மொழி தெரியாத ஊரில்…

வேலைக்காக ஒரு திக்குத் தெரியாத ஊருக்கு வர்றது ஒரு புது அனுபவம். வந்த புதுசுல எல்லாம் ஒரே பயமா இருக்கும். தேசிய மொழி புரியும்னாலும் ஒரு வார்த்தை பேசுறதுக்குல்ல வியர்த்து கொட்டிடும். (ஆனா, இப்பல்லாம் அதை யோசிக்குறதே இல்லை.. சொல்றத சொல்லிடுவேன், புரிஞ்சுக்க வேண்டியது அவங்க வேலைதானே… நாம எதுக்கு tension ஆகனும்)

இங்கேயும் நம்ம மக்கள் கூடவே இருந்ததால தேசிய மொழி கத்துக்க ரொம்ப try பண்ணினது இல்ல (already, நம்மலால தமிழ் செத்துட்டு இருக்குறது போதாதா.. ஹிந்தியையும் ஏன் கொலை பண்ணனும்ன்ற நல்ல எண்ணம் தான்). இங்க யாருக்கும் தமிழ் புரியாதுன்றதுனால நாங்க எல்லொரும் தூய தமிழ்லயே பேச ஆரம்பிசுட்டோம் (தூய தமிழ்ல பேசினா mallus நல்லா புரிஞ்சுப்பாங்கன்றது வேற விஷயம்). Thank u-வ கூட நன்றி-னு தான் சொல்வோம். பழக்க தோஷத்தில வீட்ல போய் நன்றி-னு சொன்னா, ஏதோ alien range-ல பாக்குறாங்க…

ஆனா, யாரையாவது கிண்டல் பண்ணனும்னா நம்ம மொழி தான் best. இப்படி கிண்டல் அடிச்சு பேசும் போது, “என்னம்மா, இப்படி பேசுறீங்க”-ன்னு பக்கத்தில இருந்து சத்தம் வந்தா அடுத்த நிமிஷம் escape தான்… இப்படி நிறைய இடத்துல மட்டினதால, ரெண்டு மூணு வார்த்தை பேசிட்டு reaction இருக்கா இல்லையானு பாத்துட்டு கிண்டல் பண்ற அளவுக்கு expertise ஆகிடுச்சு (ஆனாலும், நம்ம தமிழ் மக்கள் அநியாயத்துக்கு எல்லா இடத்திலயும் இருக்குறாங்கப்பா..)

இன்னொரு பிரச்சனை என்னனா, நம்ம வேற ஊரு மக்கள்-னு தெரிஞ்ச உடனே, rates எல்லாம் double, triple ஆகிடும். ஹிந்தி-ல numbers அவ்வளவா(??) தெரியாதுன்றதால, பேரம் பேசவும் முடியாது. ஆட்டோகாரர் 25 ரூபா கேட்டப்போ கஷ்டப்பட்டு பேரம் பேசி 35 ரூபாய்க்கு போன அனுபவமெல்லாம் உண்டு எங்களுக்கு.

ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னன்னா, யாரு திட்டினாலும் புரியாது.. அப்படித்தான், ஒரு தடவை ஒரு ஆட்டோ டிரைவர் “வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா?”-னு சிரிப்போட கேட்டார்.. நானும் அவர் என்னை “பார்த்து போம்மா”-னு சொல்றான்னு நினைச்சு, சிரிச்சுட்டே thank u சொல்லிட்டு வந்தேன். அப்புறம் எங்க ஹிந்தி மக்கள்கிட்ட போய் அதை clarify பண்ணினப்போ அவங்க சிரிச்சத நினைச்சா இப்பவும் அவமானமா இருக்குது. இன்னிக்கு வரைக்கும் என்னை பார்க்கும் போதேல்லாம் கேட்கும் முதல் கேள்வி.. அட போங்கப்பா.. அதை நான் சொல்ல வேற வேணுமா???

PS: ரொம்ப நாள் முன்னாடியே draft எழுதி வைத்து விட்டேன். தமிழ்-ல type அடிக்க அவ்வளவா வராதுன்றதால அப்படியே நின்னு போச்சு.. பாலா ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்டதால :) பாவம்னு upload பண்ணிட்டேன்.
Next Time ஆங்கில வார்த்தைகள் குறைக்க try பண்றேன்.. தமிழ்-ல அடிச்சு அடிச்சு இப்பவே கண்ணை கட்டுதே…

31 comments:

Deepa said...

நங்களும் blogger ஆகிட்டோம்ல.... :)

Balakumar Vijayaraman said...

