என் மகனின் முதல் ஆசிரியருக்கு!



ஐயா ,

இவன் எங்கள் வீட்டின் செல்ல இளவரசன் -இங்கே
இவன் வைத்தது தான் சட்டம் . இவனுக்கு
உலகில் அனைவரும் சமமானவர்கள் என்பதை
உங்கள் பாரபட்சமற்ற போக்கால் புரிய வையுங்கள்.

இவனுக்கு அ,ஆவோடு சேர்த்து வாழ்வின்
அரிச்சுவடியையும் சொல்லி கொடுங்கள்.
இவன் வீட்டை தாண்டிய உலகத்தை
முதன்முறையாக எட்டி பார்க்கிறான்,
இவனுக்கு பாடத்தோடு பூக்களையும் ,
பட்டாம்பூச்சிகளையும் ,பறவைகளையும்
ரசிக்க சொல்லி கொடுங்கள்.

இந்த பிரபஞ்சத்தின் அத்தியாயங்களை இவன்,
உங்கள் கண் கொண்டு வாசிக்க போகிறான்.
இவனை சிறு,சிறு அதிசியங்களிலும் வியக்க வையுங்கள்.

இவன் எங்கள் வீட்டில் நடை பயில்வதெல்லாம் ,
எங்கள் உள்ளங்கைகளில் தான்.ஆனால்
வாழ்வில் முட்புதர்களையும் தாண்ட வேண்டி வரும்
என்று சொல்லி கொடுங்கள்.

இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
பரிவினால் புரிய வையுங்கள்.
உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.

இவனுக்கு இதுவரை எங்கள் வீடு தான் உலகம்.
இனி ,உலகையே தன் வீடாய் பாவிக்கக் கற்றுக் கொடுங்கள்.

நட்பை போற்றச் சொல்லுங்கள்,
நல்லதை பாராட்டச் சொல்லுங்கள்,
திறந்த மனம் கொண்டிருக்கச் சொல்லுங்கள்,
திறம்பட செயலாற்றச் சொல்லுங்கள்.......

ஐயா,

இவன் வல்லவனாகவும்,
நிச்சயம் நல்லவனாகவும் வளர,
உங்களை முன் மாதிரியாய் நிறுத்துங்கள்.
நன்றி!

(சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு !)

(சும்மா, யோசிச்சு எழுதுனது தான், கண்டிப்பாக அனுபவம் இல்லை !)

நட்புடன்,
பாலகுமார்.


7 comments:

isakki said...

ரொம்ப நல்லா இருக்குது ,நல்லா இருக்குது,நல்லா இருக்குது.
ஆனா ஒன்னு , என் மகளின் முதல் ஆசிரியருக்கு பதினஞ்சாயிரம் கொடுக்க வேண்டியதா போச்சு. ஆனா நீ சொன்னதெல்லாம் சொல்லி கொடுப்பாங்களானுதான் தெரியலை.
be prepared bala , இவ்வளவு அப்பாவியா இருக்காதே, எப்பிடியும் உன் பையனோ பொன்னோ ஸ்கூலுக்கு போகும்போது playschool fees 50000 ஆனாலும் ஆச்சரிய படாதே !!!

Aarthi DayaShankar said...

//இவன் வல்லவனாகவும்,
நிச்சயம் நல்லவனாகவும் வளர,
உங்களை முன் மாதிரியாய் நிறுத்துங்கள்.//


Superb.....

நிதர்சனமான வார்த்தைகள்

வளர்க நின் திறன்

Anonymous said...

romba nalla irrukku Bala.

//இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
பரிவினால் புரிய வையுங்கள்.
உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.//

very true. Ithu aasiriyar mattum illai amma, appavum follow panna vendiayathu.

//சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு !//

Ellorukkum first teachers parents thane...

//சும்மா, யோசிச்சு எழுதுனது தான், கண்டிப்பாக அனுபவம் இல்லை !//

namburathukku knojam kashtama irrukku :), yena kavithai avlo nalla irrukku.

Rathi

Anonymous said...

romba nalla irrukku Bala.

//இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
பரிவினால் புரிய வையுங்கள்.
உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.//

very true. Ithu aasiriyar mattum illai amma, appavum follow panna vendiayathu.

//சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு !//

Ellorukkum first teachers parents thane...

//சும்மா, யோசிச்சு எழுதுனது தான், கண்டிப்பாக அனுபவம் இல்லை !//

namburathukku knojam kashtama irrukku :), yena kavithai avlo nalla irrukku.

Rathi

isakki said...

hello idhu yaaru namma rathiyaa? ayyo bala u are great.blogkku vaanga ,vaangannu aarthy evvalavu solliyum varatha rathijanakiyai kooda oru nalla padaippai koduthu vara vaichuttiyae? great!

ennappa,neenga enga kooda padicha rathithanae?
appadi illama vaera yaaravthaa irunthaa simply ignore this comment.

Anonymous said...

Good thoughts!

//உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.//

அருமையான வரிகள் ....பள்ளி பருவத்திலே இது மாதிரியான அடித்தளம் தான் பிற்காலத்தில் நல்ல மனிதர்களை சமூகத்தில் உருவாக்கும்....(100/100 - மட்டும் அல்ல )

//namburathukku knojam kashtama irrukku :), //

எனக்கும் தான்......

- மதன்

பாலகுமார் said...

எல்லோருக்கும் நன்றிகள்!

//very true. Ithu aasiriyar mattum illai amma, appavum follow panna vendiayathu.//

இதெல்லாம் ஆசிரியருக்கு சொல்ற மாதிரி, பெற்றோருக்கும் தானே....

//namburathukku knojam kashtama irrukku :), //

//எனக்கும் தான்.....//

ஒரு படைப்பாளியா ஆன பின்னாடி, அந்த கேரக்டராவே மாறித்தானே கவிதை எழுத முடியும் !!! ( எங்க தெரு தாண்டி, மூணாவது சந்து கடைசீல இருக்குற மாரியாத்தா மேல, சத்தியம், நம்புங்கப்பா :( அப்படியும் நம்ப மாட்டீங்கன்னா, ரைட்டு விடுங்க, நெக்ஸ்ட் கவிதைல மீட் பண்ணுவோம். )

//hello idhu yaaru namma rathiyaa? //

தெரியலையே !

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்