மனித உயிர்?

எனது சிந்தனைகளை உங்களிடத்தில் பகிர்ந்திட மீண்டும் வந்து விட்டேன். கடந்த சில நாட்களாக கேள்விப்படும் செய்திகள் மிகுந்த வருத்தத்தில் ஆட்படுத்துகிறது.

நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?

'Software engineer' ஆக பணி புரியும் நபர் தனது மனைவியை, இன்னொரு பெண்ணுக்காக 'இரும்பு கம்பி' யாலேயே கொலை செய்த சம்பவம்.....

நான் பணி புரிந்த கல்லூரியில் படித்த மாணவி. அவர் படிப்பு முடித்த பின் 'Software engineer' ஆக பணி புரிந்தார். திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கொல்ல பட்டுள்ளார். அந்த பெண்ணும், பெண் வீட்டாரும், இதற்காகவா 'திருமணம்' செய்து வைக்கிறார்கள்.

ஆண்களை விட , ஒரு பெண்ணுக்கு திருமணம் மிகுந்த மாற்றத்தையே ஏற்படுத்துகிறது. வாழும் சூழல், உணவு முறை, இப்படி பல.. இருபது அல்லது இருபத்து ஐந்து வருடங்கள் கழிந்த பின், திடீரென ஒரு புது சூழ்நிலையில், தனது வாழ்கையை பற்றிய ஆயிரம் கற்பனைகளுடன் ஒரு பெண் தனது வாழ்கையை மேற்கொள்கிறாள். அந்த பெண்ணுக்கு , சில மாதங்கள் தான் இவ்வுலகில் வாழ போகிறோம் என தெரிந்திருக்குமா?

இதை போன்ற பல சம்பவங்கள் நாடெங்கிலும் நடந்தேறி கொண்டு தான் இருக்கின்றன. மனித உயிரை மாய்க்கும் அளவுக்கு, கொடூரர்களாக மாறி விட்டார்களா?

மும்பை நகரத்தில், கடந்த ஏழு மாதங்களில், 64 'bomb blast' ....

நமது நாடு, தீவிரவாதத்தை ஒடுக்க தவறியதாக எண்ணுவதா அல்லது நமது அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையான நேரத்தை,இம்மாதிரியான செயல்களுக்கு கண்டனம் வெளியிடுவதிலும், அடுத்த கட்சிகளை குறை சொல்வதிலும் தான் கழிக்கிறார்களா?

தீவிரவாதிகள் நமது நாட்டை தாக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்களென்பதை காட்டுகிறதா அல்லது தொழில் நுட்ப முன்னேற்றமும், அறிவு திறனும் ஆக்க செயல்பாடுகளை விட அழிவிற்காக தான் மிகவும் செயல் படுகிறதா?

அதை விட, 'bomb blast' நடந்தால் அந்நிய ரூபாயின் மதிப்பு உயரும் என 'சுய நலமாக' சிந்திக்கும் ' பணமே எல்லாம்' என எண்ணும் சிலரை எண்ணி வருந்துவதா?

எது எவ்வாறு இருப்பினும், மனித உயிரை மிக சுலபமாக பறிக்கும் அரக்க மனிதனாக நாளுக்கு நாள் மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

உயிர்....மேன்மையானது.இவ்வுலகில் மனிதனாக வாழும் சில வருடங்களாவது, அடுத்தவருக்கு நன்மைகள் பல செய்யா விடினும் தீயது செய்வதை தவிர்த்தல் நல்லது.

நாம் உலகை அமைதி பூங்காவாக மாற்ற முர்படா விட்டாலும், தீவிரவாத இரத்த களமாக மாற்றாமல் இருக்கலாமே, மனித தன்மையுடன்....

உங்கள் கருத்துகளுக்காக.....

நட்புடன்
ஆனந்தி.

5 comments:

பாலகுமார் said...

don't where r society is heading too...

isakki said...

society ரொம்ப மோசமா போகுதேன்கிற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ,உன் தமிழ் புலமையை கல்லூரி நாட்களில் கண்டுக்காம விட்டுடோமேன்னு ரொம்ப கவலையா இருக்குது ஆனு. really nice

சிவரஞ்சனி said...
This comment has been removed by the author.
சிவரஞ்சனி said...

மகா சொன்னது தான் correct. இப்படி ஒரு தமிழ் சிந்தனை சிற்பியை நான்கு வருடத்தில் அடையாளம் காணமல் விட்டுடோமே என்று வருத்தமாக உள்ளது.
நல்ல பண்புள்ள, படித்த, திறமையான ,ஊழல் பண்ணாத தலைமை இருந்தால் தான் இந்த சமூகத்தை திருத்த முடியும்

Anonymous said...

முன்பு ஆனந்தி சொன்னது போல் நமது கலாசாரத்தை பற்றி பெருமை பட நிறைய்ய விஷயங்கள் இருந்தாலும் ........கணவன் / மனைவி தலையில் கல்லை போட்டு கொல்லும் கலாசாரம் நமது ஆட்களின் கண்டு பிடிப்பே.....அடிப்படையில் ஆண்களுக்கு இருக்கும் தன்முனைப்பு சிந்தனையும் / பெண்களுக்கு வரும் அகங்காரமும் பிரதான காரணங்கள் இது போன்ற செயல்களுக்கு....

//'bomb blast' நடந்தால் அந்நிய ரூபாயின் மதிப்பு உயரும் என 'சுய நலமாக' சிந்திக்கும் ' பணமே எல்லாம்' என எண்ணும் சிலரை எண்ணி வருந்துவதா?//
இந்த மேட்டர் எனக்கு தெரியாதே! மெய்யாலுமா?....

தீவிரவாத நடவடிக்கைகள் அதிகமான பகுதிகளை அதிக கவனிப்புடன் நோக்குவதே தற்காலிக உடனடி தேவை....."சாத்தானின் வருகை" (kandaliza rice visit to india) குறித்தும் அதிமுக்கிய கவனம் தேவை.....

--மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்