பெண் மனம்

06-04-1982
திருநெல்வேலி


அன்புள்ள வைத்திக்கு,
நான் உங்களை சந்தித்து சில விஷயங்களை நேரில் பேச வேண்டும் என்று நினைத்தேன்.அது இனி எப்போவுமே முடியாது போலிருக்கு. அப்பா விடம் உங்களை பத்தி எவளவோ எடுத்து சொல்லி நம்ப கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டேன். அப்பாவுக்கு உங்களை நல்லாவே தெரியும், அதனால நான் உங்களை பத்தி ரொம்ப எடுத்து சொல்வது கூட அதிகமா தான் தோணிச்சு அவருக்கு. ஆனா அப்பா ஜாதியையும் குடும்பத்தையும் நண்பர்களையும் மீறி எதுவும் செய்ய தயாரா இல்லை.
நாம இப்படி ஒரு சூழ்நிலைய ஏற்கனவே கற்பனை பண்ணி பேசி இருக்கோம், நீங்க அப்போ சொன்னது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. நம்ப ரெண்டு பேர் வீட்லேயும் யார் சம்மதிகலேன்னாலும் நம்ப எவ்வளவு முடியுமா அவ்வளவு எடுத்த சொல்ல முயலுவோம். அப்படியும் சம்மதிகலேன்னா நாம நம்ப காதலை தான் விட்டு கொடுக்கணும், பெத்தவங்களை இல்லன்னு சொன்னீங்க. ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க, இப்போ நினைச்சாலும் எனக்கு பகீர்ங்குது.
எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலே இப்போ, எனக்கு அம்மா அப்பாவும் வேணும், நீங்களும் வேணும் வைத்தி. அப்பா எனக்கு ஏற்கனவே அமெரிக்கால இருக்குற ஒரு மாப்பிள்ளை சம்பந்தம் பார்த்துட்டாரு. என் சம்மததுக்காக தான் வீட்ல காத்திருக்காங்க வைத்தி. நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க. நீங்க தான் எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லணும்.
இனி நாம நேர்ல சந்திச்சு பேசறது முடியாத காரியம். என் தோழி உமா கிட்ட என்ன சொல்லணுமோ சொல்லி அனுப்புங்க. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் நல்ல முடிவா தான் எடுபீங்கனு எனக்கு தெரியும்.
உங்கள் முடிவை எதிர்நோக்கி,
சரண்யா


- அஞ்சல் வரும்
ஆர்த்தி

1 comments:

சோலைஅழகுபுரம் - பாலா said...

அதுக்குள்ள அமெரிக்க மாப்பிள்ளை வந்துட்டாரா ?

//06-04-1982//

nice date la ... :)

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்