உயிர் - 2


" ஹே என்னடா மச்சான் accident ஆயிரிச்சுன்னு இவ்வளவு சாதரணமா சொல்றே. எங்க இருக்கே இப்போ ? என்ன ஆச்சு சொல்லு, நான் உடனே வரேன். " என்று குரு பதறினான். " அவ்ளோ எல்லாம் பயப்பட தேவை இல்லை டா. பைக்கை சர்வீஸ் விட்டிருந்தேன்ல அதை எடுக்க போனேன், வர வழியில ஒரு நாய் உள்ள விழுந்திடிச்சி. கீழ விழுந்துட்டேன்.ஷாக்ல கையை கீழ வைக்கலை டா, நேரா மண்டைல அடி பட்டிருச்சி. ஆனா ஒரு கீறல் கூட இல்லை. இருந்தாலும் மண்டைல அடிபட்டதால உடனே நானே 108 கால் பண்ணிட்டேன் டா. இப்போ ஷர்மா பிரைவேட் ஆஸ்பத்திரியில இருக்கேன்." என்றான்.

"ஆமா நீ ஹெல்மட் போடாம உங்க அப்பார்ட்மென்ட் கேட்ட்டுக்கு உள்ளே கூட வண்டி ஓட்ட மாட்டியே , எப்படி டா தலையில அடிபட்டுச்சு? " என்றான் குரு.. "டேய் பஸ்ல போனதால காலையில கூட்டமா இருக்கும்னு அதை எடுத்துட்டு போகலை டா" என்றான் ஜான்.

" சரி இப்போ எப்படி டா இருக்கே..ஒண்ணும் பிரச்சனை இல்லியே? நான் வரட்டா"என்று குரு கேட்டான். " நீ வரலாம் வேண்டாம், என் மேனேஜர் கிட்ட சொல்லிடு , அவரு மீட்டிங்க்ல இருக்காருன்னு நினைக்கிறேன், போன் எடுக்க மாட்டேன்றாரு. நான் மதியம் வருவேன்னு சொல்லிடு..இங்க ஒரு ஸ்கேன் எடுத்து பாத்துருவோம், பயப்படறதுக்கு ஒண்ணும் இல்லைனு சொல்லிட்டாங்க. ஸ்கேன் ரிப்போர்ட் பாத்துட்டு நான் ஆபீஸ் வந்துடுவேன். " என்றான். " டேய் இன்னிக்கு ரெஸ்ட் எடு , தலைல வேற அடி பட்டுருகுனு சொல்றே, பேசாம இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வா, உங்க மேனேஜர் கிட்ட நான் சொல்லிகிறேன்.பேசாம வீட்டுக்கு போ அங்க இருந்து " என்று திட்டி விட்டு போன்ஐ அணைத்தான்.

நேராக அவனுடைய மேனேஜர் சீட்டுக்கு போனான். மேனேஜர் பக்கத்துக்கு சீட் பெண்ணிடம் கடலை போட்டு கொண்டு இருந்தார். " ஹே ஷஷான்க் how r u? " என்றான் குரு. சிறிது நேரம் அவனிடம் பேசி விட்டு விஷயத்தை சொல்லி விட்டு வந்தான். ஷஷான்க் சொன்னான்" thank god u reminded me.. I have put my mobile in silent mode when i was in the meeting, gotto change it" என்று சொல்லி விட்டு போன் ஐ எடுத்து குடைய ஆரம்பித்தான். அவனுக்கு ஒரு bye சொல்லி விட்டு தன சீட்டுக்கு வந்து வேலையை தொடர்ந்தான்.

குருவின் மேனேஜர் அமர் மிகவும் மென்மையான பழகுவதற்கு இனிமையான நபர். அமர் தொலை பேசியில் அழைத்து எதோ ஒரு code அன்று மாலைக்குள் டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறினான். குரு அந்த code ஐ தான் நோண்டி கொண்டிருந்தான். நல்ல நேரத்துக்கு சீக்கிரமே சரியானது. அப்பாடா என்று சாயுங்காலம் கொடுக்க வேண்டிய code ஐ மதியமே கொடுத்து விட்டு அமரிடம் ஒரு சின்ன பாராட்டுதலை பெற்று விட்டு வந்து பக்கத்துக்கு சீட் சேதுவிடம் பேசி கொண்டிருந்தான். சேது 10 நாட்களாக bench இல் இருக்கிறான். அதனால் அவனுக்கு பேச ஆள் கிடைத்ததால் அப்பாடா என்று கதை அளந்து கொண்டிருந்தான்.

