உயிர்-1
குரு காலையில் சுப்ரபாதம் முடியும் நேரத்தில் கண்விழித்தான். செல் போனில் மணி பார்த்தன்.. மணி 8 .. ஆஹா இன்னிக்கு டீம் மீட்டிங் 10 மணிக்கு இருக்கு...ஐயோ என்றிருந்தது அவனுக்கு. "அம்மா அம்மா .. உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லிட்டு படுத்தேன் 7 மணிக்கு எழுப்பி விட சொல்லி? ஏம்மா எழுப்பலை?..இன்னிக்கு நான் டைமுக்கு போகாட்டி உங்களுக்கு இருக்கு" என்று சொல்லிக் கொண்டே பாத்ரூமுக்கு விரைந்தான். "டேய் அப்பா பத்தி உனக்கு தெரியாதா...தூங்குறவனை எழுப்புறது மஹா பாவம்னு சொல்லிட்டாரு"."
"ஏம்மா அதெல்லாம் காடு மேடுல களை புடுங்கி உடம்பு வலிக்க வேலை செய்யுறவனுக்கு பா ..நாங்க எல்லாம் நோகாம நோம்பி சொகுசு வாழ்க்கை வாழறவங்க அப்பா. " என்றான் பாத்ரூமில் இருந்த படியே..
குளித்து முடித்து வெளியே வரும் போது அம்மா பூஜை செய்த தசாங்க வாசனை பிடித்து சிறிது சாமி கும்பிட்டான்.. "அம்மா நேரம் ஆயிரிச்சு " என்று குரல் ஓயும் முன்னே மெத்தென்ற இட்லியும் மணக்க மணக்க சாம்பார் சட்னியும் முன்னே இருந்தன. சாப்பிட்டு முடித்து பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது மணி பார்த்தான் - 9 மணி.எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில் சென்று விடலாம் என்று மனதில் எண்ணியபடியே பைக்கை ஸ்டார்ட் செய்தான்..
அபார்ட்மெண்டின் நாலாவது மாடியில் இருந்து லிப்டில் இறங்கி ஓடி வந்தார்கள்.."எத்தனை தடவை தான் சொல்றது ஹெல்மெட் போடாம பைக் ஓட்டாதேன்னு. இதுக்கெல்லாம் ஒருத்தி வந்தா தான் சரிப்படும். சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சா தான் நீயெல்லாம் சொல் பேச்சு கேப்பே." குரு எரிச்சல் அடைந்தான். "அம்மா சின்ன சின்ன விஷயத்தை எல்லாம் கல்யாணத்தோட லிங்க் பண்ணாதீங்கம்மா. நான் ஆயிரம் தடவை சொல்லிட்டேன் onsite போய்ட்டு வந்தப்புறம் தான் கல்யாண பேச்சு எடுக்கணும்னு..காலையிலயே என்னை கடுப்பேத்தாதீங்க அம்மா.வரேன், மத்தியானம் கொஞ்சம் லேட் ஆகும் வர..எனக்கு வெயிட் பண்ணாம நீங்களும் அப்பாவும் சாப்பிடுருங்க .. அப்புறம் அம்மா குளிக்கும் போது அக்கா கால் பண்ணினா.. நான் இனி 11 வரைக்கும் போன் எடுக்க முடியாது..உங்களுக்கு பேசுனா நீங்க சொல்லிருங்க.. நான் அப்புறமா அவகிட்ட பேசுறேன்...bye மா.." என்றபடியே ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கை ஸ்டார்ட் செய்தான்..
Parking slot இல் வண்டியை நிறுத்தும் போது மணி பார்த்தான்..சரியாய் 9:32 .லேப்டாப் ஐ ஆன் செய்து அன்றைய மெயில்களை பார்த்து கொண்டிருந்தான்...கால் வந்தது.. "Yes Amar..Meeting we willl start the meeting by 10" என்று மீட்டிங்கை பற்றி பேசி கொண்டிருந்தான்.
மீட்டிங் ரூம் போகும் முன்னே ஜான் இடத்துக்கு வந்தான்..இன்னும் வரவில்லை.. என்ன கடிகாரம்(ஜானின் பட்டபெயர்) இன்னிக்கு சரியான நேரத்துக்கு வரலே என்று யோசித்து கொண்டே மொபைலை silent மோடில் போட்டான். மீட்டிங் ஆரம்பித்தது...
வெளியே வரும் போது மொபைல் எடுத்து பார்த்தான். 3 missed calls. அக்கா, அப்புறம் எதோ ஒரு பாங்கின் சேவை மைய நம்பராக இருக்க வேண்டும், எந்த கடன் வேண்டும் என்று கேட்டு உயிர் எடுப்பவர்கள்.. அடுத்து ஜான் செய்திருந்தான். என்னாச்சு ??
ஜானின் நம்பரை டயல் செய்தான். ஜான் அவனோடு கல்லூரியில் நான்காண்டுகள் ஒன்றாக படித்தவன்.. சென்னை வந்த புதுதில் இருவரும் ஒன்றாக தங்கி இருந்தவர்கள். கல்லுரி காலத்தில் ஜானோடு அவ்வளவு சினேஹம் கிடையாது குருவிற்கு. ஏனென்றால் அவன் electrical இவன் electronics. ஆனால் இப்போது இருவரும் ஓரளவு நெருங்கிய நண்பர்கள் எனக் கூறலாம்.
ஜானின் மொபைல் அடித்து கொண்டே இருந்தது..என்னாச்சு இவனுக்கு உடம்பு கிடம்பு சரி இல்லியா என்று நினைத்து கொண்டே அக்காவின் நம்பருக்கு டயல் செய்தான். இருவரும் ஏதோ குடும்ப உறுப்பினர்கள் பற்றி சில நிமிடங்கள் பேசினார்கள். பேசி கொண்டு இருக்கும் போதே ஜானின் நம்பரில் இறுதி கால் வந்தது.. "அக்கா இரு அப்புறமா பேசறேன் என்று லைனை கட் செய்தவன் ஜானின் காலை எடுத்தான்..
"என்னடா ஆபீஸ் வரலே இன்னும்?" என்று முடிபதற்குள்ளாகவே "டேய் மச்சான் எனக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் ஆயிடிச்சு டா" என்றான்.
--- உயிர் வளரும்.
Subscribe to:
Post Comments (Atom)
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
2 comments:
oh, IT story ! cool ....
//டேய் அப்பா பத்தி உனக்கு தெரியாதா...தூங்குறவனை எழுப்புறது மஹா பாவம்னு சொல்லிட்டாரு"."//
சூப்பர் அப்பா :)
ம்ம்ம்ம் நல்ல flow வில் கதை ஆரம்பித்திருக்கிறது ....Good
அடுத்த அத்தியாயம் படிக்க ஆவலாக உள்ளேன்
-மதன்
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.