ஆசை.....ஆசை.......

ஒரு நாள் குருவும் அவருடைய சிஷ்யனும் பிரதான வழி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அது சமயம் தரையில் ஒரு சிறிய ஊர் குருவி பறக்க முடியாமல் தத்தளித்து கிடந்தது. குரு சிஷ்யனை பார்க்க , சிஷ்யன் ஓடோடி சென்று அந்த குருவியை கையில் எடுத்து குருவிடம் கொடுத்தான். குருவியின் சிறகை குரு தன் கையால் அன்போடு நீவி கொடுத்து பறக்க விட்டார். குருவி மகிழ்ச்சியாக வானில் பறந்து சென்றது. பின் இருவரும் நடையை தொடர்ந்தனர்.

சற்று தூரம் கடந்ததும் வழி ஓரத்தில் முடவன் ஒருவன் தாகத்திற்கு நீர் கிடைக்குமா என்று குரு-சிஷ்யனிடம் கேட்டான். சிஷ்யன் குருவை பார்க்க , குருவோ கண்டும் காணாதது போல நடையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, சிஷ்யன் குருவிடம் கேட்டான், "ஏன் அந்த முடவனுக்கு நீங்கள் உதவ முன் வரவில்லை. கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் புண்ணியம் கிடைக்கும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள் "

குரு சொன்னார் , " ஊர் குருவியை ஏற்கனவே காப்பாற்றி புண்ணியம் கிடைத்து விட்டது. நிறைய்ய புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பேராசை படாதே, உனது ஆசை அளவோடு இருக்க வேண்டும்."

சிஷ்யன் யோசிக்க ஆரம்பித்தான்....இப்போ நீங்க யோசிக்கிற மாதிரியே....

-மதன்

9 comments:

பாலகுமார் said...

எப்படித் தான் உக்கார்ந்து யோசிக்கிறீங்களோ !

Aarthi DayaShankar said...

sari thaan pongappa ...namakellam avlo yosika mudiyathu ...

- aarthi

மயிலவன் said...

Room போட்டு யோசிக்கிறீங்களோ...........!

isakki said...

aamaa aamaa, peraasai perunashtam. ippidi ella udaviyaiyum nammakku munnala poravanae pannitta namakku engittu punniyam kidaikkum? oruthar mattum sorgathukku ponaa nallavaa irukkum.sorgamo,naragamo naalu paroda ponaathaan jollyaaa irukkum okvaa madhan?

Sakthidevi.I said...

ithenna different aana bathil...athuvum oru guruvidam irunthu....
Ennaalaiyum yosikka mudiyala......

madhan said...

இந்த பதிவின் baseline முரண்பாடுகள் பற்றியது...ஆசை Vs புண்ணியம் என்பது tag ன் இருமுனை போல.....இரண்டும் இருந்தால் தான் எதையும் கட்ட முடியும்....இரண்டும் இல்லையென்றால் "tag" என்பதே இல்லை....வேறுவிதமாக சொன்னால் ஒன்றின் (புண்ணியம்)பின்னால் மற்றொன்று (ஆசை) ஒளிந்து கொண்டுள்ளது எனலாம்....

// ippidi ella udaviyaiyum nammakku munnala poravanae pannitta namakku engittu punniyam kidaikkum? // என்று மகா சொல்வது socialogical thought!....

மயிலவன், பெங்களூரில் எல்லாம் "Room" போட்டு யோசிக்க என்னால் முடியாது...அதெற்கென்று பாண்டிச்சேரி தான் போக வேண்டும்.....:)

okay..okay....ரொம்பவும் யோசிக்க வேண்டாம் இதைப்பற்றி......

அனைவருக்கும் நன்றி.

-மதன்

Deepa said...

blog-a படிக்கும்போது கொஞ்சம் தான் புரியாத மாதிரி இருந்தது... மதனோட விளக்கத்தை கேட்ட அப்புறம் சுத்தமா ஒன்னும் புரியல :-)

பாலகுமார் said...

//இந்த பதிவின் baseline முரண்பாடுகள் பற்றியது ......//

சார், நீங்க Scientist தான், அதுக்காக கதையைக் கூட பிரிச்சு மேஞ்சு ஆராய்ச்சி பண்றதா ?

anyhow, novel explanation ...

madhan said...

//Deepa said...
மதனோட விளக்கத்தை கேட்ட அப்புறம் சுத்தமா ஒன்னும் புரியல :-) //

நன்று என் நோக்கம் நிறைவேறியது.....:)
(ச்சே ச்சே கொஞ்சம் philosophy பேச உட மாட்டேன்றாங்கப்பா ...)

//பாலகுமார் said...
சார், நீங்க Scientist தான்,....//

அட அப்பாவிகளா , இத்தன நாளும் இப்படி தான் நெனச்சுட்டு இருக்கீங்களா !!!.....ஹய்யோ...ஹய்யோ .....

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்