ம்ம்ம், கலக்குங்க... ச்ச, சொன்ன வார்த்தைக்கு இவ்வளவு மரியாதையா, இத்தனை நாளா தெரியாம போச்சே...

Aarthi DayaShankar said...

welcome back deepa...monotonous a poiu irunthu blogla unnoda padaipu oru athi poo..thank u so much...

Deepa said...

ஆர்த்தி,
நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துக்கு கரக்டா வந்துடுவேன்.. :) :)

isakki said...

vara vara naatula romba competition jaasthiyaa pochuthu.!!! cha cha!!! naan ethanai vishayathukkuthaan kavalaipad mmmmm!!!
intha balakku vaelai polappae kidaiyaathaa?
mmmmmmm!!! romba nalla irukkuthu deepa .athuthaan orae stomach burningayaa irukkuthu

Deepa said...

thanks maha,
unga level-ku ellam engalaala ezhudha mudiyuma?? edho unga blogs-a padichu padichu konjam kaththuttu irukken :) (eppadi ellam makkala emaaththa vendiyatha pochu....)

Anonymous said...

//ஆட்டோகாரர் 25 ரூபா கேட்டப்போ கஷ்டப்பட்டு பேரம் பேசி 35 ரூபாய்க்கு போன அனுபவமெல்லாம் உண்டு எங்களுக்கு.//

சூப்பர் மேட்டர் !

இந்த "மொழி" தகிட தத்ததால பெங்களூர்-ல நாங்க படுற பாடு இருக்கே.... " நிம்கு கொத்தில்லா " ....ஹய்யோ ஹய்யோ....

-மதன்

தீபா said...

அதை ஏன் கேக்குறீங்க... பெங்களூர் experience வச்சு ஒரு புக்-கே போடலாம்... ஆனா, ஹிந்தி கொஞ்சம் காப்பாத்திச்சு அங்கே...

Ahamed irshad said...

சென்னையை விட்டு தாண்டிட்டாலே ஹிந்தி கண்டிப்பா வேனும்..

தீபா said...

அட அஹமது சார்,

இங்க எப்படி?? நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.. கமெண்ட்டுக்கு ரொம்ப நன்றிங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

//நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வர வேண்டிய நேரத்துக்கு கரக்டா வந்துடுவேன்.. :) :)//

நாங்களும் தான்.. அருண்!! என்னா மச்சி சொல்ற... :))

அருண் பிரசாத் said...

//நாங்களும் தான்.. அருண்!! என்னா மச்சி சொல்ற... :))//

ஹி ஹி ஹி... கரெக்ட் மச்சி, தேடி வந்தோம்ல....

நீங்களும் Blogger தான்னு நாங்க சொல்லனும்

அருண் பிரசாத் said...

//வேலைக்காக ஒரு திக்குத் தெரியாத ஊருக்கு வர்றது ஒரு புது அனுபவம்.//
வேலை செய்யறாங்கலாமாம்.... நம்பிட்டோம்

TERROR-PANDIYAN(VAS) said...

//வந்த புதுசுல எல்லாம் ஒரே பயமா இருக்கும்.//

பட்டிகாடு முட்டாய் கடைய முறச்சி பார்த்த மாதிரியா :)

அருண் பிரசாத் said...

//தேசிய மொழி புரியும்னாலும் ஒரு வார்த்தை பேசுறதுக்குல்ல வியர்த்து கொட்டிடும்.//

தேசிய மொழி.... “அம்மா, தாயே” தான?!

TERROR-PANDIYAN(VAS) said...

//இங்கேயும் நம்ம மக்கள் கூடவே இருந்ததால தேசிய மொழி கத்துக்க ரொம்ப try பண்ணினது இல்ல//

வரலைனு சொல்லுங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

//இங்க யாருக்கும் தமிழ் புரியாதுன்றதுனால நாங்க எல்லொரும் தூய தமிழ்லயே பேச ஆரம்பிசுட்டோம்//

ஏய் கயித! இங்க வாம்மே இப்படியாங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

//பழக்க தோஷத்தில வீட்ல போய் நன்றி-னு சொன்னா, ஏதோ alien range-ல பாக்குறாங்க…//

எப்பவும் அப்படிதான பார்ப்பாங்க.. இது என்ன புதுசா சொல்றிங்க.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஆட்டோகாரர் 25 ரூபா கேட்டப்போ கஷ்டப்பட்டு பேரம் பேசி 35 ரூபாய்க்கு போன அனுபவமெல்லாம் உண்டு எங்களுக்கு.//

மச்சி!! இதுக்கு என்கிட்ட ஒரே ஒரு டைலாக் தான் இருக்கு. நான் சொல்ல விருப்படவில்லை. நீயே சொல்லிடு... :))

அருண் பிரசாத் said...

