"Stud" ன்னா என்னடா? - கிறுக்கனிஸம்(01)

எச்சரிக்கை: இந்த தொடர்ல வரும்  சாகசம் எல்லாம் நாங்க பண்ணது ன்னு நினைச்சு, எங்கள கும்ம வராதீங்க.. இதுல்ல வர்ற Nick name மட்டும் தான் எங்களோடது. Incidents எல்லாம் சும்மா ரூம் போட்டு உக்கார்ந்து யோசிச்சது .... ஒரு popularity க்காக எங்க பட்டப் பெயரைக் கொடுத்து உதவின வள்ளல்கள் நாங்க... 

மூன்றாவது செமஸ்டர் எலக்ட்ரானிக்ஸ் லேப். பசங்க எல்லாம் அப்ப் தான் முதன்முதலா C.R.O வையும், U.P.S ஐயும் ரொம்ப ஆச்சர்யத்தோட பார்த்துகிட்டு இருந்தானுங்க. எங்க டிபார்ட்மென்ட் எப்படின்னா, பொண்ணுங்க பேட்ஜ் தனி, பசங்க பேட்ஜ் தனி. (எந்த புண்ணியவானுக்கு இந்த ஐடியா தோனுச்சோ ?!?!). 

அன்னைக்கு லேப், காலைல பொண்ணுங்களுக்கு, மதியம் பசங்களுக்கு. திடீர்ன்னு, காலைல லேப் பண்ணிட்டுப் போன, எங்க க்ளாஸ் பொண்ணு ஒன்னு, மேடம் கிட்ட ஏதோ சொல்லிட்டு, நாங்க நின்னுகிட்டு இருந்த டேபிள் பக்கமா வந்து நின்னது. கிறுக்கன் வேகமா அலர்ட் ஆகி, பக்கத்து டேபிள்ல இருந்து எங்க டேபிளுக்கு ஜம்ப்பாகி, தெளிவா விசாரிக்க ஆரம்பிச்சுட்டான்...

"என்னங்க, என்ன விசேம், என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?" "இல்ல, மார்னிங் இங்க என் Stud அ மிஸ் பண்ணிட்டேன், அதான் ......" "ஓ ! உங்கது தானா இது, இந்தாங்க இனிமே பத்திரமா பார்த்துக்கோங்க !"

ரொம்ப சின்சியரா அட்வைஸ் பண்ணி, நாங்க கையெழுத்துப் போட்டு வாங்கி வச்சிருந்த Breadboard அ எடுத்துக் கொடுத்தான். அந்த பொண்ணு பதறிப்போய், "இல்ல, பரவால்ல, இது இல்ல ..." ன்னு சொல்லிட்டு, மேடம் கிட்ட கூட சொல்லாம ஓடிருச்சு.

கிறுக்கன் +2வில் Vocation Group ல படிச்சவன். அதனால Resistor, Capacitor எல்லாம் கொஞம் தொட்டுப் பார்த்திருந்தான். அத வச்சுகிட்டு லேப்ல ஸீன் போடுவான். 

காடு அவனப்பார்த்து, ரொம்ப அப்பாவியா, " டேய் கிறுக்கா, Breadboard க்கு இன்னொரு பேரு ஸ்டுட் ஆடா ?" இவனும் சளைக்காமல், "இல்லடா, அந்த பொண்ணுகிட்ட நீங்க யாரும் பேசுறதுக்கு முன்னாடி நான் பேசனும்னு , சும்மா Breadboard அ எடுத்துக் கொடுத்தேன் டா!"

இதுக்குள்ள, மட்டை ஓடிப்போய், எங்க க்ளாஸ்ல G.R.E படிச்சுட்டு இருந்த ஒரு பையன்ட்ட, stud க்கு அர்த்தம் கேட்டுட்டு வந்து, "கிறுக்கு நாயே !, கீழே கிடந்ததுன்னு சொல்லி இன்ன வரைக்கும் ஒரு தோட வச்சு விளையாடிட்டு இருந்தியே, எங்கடா அந்த தோடு ?" "அந்த பொண்ணு என்னை கூப்பிட்ட அவசரத்துல, ஜன்னல் வழியா வெளிய தூக்கிப் போட்டுட்டு தான் வந்தேன் டா !" உடனே காடு டென்சன் ஆகிட்டான் , "என்ன, அவ உன்னை கூப்பிட்டாளா? நீயா வந்து சந்துல சிந்து பாடிட்டு, என்னடா கதை விடுற !!!!"

