மலரும் நினைவுகள்

எல்லோரும் எப்பிடி இருக்கீங்க ? உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆகிபோச்சுன்னு நினைக்கிறேன். எல்லோரும் நிம்மதியா இருக்கீங்களேன்னு எனக்குக் கூட ரொம்ப கஷ்டமா இருந்தது.!!! அதுதான் இந்த"Re-entry"

அப்புறம் ஆர்த்தி ,நீ கதைய முடிக்காம விட்டா,  அப்புறம் நான் என் இஷ்டத்துக்கு எதாவது கிறுக்கி கதையை முடித்து வைப்பேன் . Be careful!!! ,
பாலா, எப்போவும் சுயநலமா சிந்திக்ககூடாது. உன் blog பத்தி மட்டும் யோசிக்காம நம்ம blog பத்தியும் கொஞ்சம் யோசிக்கணும் சாமி!!
அப்புறம் மதன் அது ஒரு தனி track .
ஏற்கனவே இருக்கிற stomach burning போதாதுன்னு இந்த தீபா வேற ,ஏன்டா எழுதனும்னு இருக்குது !!! பாவம்பா மஹா படுத்தாதீங்க ,ஆனாலும் உங்களை
விட்டா யாருகிட்ட போய் புலம்ப முடியும் என்னால, அதுனால நேரத்தை வேஸ்ட் பண்ணாம கதைக்கு வர்ரேன்.

போன monday evening , ஒரு ஏழு மணி இருக்கும் ,எங்க எதிர் வீட்டுல இருந்து ஒரே அழுகை சத்தம். என்னடான்னு போய்ப் பார்த்தா, எதிர் வீடு அம்மா அவங்க பையனைப் போட்டு அடி நொறுக்கிட்டு இருந்தாங்க. அந்த பையனோட தங்கை வர்ஷுவோட dearest friend .எனக்கு ஒரே பாவமா போச்சு. ஏங்க எதுக்கு அடிக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, "வர்ஷு அம்மா (இப்போ எல்லோரும் இப்பிடித்தான் கூப்பிடுறாங்க ,உனக்கு வயசாயிருச்சு மஹா, ம்ம்ம் ) இவன் என்ன பண்ணினான் கேளுங்க , mark sheet கொடுத்து ஒரு வாரம் ஆச்சு இன்னும் என்கிட்டே காட்டவே இல்லை மறைச்சுட்டான் ",சொல்லிகிட்டே அடிக்க ஆரம்பிச்சுடாங்க .அந்த பையன் என்ன படிக்கிறான்னு கேளுங்க
அஞ்சாவது தான் .எனக்கு சிரிப்பா வந்தது ,ஐயோ! தப்பா நினைக்காதீங்க ,மத்தவங்க கஷ்டத்தை பார்த்து சிரிக்க நான் ஒன்னும் வில்லி கிடையாது. எனக்கு flash back ஓட ஆரம்பிச்சது .

நான் எங்க வீட்டுல ஒரே புள்ளைன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.ஆனா எங்க அம்மாக்கு தமிழ்ல பிடிக்காத வார்த்தை " செல்லம் ". ம்ம்ம்ம் ........ஸ்கூல் படிக்கும்போது ஏதோ கொஞ்சம் படிப்பேன் நான் (ப்ளீஸ் ,நம்புங்கப்பா ...) First rank தவிர எது எடுத்தாலும் வீட்டுல எனக்கு திருவிழா கொண்டாடுவாங்க !!. எனக்கு இதுல எல்லாம் அந்த வயசுலயே பெரிசா நம்பிக்கை கிடையாதுன்னு சொன்னாலும் ,என்ன பண்ண ? நாய் வேஷம் போட்டா குரைச்சே ஆகணும் !!! அதுனால வேற வழியே இல்லாம படிப்பேன்.

ஒரு வாட்டி என்ன ஆச்சுன்னா , fourth rank வந்துருச்சு.
எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை ,அழுவாச்சியா வேற வந்தது . வீட்டுல சொன்னா ,செருப்பாலயே அடிப்பாங்கன்னு தெரியும் ,என்ன பண்றதுன்னு வேற தெரியலை. வீட்டுக்கு போகாம எங்கயாவது ஓடி போயிரலாமன்னு நினச்சா, ஐயோ அப்புறம் அப்பா தினமும் வாங்கிட்டு வர்ற பஜ்ஜி வடை எல்லாம் கிடைக்காதேன்னு வேற கவலை , எதையும் விட முடியலை , 'பாருங்க ஒரு புள்ளைக்கு எவ்வளவு கஷ்டம்னு !

கடைசியா உக்காந்து யோசிச்சதுல ஒரு முடிவுக்கு வந்தேன் ,பேசாம ,நாமளே sign பண்ணி progress report கொடுத்திர வேண்டியதுதான்னு முடிவு பண்ணினேன் . ஐயோ என் வயசை சொல்ல மறந்துட்டேன் இல்லை , நான் அப்போ ரெண்டாவது படிச்சுட்டு இருந்தேன். ஏழு வயசு. நான் தமிழ் medium தான் படிச்சேன். அதுனால, மூணாவது வகுப்பில இருந்து தான் english ஆனா ,எங்க அப்பா பேர் எல்லாம் எழுத தெரிஞ்சு வைச்சு இருந்தேன் (பாருங்க ,அந்த வயசுலயே புள்ளைக்கு என்ன அறிவுன்னு !)

