ஒன்னுமில்லை (அல்லது) நீங்கள் கேட்டவை!

மக்கள் எல்லாரும் நான் இங்க எழுதனும்னு ஒரே அடம், அட நான் என்னங்க வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்? இதை நினைச்சுட்டு கீபோர்டைத் தொட்டாலே தூக்கம் வந்துருது. சரி ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு மாதிரி எழுதனும்னு முடிவு செஞ்சிட்டேன். ஒரு மாதிரினா அந்த "ஒருமாதிரி" இல்ல, இது சாதா ஒரு மாதிரி. ஆனா பாருங்க முடிவா ஒன்னு முடிவு செஞ்ச பிறகு தான் என் பேச்சையே நான் கேட்க ஆரம்பிக்கிறேன். உள்ளுக்குள்ள ஆயிரத்து ரெண்டு யோசனை.

முதல்ல கதை எழுதலாம்னு ஆரம்பிச்சேன், வாயால வடை சுட்டு கதை விடுறதுன்னா, வண்டி வண்டியா சொல்லலாம். ஆனா டைப் அடிக்கனும்னு வரும் போது தான், இந்த எழுத்து தான்..... எங்கெங்கையோ இழுத்துட்டு போயிடுது. இப்போக் கூட பாருங்க, ஒரு வரி டைப் பண்ணறதுக்குள்ள, கதையோட கருவே மறந்து போயிடுச்சு, கதைக்கு அந்த கருமம் எல்லாம் எதுக்கு? சும்மா எதுனா எழுது, நாங்க வாசிக்கிறோம் என்று சொல்லும் பெருந்தன்மை உங்களுக்கு இருக்கலாம். ஆனா ஒரு படைப்புக்குண்டான தரம் இல்லாம அதை உருவாக்குவதில் ஒரு படைப்பாளியா, எனக்கு உடன்பாடில்லை. ஆகவே கதை "கட்".

சரி,  உணர்ச்சி பூர்வமா அடி வயித்துல இருந்து பட்டாம்பூச்சி, தட்டான்பூச்சி, கரப்பான்பூச்சி எல்லாம் பறக்க, சிலிர்த்துப் போகுற மாதிரி ஒரு கவிதை எழுதலாம். கவிதை எழுதுறதுல உண்மைலயே ஒரு சூட்சமம் இருக்கு, வார்த்தையை மடக்கி மடக்கிப் போட்டு ஒரு மாதிரி கொஞ்சமா டைப் பண்ணி, நிறைய இருக்குற மாதிரி பில்டப் கொடுத்துக்கலாம். இடையிடையே மானே, தேனே, பொன்மானே ன்னு எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணா போதும், சூடா ஒரு மசால் தோசை... ச்சீ, கவிதை ரெடி.

இப்போ பாருங்க, "எங்க வீட்டு நாய்க்கு நாலு நாளா காய்ச்சல். ஜுரத்துல அது முனங்குறது உன் குரலைத் தான் ஞாபகப் படுத்துது".  இது ஒரு செய்தி. இதையே கவிதையா மாத்தினா,  அப்படியே சிலிரித்து போய்ருவீங்க.

"கொஞ்சும்
நாய்க்குட்டி,
உன்னை
நினைக்க வைக்கிறது
அன்பே !"

என்ன, சிலிர்ப்பு அரிப்பு எதும் வரலியா?  சும்மா சங்கடப்படாம சொல்லுங்க. ஒரு படைப்பாளியா எனக்கு வந்த அவமானமா எல்லாம் எடுத்துக்க மாட்டேன். கவிதை என்ன சாதாரண விசயமா. எல்லாருக்கும் அதை புரிஞ்சுக்குற கொடுப்பினை வாய்க்கிறதில்லை தானே. என்ன செய்ய, நான் ஒரு மந்தகாச நிலையில் இருந்து படைக்கும் கவிதையை எல்லாராலும் புரிஞ்சுக்க முடியல! அதனால பாவம், எல்லாருக்கும் புரியுற மாதிரி வேற ஏதாவது எழுதலாம். என் கவிதைக் குழந்தையே, கொஞ்ச நேரம் குப்புறப்படுத்து தூங்கு.

ம்ம்ம், நாட்டு நடப்பு பத்தி சூடா ஏதாவது பத்தி எழுதட்டா?  "ஒருத்தருக்கு தெரிஞ்சவரோட மனைவி இன்னொருத்தனோட ஓடிப் போய்ட்டானு தன் வீட்டுல குழந்தை குட்டியோட தங்க வச்சிருக்கார் ஒரு புண்ணியவான், வந்தவன் என்னடான்னா இவர் மனைவியைக் கூட்டிட்டு 'எஸ்' ஆகிட்டான். இப்போ புண்ணியவான் இவர் குழந்தைகளோடும், அவன் குழந்தைகளோடும் திண்டாடிட்டு இருக்கார்"   