மட்டை அவனை சமாதானப்படுத்தி, " காடு, எல்லாம் நல்லதுக்கு தான்டா, இந்த நாய் பண்ண அலும்பு கடவுளுக்கே அடுக்கல, அதான் கைல கிடைச்சத, காதுல மாட்ட விடாம பண்ணிட்டாரு " - ன்னு சொல்லி குதிச்சான்.

"என்னடா சொல்ற, ஒன்னும் புரியல !" மட்டை பிரகாசமானான். "மக்களே, நல்லா கேட்டுக்கோங்க !, Stud ன்னா தோடு... நல்ல வேளை அந்த பொண்ணோட தோடு இப்போ நம்ம கிறுக்கன் கிட்ட இல்ல, இவன் மட்டும் தோட, அந்த பொண்ணு கிட்ட கொடுத்திருந்தான்னா ... என்ன ஆகியிருக்கும், யோசிச்சுப்பாருங்க .... இந்த நாய் ஹீரோ ஆகியிருப்பான். சும்மாவே இவன் இம்சை தாங்க முடியாது, இதுல இந்த கொடுமை வேற நடக்கலையேன்னு சந்தோஷப்படுவோம் ! .... கிறுக்கா, நீ ஒன்னும் கவலைப்படாதடா, அடுத்த வாரம் அவ செருப்ப மிஸ் பண்ணிட்டுப் போவா, மறக்காம பத்திரப்படுத்தி வச்சு, நல்ல பேரு வாங்கிக்கோடா, சரியா !"

எல்லாருமா சேர்ந்து, கிறுக்கனை நல்லா ஓட்டித்தள்ளிட்டோம். லேப் முழுதும் ரொம்ப சோகமாவே இருந்தான். யார் கூடயும் பேசவே இல்ல. லேப் முடிஞ்சு ஹாஸ்டலுக்கு போகும் போது ஆளையே காணோம். எங்க ஹாஸ்டலுக்கு, எங்க டிபார்ட்மென்ட் பின்னாடி ஒத்தையடி பாதை வழியா தான் நாங்க போவோம். கொஞ்ச தூரம் போயிருப்போம். எதேச்சியா திரும்பிப் பார்த்த காடு, 

"டேய், அங்க பாருங்கடா, கிறுக்கன் அங்க என்னடா பண்ணிட்டு இருக்கான் ?" எல்லாரும் திரும்பிப் பார்த்தோம். லேப் ஜன்னலுக்கு வெளியே, மண்டிக்கிடந்த முள்ளுச்செடிகளுக்கு நடுவே, கிறுக்கன் ரொம்ப நம்பிக்கையுடன் "அந்த" Stud ஐ தேடிக்கொண்டிருந்தான்.


இன்னும் கிறுக்குவோம்...
source : solaiazhagupuram.blogspot.com

4 comments:

isakki said...

Bala,dont give too much warning.then there will be no value for warning.
very interesting!!! .kadavulae ,paavam unga kirukkan.waiting eagerly for next episode.

சோலைஅழகுபுரம் - பாலா said...

//Bala,dont give too much warning.then there will be no value for warning.//
மகா !
உனக்கென்ன, நீ பாட்டுக்கு சொல்லிட்டு போய்டுவ, பாவம் வீட்ல அடி வாங்க போற பசங்கள நெனச்சா, எனக்குத் தானே பவமா இருக்கு ?????

Aarthi DayaShankar said...

Bala as usual superb...Jodi no 1 la vara mathri ore comments koduthu koduthu bore adikiuthu, vera yaaravathu nalla comments kodungappa...

Ananthi Arumugarajan said...

College life ku thirumbavum pora feeling !! Really superb !!!

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்