என்ன இருந்தாலும் ,பெரியவங்க கிட்ட கேட்டுதான் ஒரு முடிவு எடுக்கனும்னு , அஞ்சாவது படிக்கிற "அக்கா " கிட்ட போய் நிலமைய சொல்லி கையெழுத்து போடச் சொல்லிக் கேட்டேன் . அந்த லூஸ் என்னவோ எங்க ஆத்தா வையும், அய்யா வையும்னு சொல்லி போட்டுத் தர மாட்டேன்னு சொல்லிருச்சு . மஹா , ஏன் அடுத்தவங்க கிட்ட போய் கெஞ்சுற ,தன கையே தனக்கு உதவின்னு என் மனசாட்சி குரல் கொடுத்துச்சு .. (ஐயோ ,புள்ள என்னமா யோசிச்சு இருக்குது பார்த்தீங்களா? ) கடைசியா நானே கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். என் மேல உள்ள அதீத நம்பிக்கைல(?) டீச்சர் வாங்கி வைச்சுட்டாங்க .

இப்பிடியே ரெண்டு வாரம் ஓடுச்சு .வீட்டுல எப்போ கேட்டலும் rank card கொடுக்கலைன்னு ரீல் ஓட்டிட்டு இருந்தேன். இதுல ஒரு கஷ்டம் என்னன்னா ,எங்க அம்மா ,அப்பா தான் பிளஸ் டூ வரை என்னை school ல கொண்டு விடுவாங்க. ஏன்னா அப்போதான் நான் பைய அவங்க கிட்ட கொடுத்துட்டு ஜாலி யா சினிமா போஸ்டர் பார்த்துட்டு வரலாம் .(இதுக்கு தனியா அடி வாங்கி இருக்கேன் அது வேற கதை) ஆனா இந்த நிலைமைல அவங்க கூட வர்றது ரொம்ப கஷ்டம்.அதுனால எங்க அம்மாவை கிளாஸ் பக்கமே வர விடாம தடுத்துருவேன் ஆனாலும் ,விதி விளையாடிருச்சு. 

நாலு மணிக்கு ஸ்கூல் விட்டவுடனே கேட் கிட்ட போய் நின்னுப்பேன். என் friends யாரும் சொல்லிறக் கூடாதுன்னு லஞ்சம் வேற ,(ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் பா !) ஒரு நாள் டீச்சர் கிட்ட பேசினதுல நேரம் ஆனது தெரியலை ,எங்க அம்மா ,என் கிளாஸ் டீச்சர் கிட்டயே rank card பத்தி விசாரிக்க, ம்ம்ம்............................. அப்புறம் என்ன நடந்து இருக்கும்னு நான் என்ன சொல்றது, எங்க வீட்டுல விளக்குமாறு,தயிர் மத்து எல்லாம் பிஞ்சு போற அளவு அடி வாங்கினேன் .ஆனா கொஞ்சம் கூட சளைக்காம, நாலாவது படிக்கும்போது இதே தப்பை பண்ணினேன்.அப்போவும் திருவிழா கொண்டாடினாங்க, இதுக்கு எல்லாம் கவலைப்பட்டா வாழ முடியுமா ,சொல்லுங்க ,மஹா வாழ்க்கைல அடிக்கடி திருவிழா வரும் ,.............

அப்பாவி புள்ள
மகா









5 comments:

Balakumar Vijayaraman said...

வர்ஷிகாவுக்கு இப்பவே நிறைய டிப்ஸ் கொடுக்குறாப்ல இருக்கு, அப்படியே சைடுல "உங்க அம்மா பாரு, எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க் தான் னு பிட்டு வேற!" :)

ஒரு ரெண்டாப்பு புள்ள போட்ட கையெழுத்தை சந்தேகப் படாம வாங்கி வச்சுக்கிட்ட உங்க டீச்சரை நினைச்சா, பாவம் தான்.

வாழ்க்கையே திருவிழா தானே, என்ஜ்ஜ்ஜ்ஜாய்ய்ய். :)

Deepa said...

மஹா, கடைசியில இருந்து First Rank தானே வாங்கினதா எங்க கிட்ட சொன்னே?? இப்போ அப்படியே ப்ளேட்-ட மாத்திட்டே?? ;)

டீச்சர்-க்கு வேண்டியது கையெழுத்து.. அதை யாரு போட்டா என்ன.. அந்த சின்ன வயசுலயே இவ்ளோ பெரிய responsiblityய எடுத்து செஞ்ச வேலைய பாராட்டாம, என்ன இது சின்ன பிள்ளைத்தனமா..

isakki said...

ராசா ,நான் திருவிழா கொண்டாடுறது இருக்கட்டும் ,நீ விமர்சனம்
எழுத மட்டும் இங்க வராதே, !! மவனே ,உன் blogla புதுசா Publish பண்றதை
பார்த்தேன் ,நடக்குறதே வேற, அப்புறும் நீ என்ன எழுதினாலும் இது பாலாவோட
சொந்த கற்பனை இல்லை ,என் கிட்ட இருந்து திருடிட்டான்னு comment
எழ்துவேன்
அப்புறும் ,Mr , நாங்க எல்லாம் எதாவது சொன்ன ஊரே நம்பும் ,டீச்சர் நம்புறதுக்கு என்ன ?

isakki said...

பாரு தீபா ,நீ புரிஞ்சுகிட்ட அளவுக்கு கூட உலகம் என்னை
புரிஞ்சுகல ,கொஞ்சம் அறிவாளியா இருந்துர கூடாது,சாமி!!
ஆனா ,நான் சொன்ன விஷயம் உன் ரெண்டாவது commentkku
மட்டும்தான்

Anonymous said...

Welcome back
//ஜாலி யா சினிமா போஸ்டர் பார்த்துட்டு வரலாம்//

நீயும் நம்ம கேஸ் தானா :)

-மதன்

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்