இது இன்னைக்கு படிச்ச செய்தி.  இது மாதிரி விசயங்களோட உளவியல் பார்வை, களவியில் பார்வை, கலவியல் பார்வை இப்படி எல்லாம் கலந்துகட்டி, ஒரு மாதிரி ஆராய்ச்சி கட்டுரை எழுதி, "யார் மனைவி யாரோடு", "ஓடிப் போன லேடி, கூட்டிப் போன கேடி" இப்படி ஏதாவது தலைப்பு வச்சுட்டு கடைசியா "நச்" னு ஒரு கருத்து சொல்லி பதிவு போட்டா ஹிட்ஸ் பிச்சிக்கும்னு எனக்கும் தெரியும். ஆனா பாருங்க நாம எப்பவும் தனிமனித அந்தரங்கத்துக்குள்ள இறங்குவதில்லை. என்ன சொல்ல வர்றேன்னா, " நம்ம சுதந்திரம் அடுத்தவங்களோட மூக்கு நுனி வரை........." என்ன இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? சரி விடுங்க. மேலும் "அட, இந்த மாதிரி எல்லாம் கூட பண்ணலாம் போல!"ன்னு இன்னும் நாலு பேரு கிளம்பிற போறாங்க, அதனால இந்த மாதிரி விசயத்தை எல்லாம் துவைக்கிறதோ, காயப் போடுறதோ, இல்லை ஐயன் பண்ணி வைக்கிறதோ இல்லிங்க. வேற ஏதாவது எழுதுறேன்.

சரி, நம்ம பார்வையை விசாலப்படுத்தி நாட்டு நடப்பு பத்தி எழுதட்டா? "ஆயிரத்து என்னூறு கோடி, ஒன்னரை டன் தங்கம்" எப்படிய்யா இவ்வளவையும் வீட்டுக்குள்ளயே வச்சிருந்தீங்க. படிச்சது தான் டாகட்ர்னு பெரிய படிப்பெல்லாம், ஆனா ஒலக அறிவு இல்லையே சார். நாடு கிடக்குற கிடையில இதையெல்லாம் வீட்லயேவா வச்சிக்குவாங்க, நமக்காகத் தானே எந்த கணக்கையும் வெளியே சொல்லாத, நாதாரிகள் கொண்டாடும் நம்பகமான ஸ்விஸ் பேங்க் எல்லாம் இருக்கு, அங்க கொண்டு போய் வைக்க வேண்டியது தானே! 

யாருப்பா அது, "அங்க கொண்டு போய் வச்சது போக மீதம் தான்டா இது" ன்னு சொல்றது. மன்னிச்சிக்கோங்க நமக்கு அரசியல் தெரியாது.

அப்போ நாட்டு நடப்பு வேணாம், இன்னும் பெரிய லெவல்ல உலகம், அணுஆயுதம், பிரபஞ்சம், அண்டம், கண்டம், காண்டாமிருகம் இப்படி போலாமா, என்ன வேணாமா ? வேணான்னா விடுங்க, வேற ஏதாவது எழுதுவோம். நமக்கென்ன மேட்டரா கிடைக்காது!. எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணன் இருக்கார். மேட்டருன்னு சொன்னா குதூகலம் ஆகிருவார். ஆனா நான் சொல்றது அந்த மேட்டர் இல்லை, இது வெறும் மேட்டர்.

கடந்த ஒரு மாசத்துக்கும் மேல கண்முழிச்சு, கஷ்ப்பட்டு ஒரு வழியா நிறைய போராட்டங்களுக்கும், அதைவிட நிறைய பேரங்களுக்கும் பிறகு "சென்னை" க்கு கப்பை வாங்கி கொடுத்தேன் தெரியுமா, அதைப் பத்தி எழுதுறேன். சச்சின் தான் ரொம்ப அடம் பிடிச்சாப்ல, இந்த வருடம் அவருக்குத் தான் வேணும்னு. நான் தான் சொன்னேன்,  ' இல்ல தம்பி நீ சின்ன பையன், இன்னும் வயசிருக்கு. ஒரு பத்து பதினஞ்சு வருசம் கழிச்சுக் கூட வாங்கிக்கலாம், தோணி தம்பி இதை நம்பி நிறைய விளம்பர காண்ட்ராக்ட் எடுத்துட்டாப்ல. அதனால அவருக்கே கொடுத்துறலாம் " னு . ஆனா பாருங்க முதல்ல நான் கங்குலி தம்பிக்குத் தான் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவரு பிடிவாதக்காரர்யா, "நீங்க சும்மா கொடுத்தாலும் வேணாம். மக்கள் எங்க மேல வச்சிருக்குற நம்பிக்கைய வீணடிக்க மாட்டோம், வெறுங்கையோட போறது தான் எங்களுக்கு பெருமை"னுட்டாரு.  ஆனா அதைப் பத்தி எழுதுறதுலயும் ஒரு சிக்கல், நான் இன்னும் ஆறேமுக்கால் வருசத்துக்கு இதைப் பத்தி பேசவோ, எழுதவோ கூடாது. ஏன்னா ஏலம் எடுக்கும் போது அப்படித்தானே அக்ரிமெண்ட் போட்டுருக்கு.


