா , உனது கிருகநிசம் என்ன ஆச்சு??

எனது கதையின் நாயகன் ஒரு கணினி பொறியாளன் (software engineer இன் தமிழ் ஆக்கம்!!?!?).பெயர் குரு பிரசாத். இனி அவனை குரு என்றே அழைப்போம்.குரு பிரசாத் திருநெல்வேலி சீமையில் பிறந்து வளர்ந்து பொறியியல் பட்டப்படிப்பு படித்து இன்று ஒரு பெரிய கணினி நிறுவனத்தில் team leader ஆக நல்ல takehome சம்பளத்தில் வேலை பார்க்கும் ஒரு eligible bachelor.
கதையின் நாயகி-???????? மனிக்கவும் இந்த கதையில் நாயகி இல்லை.
இனி மற்றவர்கள் :
குரு பிரசாதின் அம்மா : டீச்சர் ஆகா வேலை பார்த்து ரிடையர் ஆனவர்கள். குரு அவன் தாயுடன் மிகவும் நெருக்கமானவன். எந்த அளவுக்கு என்றால் அவன் நண்பர்கள் அனைவரையும் பட்ட பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு.

குரு பிரசாதின் அப்பா :group A ஆபீசர் ஆக இருந்து ரிடையர் ஆனவர்.

குரு பிரசாதின் அக்கா: இன்ஜினியரிங் படித்து திருமணம் ஆனதால் குழந்தைகளை கவனிக்க வேண்டி house wife ஆக இருப்பவர். குருவும் இவளும் மிக சிறந்த நண்பர்கள். குரு தண்ணி அடிச்சுட்டு என்ன உளறுவான் ங்கறது வரை இவங்களுக்கு தெரியும். குருவை நன்கு புரிந்து கொண்டவர்.

இவர்கள் எல்லாம் சைடு characters தான் .

மற்ற முக்கியமான நண்பர்கள்:
விக்னேஷ், குமார், அசோக், மதன், ஜான், ரபிக் : குருவும் இவர்களும் பள்ளி பருவத்தில் இருந்தோ அல்லது கல்லூரியில் இருதோ நண்பர்கள்.

இனி கதை...............


- ஆர்த்தி.

3 comments:

Balakumar Vijayaraman said...

Aarthi, welcome back.

//இதில் எழுதியவர்கள் பாதி பேர் இப்பொழுது இதை padikkirargalaa என்பது கூட தெரியவில்லை.//

இன்னும் நிறைய பேர் படிக்கிறாங்க. ஆனா சத்தம் காட்டாம கிளம்பிடுறாங்க. :)

// பாலா , உனது கிருகநிசம் என்ன ஆச்சு??//

இப்போதைக்கு சின்ன பிரேக்.

//அப்பா group A officer, அம்மா டீச்சர், அக்கா engr-house wife. //

என்ன ஆர்த்தி, குடும்பக் கதையா ?

தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

Sakthidevi.I said...

introduction ok...sikiram kadhaiya start pannunga aarthi.. :)(ur previous story was good)
congrats..write more....

Anonymous said...

//இதோ உங்களை சந்திக்க மறுபடியும் நட்புடன் வந்து விட்டேன்.//
மிக்க மகிழ்ச்சி !!!

//கதையின் நாயகி-???????? மனிக்கவும் இந்த கதையில் நாயகி இல்லை.//
போரடிக்கும் போல தெரியுதே :)

//விக்னேஷ், குமார், அசோக், மதன், ஜான், ரபிக் : குருவும் இவர்களும் பள்ளி பருவத்தில் இருந்தோ அல்லது கல்லூரியில் இருதோ நண்பர்கள்.//
நம்மள வாரிவுடாம இருந்தா சரி .......... :)

//இனி கதை...............//

வாரத்திற்கு ஒரு அத்தியாயம் / கதை சொல்லுங்க...

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்