நள பாகம்

கோழி பிரியாணி
தேவையான பொருட்கள்:
பட்டை,ஏலம்,கிராம்பு,புதினா,கொத்தமல்லி,சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் , தக்காளி ,பச்சை மிளகாய் ,இஞ்சி , பூண்டு,பிரியாணி அரிசி, கோழி( நறுக்கியது )
செய்முறை :

முதலில் இஞ்சி,பூண்டை அரைக்கவும்.சின்ன வெங்காயத்தை தனியே அரைத்து கொள்ளவும்.புதினா மற்றும் கொத்தமல்லியை தனியே அரைத்து கொள்ளவும்.பட்டை,ஏலம்,கிராம்பு ஆகியவற்றையும் பொடியாக்கி கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைக்கவும். தேவையான அளவு எண்ணையை ஊற்றவும். சிறிதளவு நெய் சேர்க்கவும்.எண்ணை சூடேறியவுடன் பட்டை, ஏலம், கிராம்பு பொடியை போடவும் .நறுக்கிய பெரிய வெங்காயம் ,தக்காளியை போட்டு வதக்கவும் அரைத்த இஞ்சி ,பூண்டு விழுதை சேர்க்கவும் . பிறகு அரைத்த வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும். புதினாவை சேர்க்கவும். பிறகு கோழியை போட்டு சிறிது நேரம் குறைந்த தீயில்(sim) வேக விடவும்.குக்கரில் இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றவும் . அதில் ஒரு பங்கு பிரியாணி அரிசியை களைந்து போடவும்.பிறகு தாளித்த கலவையை சேர்க்கவும் .தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.இரண்டு விசிலில் இறக்கவும் .சுவையான கோழி பிரியாணி தயார் .சமைத்து , சுவைத்து பார்க்கவும்.
உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்த்து ............
உங்கள் அன்புத் தோழி,
சிவரஞ்சனி
1 comments:

சோலைஅழகுபுரம் said...

உங்க Versatality க்கு அளவே இல்லாம போச்சு !!!

கலக்குங்க !

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்