உயிர் - 4
விக்னேஷ் அசோக் குரு மூவரும் ஆபரேஷன் தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். விக்டர் உடைந்து போய் இருந்தான். அவனது அப்பாவும் வந்திருந்தார்கள். முந்திய இரவு பயணம் செய்த களைப்பையும் மீறி கண்களில் ஒரு வித வலியும் பயமும் தெரிந்தது. வெளியில் வந்த டாக்டர் ஜானின் தந்தையிடம் சென்று "sorry sir we tried our level best , ஆனா இப்போ brain death ஆயிடிச்சி , சாரி சார், " ..ஜானின் தந்தை ஒன்றும் புரியாமல் பேந்த பேந்த விழித்தார்.
"Brain death" அப்படினா என்ன டாக்டர் என்று குரு தான் முதலில் அங்கு இருந்த மௌனத்தை கலைத்தான். " மண்டைல அடிபட்டதில மூளைல ப்ளீடிங் ஆயிருக்கு. அது வீங்கி மண்டை ஓட்டை தொடர அளவுக்கு வீக்கம் ஆனவுடனே மூளைல இருந்து மத்த இடங்களுக்கு போகிற நரம்புகள் அதோட செயல்பாட்டை இழந்திருச்சி. இனி அவரு ஒரு vegetable மாதிரி தான். "
"அப்படினா அவன் கோமா ல இருக்கான்னு சொல்றீங்களா டாக்டர் " என்றான் விக்டர். " இல்லை சார் கோமா வேற இது வேற.. கோமா ல இருக்குற பேஷண்ட்ஸ் என்னிக்காவது எந்திரிக்கிற வாய்ப்பிருக்கு , ஆனா i am very sorry to say இவரு கேஸ்ல அந்த நம்பிக்கை கூட கிடையாது சார்..மூளை ஒரு தடவை அதோட செயல்பாட்டை இழந்துச்சுன்னா அது இழந்ததுதான்" . ஜானின் தந்தை சட்டென்று அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். விக்டரும் அசோக்கும் ஓடி சென்று அவரை தாங்கி பிடித்தார்கள்.
"நேத்தெல்லாம் நல்லா தான டாக்டர் பேசிட்டு இருந்தான். ICU போகும் போது கூட கிண்டல் அடிச்சுட்டே தானே போனான். நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலே சார் " என்றான் குரு. "relax sir உங்க பதட்டம் எனக்கு புரியுது , ஆனா இதை நீங்க புரிஞ்சுக்கணும். கொஞ்ச நேரம் கழிச்சு என்னை வந்து பாருங்க " என்று குருவிடம் சொல்லிவிட்டு "நர்ஸ் இவரை அந்த பெட்ல படுக்க வைங்க " என்று ஜானின் தந்தையை காட்டி விட்டு சென்றார்.
விக்டர் அழுது கொண்டு இருந்தான். விக்னேஷுக்கும் அசோக்குகும் ஒன்றும் புரியவில்லை. பேந்த பேந்த விழித்து கொண்டு இருந்தார்கள். குரு விக்டரிடம் வந்து " ஹே அதெல்லாம் ஒண்ணும் இல்லை , நீ சும்மா வொர்ரி பண்ணாதே , நான் என்ன எதுன்னு விசாரிச்சுட்டு வரேன், நீ அப்பாவை பாரு முதல்ல " என்றான்.
குரு டாக்டர் ரூமுக்கு சென்றான், " சார் இது என்ன ஏதுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.அதுக்கு முன்னாடி ஜான் உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை நு முதல சொல்லுங்க " என்றான். அவன் குரல் நடுங்கியது. கேட்க போகும் பதிலுக்கு அவன் தயாராக இல்லை என்று அந்த டாக்டருக்கு புரிந்தது. "முதல்ல நீங்க உட்காருங்க , இந்த தண்ணிய குடிங்க சார் " என்றார். தண்ணியை எடுத்து குரு குடித்தான். ஏசியிலும் முகம் வியர்த்தது குருவிற்கு.
" சார் brain death ங்கறது ஒரு irreversible condition மாதிரி, பிரைன் ல இருந்து வர சிக்னல்ஸ் கட் ஆனதல இனி எதுவும் செய்ய வாய்ப்பில்லை, நீங்க தான் அவரு family கு விஷயத்தை எடுத்து சொல்லணும் , நான் நாளைக்கு காலைல உங்களை மறுபடி சந்திச்சு பேசறேன், ஒரு விஷயம் discuss பண்ணனும் என்றார்.
உயிர் வளரும்
ஆர்த்தி
Subscribe to:
Post Comments (Atom)
- 2012
- A.R.ரகுமான்
- GCE
- maha
- mango
- MP3
- அறிமுகம்
- ஆர்த்தி
- ஆனந்தி
- ஆஸ்கார் தமிழன்
- இணையம்
- ஈழம்
- உதவி
- உயிர்
- எந்திரன் பாடல்கள்
- ஒன்னுமில்லை
- கடிதம்
- கலாச்சார மாற்றம்
- கல்லூரி
- கவிதை
- கிறுக்கனிஸம்
- குறும்படம்
- சமூகம்
- சிந்தனை
- சிவரஞ்சனி
- செய்தி
- சோலைஅழகுபுரம்
- தகவல்
- திருநெல்வேலி
- தினமணி
- தீபா
- தொழில்நுட்பம்
- நகைச்சுவை
- பகிர்வு
- புதிய 2009
- புதிய ஆண்டு 2010
- பெண் மனம்
- மகா
- மதன்
- மனித உயிர்
- மொழி தெரியாத ஊரில்
- வலையுலகம்
- வாழ்த்து
- விமர்சனம்
5 comments:
என்ன சொல்வதென்று தெரியவில்லை, கதையாக மட்டும் இருக்கட்டும் என்று மட்டும் தோன்றுகிறது. :(
ஜான் ரொம்ப பாவம் :(
//ஒரு விஷயம் discuss பண்ணனும் என்றார் //
ம்ம்ம்...என்னவாக இருக்கும்?
-மதன்
:( இப்படி பண்ணிட்டியே ஆர்த்தி
very interesting di aarthy!!!
பாஸு............
என்ன இது கொஞ்சம் கொஞ்சமா எங்கள கோமாவுக்கு கொண்டு போறீங்க.....
நல்லபடியா முடிச்சு வைங்க ப்ளீஸ்...
வாழ்க்கைல தான் எல்லாமே தப்பவே நடக்குது. கதைலயாவது நல்லபடியா நடக்கட்டும்...
உங்களை கும்பிட்டு கேட்டுக்குறேன்.........:(
Post a Comment
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.