அறிமுகம்

முதல் பதிவு !!!

அனைவருக்கும் ஆனந்தி ஆறுமுகராஜனின் அன்பார்ந்த வணக்கம் !!! பள்ளியின் முதல் நாள், கல்லூரியின் முதல் நாள், வேலையில் முதல் நாள்.......இது போல முதல் அனுபவங்கள் என்றுமே பசுமையாய் நமது மனங்களில் நீங்கா இடம் பெறும்.

அது போன்ற ஒரு பசுமை உணர்வை நண்பர்கள் அமைத்து கொடுத்த வலைப்பதிவேட்டில், எனது 'முதல் பதிவும்' ஒரு இனம் புரியாத, நெகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தி தருகிறது.

தமிழில் blog என்றதுமே, blog என்ற வார்த்தையின் தமிழாக்கத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் தனித்திருக்கும் சமயங்கழில் பெரும்பாலோரின் பொழுது போக்கு, 'Net surfing' தான். சில வாரங்கள் முன், google தேடலில் தமிழ் blog பற்றி படித்த பொழுது, 'வலை பதிவேடு' மற்றும் 'வலை பூ' இரண்டுமே வழக்கத்தில் இருப்பதை அறிந்தேன். முதலான 'வலை பதிவேடு' வலுவான கருத்தாண்மை கொண்ட சொல்லாக தோன்றினாலும், எனது மனமோ 'வலை பூ' என்ற சொல்லின் பால் தான் அதிகம் ஈர்க்க படுகிறது. பெண் என்பதால் இவ்வாறு 'வலை பூ'வின் மேல் ஈர்க்கபடுகிறேனோ என்னவோ, தெரிய வில்லை ???

எந்த ஒரு சிறு காரியத்தை செய்யும் போதும் அதனில் 'பெஸ்ட்' ஆக செய்ய வேண்டும் என்பது தானே மனித மனதின் இயல்பு. நான் மட்டும் என்ன அதற்கு விதிவிலக்கா? அதையே எனது மனமும் நாடுகிறது. இனி வரும் நாட்களில் எனது மனதை கவர்ந்த, சந்தோஷப்படுத்திய, காயப்படுத்திய, சிந்திக்க வைத்த அனுபவங்களை 'நட்புடன்' பதிவு செய்வதில், உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரு மகிழ்ச்சி !!!

நல்ல முயற்சிக்கு 'initiation' ரொம்ப முக்கியம். 'நட்புடன்' தொடங்க வழி வகுத்த ஆர்த்திக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

விடை பெறும் முன் ஒரு வேண்டுகோள் .....

'Blogging is an art'... இந்த 'வலை பூ' பதிவில் எனது கன்னி முயற்சியை ஆரம்பிக்கும் சமயத்தில் உங்கள் ஆதரவை, சிற்பல பிழைகள் எனது பதிவில் இருப்பினும் உங்களின் 'கமெண்ட்ஸ்' மூலம் பதிவு செய்ய தவறாதீர்...

நன்றி

நட்புடன்
ஆனந்தி.

4 comments:

Aarthi DayaShankar said...

ஆனந்தி ...நீயா இது...கலக்கிட்ட போ...ரொம்ப நல்ல இருக்கு உன்னுடைய நடை... வலை பூவிற்கு வருகை தந்திருக்கும் உனக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..

ஆர்த்தி

சிவரஞ்சனி said...

அருமை ஆனந்தி ...வாழ்த்துக்கள்

சோலைஅழகுபுரம் said...

உங்க தமிழ் நடை நல்லா இருக்கு, ஆனந்தி !!!!

U.K வாழ்க்கை பற்றி, உங்க பள்ளி குழந்தைகள் பற்றி, நிறைய எழுதுங்கள் !

gems-voice said...

Ananthi very nice...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்