பின்னர் தனது சிஸ்டத்தில் head phone மாட்டி பாடு கொண்டிருந்தான். மணி பார்த்தான், 12:30. அவனது மூட் நன்றாக இருந்த்தது. சாயுங்காலம் வரை ஆகும் என்று நினைத்த வேலை சீக்கிரமே முடிந்து விட்டதால் சந்தோஷமாக இருந்தான். ஜானுக்கு ஒரு போன் செய்தான். " டேய் ஸ்கான்ல ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாங்க டா, ஆனா head injury ன்றதால இன்னிக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைக்கு போக சொல்லிருக்காங்க டா." என்றான். "டேய் நான் evening வரேண்டா உன்னை பார்க்க" என்று குரு கூறினான்.

பைக்கை ஸ்டார்ட் செய்து மதிய இடைவெளியில் வீட்டுக்கு சாப்பிட கிளம்பினான். அம்மா சமையல் மணம் காரிடாரிலே மணந்தது. " onsite பத்தி ஏதும் சொன்னங்களா டா " என்று அம்மா கேட்டார்கள். " சாப்பிட்டு கொண்டே "இன்னும் ஒண்ணும் தெரியலமா" என்றான். டேய் நம்ப ஊர் பக்கமா ஒரு alliance வந்திருக்கு. ஜாதகம் எல்லாம் பொருத்தம் இருக்கு , பேசட்டுமா என்று அப்பா கேட்டார். "அப்பா நான் onsite போயிடு வந்து ஒரு flat வங்கினப்புரம் தான் கல்யாணம் பண்ணனும்னு யோசிச்சிருக்கேன்" என்றான். "அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்" இது அம்மா.

"எங்களால இந்த சென்னைல காலம் தள்ள முடியலே. நீ சாப்பாட்டுக்கு கஷ்டப்படுரிஎன்னு தான் வந்து இருக்கோம். இங்க ஊர்ல இருந்த மாதிரி இல்லடா..ஒரு நல்லது பொல்லதுகு போக முடியலே.. அபார்ட்மென்ட் வாழ்க்கை எல்லாம் ஒத்து வராதுடா எங்களுக்கு. அங்க அவளவ்வு பெரிய வீட்டை விட்டுட்டு இங்க வந்து இருக்கறது கஷ்டமா இருக்கு பா. அப்பாவுக்கும் வீடுகுள்ளியே இருந்து நேரம் போக மாட்டேங்குது. உன்னை தனிய விடவும் மனசு வர மாட்டேங்குது.' சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணினா எல்லா பிரச்சனையும் solve ஆயிடும்." என்றார் அம்மா.

" அம்மா அம்மா... எனக்கு புரியுது மா.. நீங்க 2 பேரும் ஒரு 10 நாள் அக்கா வீட்டுக்கு போயிடு வாங்க. அங்க குட்டீஸ் கூட இருந்தா 2 பேருக்கும் நல்லா இருக்கும். இன்னிக்கு டிக்கெட் availability பாத்து புக் பண்ணிறேன். அப்புறமா அங்க இருந்து ஒரு 10 days ஊருக்கு போய்ட்டு வாங்க.. எங்க உங்களுக்கு நல்லா இருக்கோ அங்க இருங்கம்மா. i will be fine."என்றான்.

மறுபடியும் ஆபீஸ் போய் விட்டு அன்றைய வேலைகளை முடித்து விட்டு அம்மாவுக்கு அப்பாவுக்கும் journey tickets புக் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டான். பின்னர் ஆபீஸ் ஐ விட்டு கிளம்பி நேராக ஷர்மா ஆஸ்பத்திரி சென்றான். அங்கே reception இல் ஜான் பேஷன்ட் பேரு என்றான். " அந்த பெண் சலனமே இல்லாமல் "இப்போ ICU கொண்டு போக போறாங்க " என்றாள்.


- உயிர் வளரும்
ஆர்த்தி


3 comments:

Balakumar Vijayaraman said...

நல்ல எழுத்து நடை, எளிய வர்ணனை.

வாழ்த்துகள்.

Sakthidevi.I said...

kadaisila suspence a mudichurukeenga..nice...nice flow..congrats..

Anonymous said...

கதையின் திருப்பங்களை அனுமானிக்க முடியவில்லை ...Interesting....

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்