சரி, இது எதுவும் வேணாம். படிக்கிறவங்களை சந்தோசப்படுத்துற மாதிரி காமெடியா ஏதாவது எழுதலாம்னு பார்த்தா, அந்த கண்றாவி ஒரு ஃப்லோவா வந்து தொலைய மாட்டுது. தப்பித் தவறி இது மாதிரி ஏதாவது முயற்சி செஞ்சா, வாசிச்சுட்டு உங்க பாட்டுக்கு சிவனேன்னு விண்டோவை க்ளோஸ் பண்ணிட்டு போயிறீங்க, ஏதாவது சொல்லிட்டுப் போனாத் தானேய்யா, என்ன நினைக்கிறீங்கன்னு தெரியும். விடுங்க! இப்ப சொல்லுங்க, நான் எதைப் பத்தி எழுதட்டும் ?


நட்புடன்,
பாலகுமார்.


12 comments:

isakki said...

அடப்பாவி ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லைன்னு ஒரு முழு பக்கத்துக்கு
எழுதி இருக்க,
"மக்கள் எல்லாரும் நான் இங்க எழுதனும்னு ஒரே அடம்"?
மஹா உனக்கு இது தேவையா ,,
"ம்மா எதுனா எழுது, நாங்க வாசிக்கிறோம் என்று சொல்லும் பெருந்தன்மை உங்களுக்கு இருக்கலாம். ஆனா ஒரு படைப்புக்குண்டான தரம் இல்லாம அதை உருவாக்குவதில் ஒரு படைப்பாளியா, எனக்கு உடன்பாடில்லை. "
துரோஹி , இதை யாரை மனசுல வைச்சுட்டு சொன்ன?
இதுக்கு ஏண்டி நீ எல்லாம் எழுதுறேன்னு ஒரு வார்த்தை நேராவே கேட்டு இருக்கலாம்
"கொஞ்சும்
நாய்க்குட்டி,
உன்னை
நினைக்க வைக்கிறது
அன்பே !"

முடியலை!!!
"இல்ல தம்பி நீ சின்ன பையன், இன்னும் வயசிருக்கு. ஒரு பத்து பதினஞ்சு வருசம் கழிச்சுக் கூட வாங்கிக்கலாம், தோணி தம்பி இதை நம்பி நிறைய விளம்பர காண்ட்ராக்ட் எடுத்துட்டாப்ல. அதனால அவருக்கே கொடுத்துறலாம் " "
சூப்பர் ,சூப்பர்
கங்குலி பத்தி பேசும்போது sharukh விட்டுட்டியே பாலா,
ஒன்னு செய், பேசாம எல்லாத்தையும் சேர்த்து எழுது. நாங்க adjust பண்ணி படிசுகிறோம்

நேசமித்ரன் said...

பாலா !!

ரைட்டு

:)

Raju said...

மந்தகாச நிலைன்னா இன்னாது..?!?

isakki said...

i am sure that u might have told ur own blog friends to see the article in our blog.ha ha
whatever it may be ,our blog is getting more visitors !!!!
maha

Deepa said...
This comment has been removed by the author.
Deepa said...

இதுக்கு நீ இங்க எழுத மாட்டேன்னு direct-aவே சொல்லியிருக்கலாம்...

//ஏதாவது சொல்லிட்டுப் போனாத் தானேய்யா, என்ன நினைக்கிறீங்கன்னு தெரியும்.//

சொல்லியாச்சு.....

Aarthi DayaShankar said...

Fantastic bala...Good humour sense....I really likes it.....

-Aarthi

Balakumar Vijayaraman said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.

@மகா:
//துரோஹி , இதை யாரை மனசுல வைச்சுட்டு சொன்ன?//
நான் என்னை சொன்னேன், என்னை மட்டும் தான் சொன்னேன் :)

வருகைக்கு நன்றி நேசமித்ரன் :)

@ராஜூ: என்னப்பா ஒரு சககவிஞரா இருந்துட்டு இதெல்லாம் கேட்கலாமா !

நன்றி தீபா.

நன்றி ஆர்த்தி.

Anonymous said...

அவன (பாலா) காலேஜ் ல பாட்டு பாட சொன்னா, "என்ன பாடுவது...என்ன பாடுவது....பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது..." என்று பாடுவான். அதான் இப்போ அதே ஸ்டைல் ல்ல ப்ளாக் லேயும் எழுதுறான். அவன நச்சரிக்காம உட்டா ஏதாவது நல்ல விதமா எதிர் பார்க்கலாம்....

-மதன்

Balakumar Vijayaraman said...

//அவன நச்சரிக்காம உட்டா ஏதாவது நல்ல விதமா எதிர் பார்க்கலாம்....//

இன்னுமாடா, இந்த ஊர் நம்ம நம்புது !!!

Unknown said...

MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது.

Anonymous said...

Appuram read panren....Bye Bala...

Post a Comment

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.

Powered By Blogger

Hits

"நட்பு வட்டாரம் " புதிய தோற்றம் எப்படி இருக்கு ?

நம்ம வட்டாரம்