//ஆனா, இப்பல்லாம் அதை யோசிக்குறதே இல்லை.. சொல்றத சொல்லிடுவேன், புரிஞ்சுக்க வேண்டியது அவங்க வேலைதானே… நாம எதுக்கு tension ஆகனும்)//
அதான, உங்க போஸ்ட் மாதிரி... ஏதோ கிறுக்க வேண்டியது... படிக்கறவன் என்ன ஆனா நமக்கு என்ன?

TERROR-PANDIYAN(VAS) said...

//தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்//

கண்டிப்பாங்க. நீங்க இவ்வளவு ஆர்வமா கேட்டு சொல்லாம போவமா... லைன் By லைன் படிக்கிறோம்... :)

அருண் பிரசாத் said...

//ஆனா, யாரையாவது கிண்டல் பண்ணனும்னா நம்ம மொழி தான் best//
பார்டா கிண்டல் பண்ணலாம் தெரியுமாம்... சொல்லிட்டாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

//என்னை பார்க்கும் போதேல்லாம் கேட்கும் முதல் கேள்வி.. அட போங்கப்பா.. அதை நான் சொல்ல வேற வேணுமா???//

வீட்டுல சொல்லிட்டு வந்துட்டிங்களா.... :))

அருண் பிரசாத் said...

//இன்னொரு பிரச்சனை என்னனா, நம்ம வேற ஊரு மக்கள்-னு தெரிஞ்ச உடனே, rates எல்லாம் double, triple ஆகிடும். //
உங்க முகத்தை பார்த்தவுடனே தெரிஞ்சி இருக்கும் போல.... இவங்க ____________னு

அருண் பிரசாத் said...

//ஆட்டோகாரர் 25 ரூபா கேட்டப்போ கஷ்டப்பட்டு பேரம் பேசி 35 ரூபாய்க்கு போன அனுபவமெல்லாம் உண்டு எங்களுக்கு.//

என்னா அறிவு என்னா அறிவு.... இதுக்கு பதில்.... வேணாம் விடுங்க.....

அருண் பிரசாத் said...

//ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னன்னா, யாரு திட்டினாலும் புரியாது.. //
புரிஞ்சா மட்டும்... கத்தி எடுத்துட்டு சண்டை போடவா போறீங்க.... விடுங்க வழ்க்கம் போல தொடைச்சி போட்டுட்டு தான போக போறீங்க

வெங்கட் said...

@ டெரர் & அருண்.,

எலேய்.. இங்கே என்னாலே பண்ணிட்டிருக்கீங்க
ரெண்டு பேரும்..??

Deepa said...

@டெரர் & அருண்

ஆளில்லாத கடையில நீங்க ரெண்டு பேரும் எதுக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க??

வெங்கட் said...

@ தீபா.,

// ஆளில்லாத கடையில நீங்க ரெண்டு
பேரும் எதுக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க?? //

டீ இல்லாத கடையில இப்ப எதுக்கு
நீங்க டீ கேட்டு வந்தீங்க..?

கருடன் said...

@தீபா

//ஆளில்லாத கடையில நீங்க ரெண்டு பேரும் எதுக்கு டீ ஆத்திட்டு இருக்கீங்க??//

ஆள் இல்லாம தான் மாட்ரேஷன் போட்ட கமெண்ட் எல்லாம் பப்ளிஷ் ஆச்சா? கீழ விழுந்து மீசைல மண்ணு ஒட்டறத பார்த்து இருக்கேன். ஆனா மண்ணை எடுத்து மீசைல ஒட்டிக்கிறவங்களை இப்போ தான் பாக்கறேன்... :)

Deepa said...

@டெரர்
இந்த கடைக்கு பல ஓனர்ங்கோ.. எங்க பெருந்தலை தான் மாடரேஷனை எல்லாம் மெயிண்டெயின் பண்ணுறது.. நாங்கெல்லாம் சும்மா அப்பப்போ வந்து டீ மட்டும் குடிச்சிட்டு மறந்திடுவோம்...

பி.கு: மீசையில் மண்ணு இருக்குதுன்ற ஒரே ரீசனுக்காக கீழ விழுந்திட்டோம்னு சொல்ல கூடாது..

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்