உயிர் - 3

உயிர் - 3

" என்ன மேடம் ICU எதுக்காக காலைல எல்லாம் எங்கிட்ட நல்ல தான பேசிட்டு இருந்தான் " என்றான் குரு ரிசப்ஷன் பெண்ணிடம். அவள் சலனமே இல்லாமல்" அதை நீங்க டாக்டரிடம் தான் கேட்க வேண்டும் " என்றாள்.ஜானின் ரூமுக்கு விரைந்து சென்றான் . அங்கு உள்ளே டாக்டர்ஸ் செக் அப் செய்து கொண்டிருந்தார்கள். விக்னேஷுக்கும் அசோக்குகும் உடனே கால் செய்து அவர்களை வர சொன்னான் குரு. இருவரும் வேறு software கம்பனிகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஜானுடன் ஒரே வீட்டில் தங்கி இருப்பவர்கள்.



ஜானின் தாயார் அவன் கல்லூரி முடித்த வருடமே தவறி விட்டார்கள். ஜானும் அவன் தம்பியும் தான் அவன் அப்பாவிற்கு , அவனுடைய அப்பா அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர். அவனுடைய தம்பி விக்டர் சென்னையில் ஒரு பொறியியற் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்தான். ஆஸ்டலில் இருந்தான், எப்போதாவது ஜான் வீட்டுக்கு வருவான், குருவிற்கு விக்டரை அவ்வளவு பழக்கம் கிடையாது.



யோசித்து கொண்டிருக்கும் போதே ஒரு டாக்டர் வெளியே வந்தார். " சார் ஜானுக்கு என்ன ஆச்சு " என்றான் குரு பதட்டத்துடன். " நீங்க பேஷண்டுக்கு என்ன வேணும் " என்றார் டாக்டர். அவரை பார்த்தால் தமிழ் சினிமாவில் வரும் கண்ணாடி அணிந்த கெட்ட செய்தி சொல்லும் டாக்டர் போல இருந்தார். " நான் அவன் பிரண்டு சார்" என்றான் குரு. " ஒண்ணும் இல்லை சார், கொஞ்சம் அதிர்ச்சில இருக்கார் அவளவு தான். திருப்பி எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பாத்துரலாம்னு இருக்கோம் , இன்னும் கொஞ்சம் டெஸ்ட் செய்ய வேண்டி இருக்கு , டாக்டர்ஸ் supervision ல இருந்தா பெட்டெர் நு தோணுச்சு, அவ்ளோ தான் " என்றார்.

உள்ளே சென்று ஜானை பார்த்தான் , களைப்பாய் தெரிந்தான். ஆனால் உற்சாகமாக பேசினான். "ஒண்ணும் இல்லடா மச்சி, சும்மா ஒரு நாலு நாள் ஆபிசு கடில இருந்து தப்பிக்கிறதுக்கு நமக்கு உதவி பண்றாங்க அவ்ளோ தான் " என்றான் சிறிது கொண்டே. " டேய் உன் தம்பி நம்பர் சொல்லு டா " 'என்றான் குரு. " குரு வெறித்து பார்த்து கொண்டிருந்தான். " பஸ்ல பொய் பைக்கை எடுத்துட்டு வர போறேன் " என்றான் சம்பந்தமே இல்லாமல். குருவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் விக்னேஷும் அசோக்கும் வந்தார்கள். " என்னடா அரசியல் வாதி மாதிரி ஆஸ்பத்திரில வந்து படுத்து கிட்ட மச்சி " என்றான் விக்னேஷ்.



" இந்த நாய் பயங்காட்டிருச்சா அதுக்குள்ளே" என்றான் குருவை பார்த்து. டேய் இவன் பைக் பஸ்னு உளற ஆரம்பிச்சுதாண்ட அதான் பயந்துட்டேன் " என்றான். " நான் அப்படியா சொன்னேன் என்றான் குழப்பமாக. அதற்குள் விக்னேஷ் விக்டருக்கு கால் செய்து விஷயத்தை சொன்னான். ரெண்டு வார்டு பாய்ஸ் வந்து "சார் வீல் சேரில் உக்காந்துகுங்க " என்றார்கள் .

" டேய் மாமனார் வீடு போற என்னை எல்லாரும் ஜோரா வாழ்த்தி அனுப்புங்கடா " என்று சிரித்தான். மற்ற மூவரும் " திருந்தவே மாட்டயாட" என்றார்கள்.அவன் சென்ற சிறிது நேரத்தில் விக்டர் வந்தான் . அவனிடம் விஷயத்தை சொன்னார்கள். சிறிது நேரம் உலாத்தி விட்டு மீண்டும் ICU வில் வந்து ஜானை பார்த்தார்கள். " தூக்கமா வருதுடா, நீங்க எல்லாரும் போங்க , ஒண்ணும் இல்லடா எனக்கு , காலைல போன் பண்றேன் " என்றான். " பஸ்ல போய் பைக்கை எடுத்துட்டு வரணும்டா" என்று சொல்லி விட்டு குருவை பார்த்தன். குரு " டேய் எல்லாமே உனக்கு கிண்டல் தான.. சும்மா படுத்து தூங்குடா" என்றான்.



நால்வரில் விக்டர் இரவு தங்குவது என்று முடிவானது. மற்ற மூவரும் கிளம்பினார்கள். மறுநாள் காலையில் குரு விக்டருக்கு கால் செய்தான். "அண்ணே நல்ல இருக்கான் , நைட் தூங்குனவன் இன்னும் எழும்பலை. இன்னும் கொஞ்ச நேரத்துல ஸ்கேன் டாக்டர் வந்தவுடனே ஸ்கேன் எடுத்துட்டு சொல்றோம்னு சொல்லிருக்காங்க" என்றான்.



குரு சற்றே நிம்மதியானான். ஆபிசுக்கு கிளம்பி சென்றான். மதிய இடைவேளையில் விக்னேஷ் கால் செய்தான், " டேய் ஜானுக்கு எதோ ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்களாம்டா, நான் அங்க தான் கிளம்பிட்டு இருக்கேன் , நீ வரியா என்றான்?"


- உயிர் வளரும்
ஆர்த்தி

2 comments:

Balakumar Vijayaraman said...

/" பஸ்ல பொய் பைக்கை எடுத்துட்டு வர போறேன் " என்றான் சம்பந்தமே இல்லாமல்... //

சஸ்பென்ஸ் கதையா, நல்லா இருக்கு.
சிவப்பு கலர்ல எழுதுறதுக்கு ஏதாவது குறியீடு இருக்குமோ !!!

Anonymous said...

//நீங்க பேஷண்டுக்கு என்ன வேணும் " என்றார் டாக்டர். அவரை பார்த்தால் தமிழ் சினிமாவில் வரும் கண்ணாடி அணிந்த கெட்ட செய்தி சொல்லும் டாக்டர் போல இருந்தார்.//
பயத்தை அதிகபடுத்தாதீங்கோ...

//சிவப்பு கலர்ல எழுதுறதுக்கு ஏதாவது குறியீடு இருக்குமோ !!!//
எல்லோரும் எச்சரிக்கையா படிக்கணும் என்பதற்காக இருக்கலாம்

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்